இந்த அறிகுறிகள் தென்பட்டால் உஷார்..வீட்டில் வைத்தே இதய ஆரோக்கியத்தை பரிசோதனை செய்யும் எளிய டிப்ஸ்
- இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த செலவும் இல்லாமல் வீட்டிலேயே இந்த 4 சோதனைகள் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும், இதயம் ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாக்கலாம்
- இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எந்த செலவும் இல்லாமல் வீட்டிலேயே இந்த 4 சோதனைகள் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தையும், இதயம் ஆரோக்கியத்தையும் பேனி பாதுகாக்கலாம்
(1 / 7)
பல நேரங்களில் இதய நோயின் அறிகுறிகள் வெளியில் தெரியாமல் திடீரென மாரடைப்பு வரும். வீட்டிலேயே சோதனை செய்து கொள்வது நல்லது.உங்கள் இதயம் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது. நீங்கள் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ விரும்பினால், உடலின் முக்கிய உறுப்புகள் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். அந்த வகையில் முக்கிய உடல் உறுப்பாக இருக்கும் இதயத்தில், பல சமயங்களில் நமக்குத் தெரியாமல் சுமை அதிகரித்துக்கொண்டே இருக்கும். இதன் காரணமாக இதய நோய் மற்றும் மாரடைப்பு கூட ஏற்படுகிறது
(2 / 7)
இதய துடிப்பு, இதய ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்பதை கண்டறிய வருடத்துக்கு ஒருமுறை சில உடல்நலப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். நீங்கள் வீட்டிலேயே இதயத்தின் ஆரோக்கியத்தை சரிபார்க்க விரும்பினால், நீங்கள் சில சோதனைகளை முயற்சி செய்யலாம். அதில் ஒன்றாக பல்ஸ் ஆக்சிமீட்டரில் இதயத் துடிப்பைக் காணலாம்
(3 / 7)
ஆக்சிமீட்டர் இல்லாவிட்டால் இந்த முறையை பின்பற்றலாம். 10-15 நிமிடங்கள் ரிலாக்ஸாக உட்காரவும். பின்னர் உங்கள் விரலை உங்கள் நாடித்துடிப்பில் வைத்து 15 விநாடிகளுக்கு துடிப்பின் எண்ணிக்கையை எண்ணுங்கள். அதன்பின் நீங்கள் நாடித்துடிப்பாக கேட்கும் எண்ணிக்கையை 4ஆல் பெருக்கவும். இதுதான் ஒரு நிமிடத்தில் உங்கள் இதய துடிப்பாகும். இதய துடிப்பு 60 முதல் 100 வரை சாதாரணமானது. இதய துடிப்பு குறைவாக சற்று குறைவாக இருப்பது, இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும்
(4 / 7)
இரண்டாவது வழியாக இரத்த அழுத்தம் உள்ளது. உங்கள் இரத்த அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும். இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், உங்கள் தமனிகள் சேதமடையலாம். இதனால் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. 120/80 என்பது சாதாரண இரத்த அழுத்தமாகக் கருதப்படுகிறது. இயந்திரம் இல்லாவிட்டால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ளலாம்
(5 / 7)
ஸ்டெப் பரிசோதனை: நீங்கள் ஒரு படிக்கட்டில் ஏறி இறங்க வேண்டும். இந்த படிக்கட்டு சுமார் 12 அங்குலம் இருக்க வேண்டும். மூன்று நிமிடங்களுக்கு அதில் ஏறி இறங்குங்கள். இதை செய்யும்போது வேகம் சமமாக இருக்க வேண்டும். பின்னர் உடனடியாக உட்கார்ந்து உங்கள் இதயத் துடிப்பை சரிபார்க்கவும். உங்கள் இதயத் துடிப்பு வேகமாக இருக்கும். உங்கள் இதயத் துடிப்பு எவ்வளவு சீக்கிரம் இயல்பானதாக மாறுகிறதோ, அந்த அளவுக்கு உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது. உங்கள் இதயத் துடிப்பு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு நேரம் எடுத்துக் கொண்டால், நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்
(6 / 7)
வாக்கிங் டெஸ்ட்: 45 நிமிடம் நிற்காமல் விறுவிறுப்பாக நடக்க முடிந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். நடக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டால் ஆரோக்கியமாக இல்லை என்பதற்கான அறிகுறி. நெஞ்சு வலி, சோர்வு, தலைசுற்றல், மூச்சுத் திணறல் போன்றவற்றைத் தூக்கும்போது அல்லது படிக்கட்டுகளில் ஏறும்போது சந்தித்தால் மருத்துவரை அணுகவும்
மற்ற கேலரிக்கள்