பீட்ரூட் அல்வா; சரும பொலிவு, உடல் ஆரோக்கியம் என எண்ணற்ற நன்மைகளைத் தரும் ஸ்னாக்ஸ்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பீட்ரூட் அல்வா; சரும பொலிவு, உடல் ஆரோக்கியம் என எண்ணற்ற நன்மைகளைத் தரும் ஸ்னாக்ஸ்!

பீட்ரூட் அல்வா; சரும பொலிவு, உடல் ஆரோக்கியம் என எண்ணற்ற நன்மைகளைத் தரும் ஸ்னாக்ஸ்!

Priyadarshini R HT Tamil
Nov 16, 2024 03:47 PM IST

பீட்ரூட் அல்வா செய்வது எப்படி என்று பாருங்கள்.

பீட்ரூட் அல்வா; சரும பொலிவு, உடல் ஆரோக்கியம் என எண்ணற்ற நன்மைகளைத் தரும் ஸ்னாக்ஸ்!
பீட்ரூட் அல்வா; சரும பொலிவு, உடல் ஆரோக்கியம் என எண்ணற்ற நன்மைகளைத் தரும் ஸ்னாக்ஸ்!

பீட்ரூட்டின் நன்மைகள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.

புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது.

ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்.

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்திற்கு பயனுள்ளது.

ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப் போக்குகிறது.

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பீட்ரூட்டில் அல்வா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளங்கள். கேரட் அல்வாவை விட எளிதாக செய்துவிடலாம். மேலும் இதன் சுவையும் அலாதியானது.

தேவையான பொருட்கள்

நெய் – ஒரு ஸ்பூன்

முந்திரி – ஒரு கைப்பிடியளவு

திராட்சை – ஒரு கைப்பிடியளவு

பீட்ரூட் – 1 (துருவியது)

பால் – ஒரு கப்

சர்க்கரை – அரை கப்

இனிப்பு இல்லாத கோவா – 2 டேபிள் ஸ்பூன்

(இது தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)

ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை

உப்பு – ஒரு சிட்டிகை

தர்ப்பூசணி விதைகள் காய்ந்தது – சிறிதளவு

(அலங்கரிப்பதற்காக தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்)

செய்முறை

கடாயில் நெய் சேர்த்து சூடானவுடன், அதில் முந்திரி பருப்பு, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்து தனியான வைத்துவிடவேண்டும். அடுத்து அதே நெய்யில் பீட்ரூட் சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கிக்கொள்ளவேண்டும். தண்ணீர் நன்றாக வற்றியவுடன் பாலை சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். அடுத்து சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.

அடுத்து நீங்கள் சேர்க்க விரும்பினால் இனிப்பு இல்லாத கோவா சேர்த்துக்கொள்ளவேண்டும். இனிப்பு இல்லாத கோவா சேர்க்கும்போது பீட்ரூட் அல்வாவின் சுவை மிக நன்றாக இருக்கும். இனிப்பு இல்லாத கோவாவை கடையில் வாங்கிக்கொள்ளலாம் அல்லது இனிப்பு இல்லாத கோவாவை பாலை சுண்டவைத்து நீங்களே தயாரித்துக்கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் கோவாவை தயாரித்துக்கொள்ளுங்கள்.

ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய்ப் பொடி சேர்த்து இறக்கினால் சூப்பர் சுவையான பீட்ரூட் அல்வா தயார். இதில் அலங்கரிக்க கொஞ்சம் தர்ப்பூசணி விதைகளை தூவி பரிமாறலாம். உங்கள் வீட்டில் விசேஷங்கள் என்றாலோ அல்லது ஏதேனும் இனிப்பு சாப்பிட வேண்டும் விரும்பினாலோ இதை செய்து சாப்பிடலாம். பீட்ரூட் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும். எனவே இதை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும் எனவே கட்டாயம் இந்த அல்வாவை செய்து சாப்பிட்டு மகிழ்ந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.