‘அடடா மழ டா அட மழ டா’ மழைக்காலங்களில் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதவை – விளக்கும் மருத்துவர்!
‘அடடா மழ டா அட மழ டா’ மழைக்காலங்களில் செய்யக்கூடியது மற்றும் செய்யக்கூடாதவை குறித்து சித்த மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.

ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவ மழையும், அடை மழையும் மட்டுமல்ல, புவி வெப்பமடைதல் காரணமாக புயல் மழையும் நம்மை வதைக்கிறது. இதனால் இந்த குளிர் காலங்களில் பூமியும் குளிர்ந்து இருக்கும். நாம் பருகும் தண்ணீரும், குளிக்கும் தண்ணீரும் குளுமையாகத்தான் இருக்கும். இந்நிலையில் மழைக்காலத்தில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன என்பது குறித்து திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் கூறுகிறார். இதனை கடைபிடித்து அனைவரும் தொற்றுகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும்.
மழைக்காலத்தில் நாம் உண்ணும் எப்படியிருக்கவேண்டும்?
மழைக்காலத்தில் நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாகவும், எளிதில் செரிக்ககூடியதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கவேண்டும். அதற்கு நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில எளிய முறைகளை பின்பற்றி பலன்பெறுங்கள்.
சூடான உணவு
மழைக்காலத்தில் சமைத்த உணவை ஆறிய பின்னர் சாப்பிடக்கூடாது. இளஞ்சூடாக இருக்கும்போதே சாப்பிடவேண்டும். அப்போதுதான் அதன் சுவையும், மணமும் நன்றாக இருக்கும். சூடான உணவுதான் சாப்பிட்டவுடன் செரிக்க ஏதுவாக இருக்கும்.