Covishield: ’கோவிஷீல்ட் தடுப்பூசியால் ரத்த உறைதல் ஏற்படுமா?!’ உண்மை என்ன? யாருக்கு உண்மையான பாதிப்பு ஏற்படும்!
”ஐ.சி.எம்.ஆர் சார்பில் எடுக்கப்பட்ட ஆய்வில் தடுப்பூசி போட்டவர்களுக்கு குறைந்ததாகவும், கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிய வந்து உள்ளது”

கோவிஷீல்ட் தடுப்பூசியை போட்டவர்களுக்கு ரத்த உறைவு ஏற்பட்டு மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளதாக வெளியான செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதில் இருக்கும் பின்னணி குறித்து மருத்துவர் அருண் குமார் விளக்கி இருக்கும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதில், ”2021ஆம் ஆண்டிலேயே இது குறித்த செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன. அதாவது கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டவர்களில் 10 லட்சம் பேரில் 4 பேருக்கு TTS எனப்படும் ரத்த குழாய்களில் ரத்த உறைதல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது நமது ரத்த குழாய்களில் வெயின் மற்றும் ஆர்ட்டிரி என்ற இரண்டு வகை ரத்த குழாய்கள் உள்ளன” என மருத்துவர் அருண் குமார் கூறி உள்ளார்.
”இதயத்திற்கு ரத்தம் சப்ளை செய்யும் ஆர்ட்டிரி என்ற ரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பு உண்டாவது என்று பொருள் ஆனால் TTS எனப்படும் நோயில், வெயின் எனப்படும், மூளை, கால்கள் உள்ளிட்ட உறுப்புகளில் இருந்து இருந்து இதயத்திற்கு ரத்த குழாய்களில் DEEP VEIN THROMBOSIS, CEREBRAL VENOUS THROMBSIS போன்ற பகுதிகளில் தடுப்பூசி போட்டு 4 முதல் 28 நாட்களில் ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தீவிர தலைவலி, வாந்தி, மூச்சுத்திணறல், காலில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும். இதற்கு மாரடைப்புக்கும் சம்பந்தம் இல்லை” என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார்.