Relationship : பெண்களின் செக்ஸ் வாழ்க்கையை பாதித்த கோவிட் – 19? என்ன செய்துள்ளது பாருங்க!
Relationship : பெண்களின் செக்ஸ் வாழ்க்கையை பாதித்த கோவிட் – 19? என்ன செய்துள்ளது பாருங்க!
கோவிட் – 19 தொற்றுக்குப்பின் ஆரோக்கியத்தில் பல்வேறு குறைபாடுகளும் ஏற்பட்டுவிட்டது. பல்வேறு வியாதிகளும் அதிகரித்து வருகிறது. இதனால் பலருக்கு சுவாசக்கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இது ஒருவரின் செக்ஸ்வல் ஆரோக்கியத்தை எந்தளவுக்கு பாதித்துள்ளது என்பது குறித்து இன்னும் ஆராயப்படாமல் உள்ளது.
ஆண், பெண் இருவருக்குமே கோவிட் – 19 செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுகுறித்து விரிவான ஆய்வுகள் இன்னும் நடக்கவில்லை. ஆங்காங்கே ஓரிரு ஆய்வுகள் நடைபெற்றுள்ளது.
குறிப்பாக பெண்களில் என்ன பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியாது. செக்ஸ்வல் மெடிசன் என்ற ஆராய்ச்சி பத்திரிக்கையில் அண்மையில் வெளியான கட்டுரையில், கோவிட் – 19 தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் ஆய்வு நடத்தியது. அதில் நீண்ட நாள் கொரோனா ஏற்பட்டவர்களும் அடக்கம். தொற்று பாதிக்காதவர்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் முடிவுகள் குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
ஆண்களின் செக்ஸ்வல் இயக்கத்தை கோவிட் – 19 தொற்று பாதித்தது என அண்மை ஆய்வுகள் தெரிவித்தன. எனினும், பெண்களின் செக்ஸ் வாழ்வில் அது ஏற்படுத்திய பாதிப்புக்களை தெரிந்துகொள்வதில் ஒரு இடைவெளி ஏற்பட்டது. குறிப்பாக நீண்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது? ஆராய்ச்சியாளர்கள் இந்த இடைவெளியை குறைக்க விரும்பினார்கள். எனவே அவர்கள் பெண்களிடமும் இந்த ஆய்வை செய்தார்கள்.
வளர்ந்த 2,329 பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இவர்கள் ஆன்லைனில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதில் பாதிபேருக்கு கோவிட் – 19 இருந்தது. அதில் 25 சதவீதம் பேருக்கு நீண்ட கால கொரோனா இருந்தது. பெண்களின் செக்ஸ்வல் இயக்க குறியீட்டைப் பயன்படுத்தி, அவர்களின் செக்ஸ்வல் இயக்கங்கள் ஒப்பிட்டனர்.
அவர்கள் நீண்ட கால கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமும் ஆய்வுகள் நடத்தினர். அதிலிருந்து கோவிட் – 19 மற்றும் செக்ஸ்வல் இயக்கத்துக்கு உள்ள தொடர்பு குறித்து ஆராய்ந்தனர்.
முக்கிய கண்டுபிடிப்புகள் என்ன?
கோவிட் தொற்றால் பாதிக்கப்படாத 1,313 பேரை ஆய்வு செய்தததில் அவர்களின் செக்ஸ்வல் இயக்கம் அதிகமாக இருந்தது. கொரோனா பாதித்தவர்களுக்கு அது குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தீவிர அறிகுறிகள் இருந்தவர்கள் மற்றும் நீண்ட கால கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. நீண்ட கால கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செக்ஸ்வல் இயக்கம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மருத்துவ ரீதியிலான தாக்கங்கள்
மருத்துவம் வழங்குபவர்கள், பெண்களுடன் செக்ஸ்வல் ஆரோக்கியம் குறித்து பேசும்போது, குறிப்பாக கோவிட் பாத்தித்தவர்களிடம் பேசும்போது, நீண்ட கால கொரோனாவின் அறிகுறிகளையும் சேர்த்து ஏற்படும் பாதிப்புக்கள் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து அலசும்போது, சுகாதார ஊழியர்கள் பெண்களிடம் இதுகுறித்து விரிவாக பேசுவது அறிவுறுத்தப்பட்டது.
நல்ல உரையாடல் மற்றும் சரியான அவர்களுக்கு தேவையான மூலதனங்களை வழங்குவது அவர்களுககு எந்த பிரச்னைகளையும் எடுத்துக்கூற உதவும். செக்ஸ்வலாக இயங்குவது குறித்த பிரச்னைகள் தொடர்பாகவும் பேச உதவும்.
நாம் எந்த இடத்தில் குறைபாடுகளுடன் உள்ளோம்
இந்த ஆய்வுக்கு பெரிய அளவு மற்றும் பலதரப்பட்ட சாம்பிள்கள் எடுத்துக்கொள்ப்பட்டபோது, ஆய்வு, பெண்களை மையப்படுத்தியது. இதில் மூன்றாம் பாலினத்தவர்கள் கிடையாது. இதுகுறித்து இன்னும் ஆய்வுகள் அதிகரிக்கும்போதுதான் நாம் துல்லியமான விவரத்தை கண்டுபிடிக்க முடியும். அது பெண்களின் செக்ஸ் ஹெல்த் மேம்பட உதவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்