நல்லா உத்து பாருங்க.. இந்த சிவப்பு வட்டத்தில் ஒளிந்திருக்கும் எண்ணை பார்க்கலாம்!-அது என்னென்னு தெரியுதா?
EYE TEST: சிவப்பு வட்டத்தில் மறைக்கப்பட்ட எண் "88" என்று சிலர் கூறினாலும், மற்றவர்கள் அது "38" என்று சிலர் பகிர்ந்து கொண்டனர்.

நல்லா உத்து பாருங்க.. இந்த சிவப்பு வட்டத்தில் ஒளிந்திருக்கும் எண்ணை பார்க்கலாம்!-அது என்னென்னு தெரியுதா? (X/@@Rainmaker1973)
சிவப்பு வட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள எண் குறித்த ட்வீட் வைரலாகி வருகிறது. சிலர் "88" என்ற எண்ணைப் பார்ப்பதாகக் கூறினர், மற்றவர்கள் அது "38" என்று வாதிட்டனர். ஐந்து வினாடிகளில் எண்ணை அடையாளம் காண முடியுமா?
எக்ஸ் பயனர் மாசிமோ இந்தப் பதிவை "நீங்கள் எந்த எண்ணைப் பார்க்கிறீர்கள்?" என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். அதனுடன் பகிரப்பட்ட படத்தின் மேலே "ஐ டெஸ்ட்" என்று ஒரு உரை உள்ளது. சவால் மிகவும் எளிது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், வெள்ளை பின்னணியில் வைக்கப்பட்டுள்ள சிவப்பு புள்ளியின் உள்ளே எழுதப்பட்ட எண்ணைக் கண்டுபிடிப்பதுதான்.