‘புளி’ சொல்லும்போதே எச்சில் ஊறுகிறதா? உப்பில் வைத்து சாப்பிட்ட குழந்தைப்பருவம் நினைவில் வருகிறதா? என்ன நன்மைகள்?
‘புளி’ சொல்லும்போதே எச்சில் ஊறுகிறதா? உப்பில் வைத்து சாப்பிட்ட குழந்தைப்பருவம் நினைவில் வருகிறதா? அதில் என்ன நன்மைகள் உள்ளது என்று பாருங்கள்.
புளி என்று கூறும்போதே உங்களுக்கு வாயில் எச்சில் ஊறி, அதை உப்பில் வைத்து சாப்பிட்ட குழந்தைப் பருவம் நினைவில் வருகிறது என்றால், அதன் நன்மைகள் என்னவென்பதையும் நீங்கள் விரைவில் தெரிந்துகொள்ளவேண்டும். புளிப்பு சுவையானது. சாப்பிடும்போது வாய் முதல் வயிறு வரை கூசும். அந்த உணர்வு உங்கள் முகத்திலே தென்படும். புளியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அது தெரிந்தால் நீங்கள் ஆச்சர்யத்தில் மூழ்குவீர்கள். புளி, இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பழங்களுள் ஒன்று. கட்டாயம் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட ரசத்தில் தினமும் சேர்க்கப்படுகிறது. இதை நீங்கள் சட்னி, கிரேவிகளும் பயன்படுத்துகிறீர்கள். புளி சாதம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. புளி சாதமும், தேங்காய் புளித் துவையலும் நமது பாரம்பரிய சுற்றுலா உணவு ஆகும். புளியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. செரிமானத்தை தூண்டுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நீங்கள் இந்த புளிப்பும், இனிப்பும் கலந்த பழத்தை ஏன் கட்டாயமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
புளியில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்கள் பசியைக் கட்டுக்குள் வைக்கிறது. உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இதன் புளிப்புச்சுவை, உடலின் வளர்சிதையை வலுப்படுத்துகிறது. உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது. நீங்கள் அதை மிதமான அளவில் மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்.
சரும ஆரோக்கியம்
புளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சி சத்து உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. சருமத்துக்கு பளபளப்பைக் கொடுக்கிறது. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்குகிறது. வயோதிகத்தை ஏற்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.
காய்ச்சலுக்கு இயற்கை நிவாரணம்
பாரம்பரிய மருத்துவத்தில், புளி காய்ச்சலைக் குறைக்க உதவுகிறது. இதன் குளிர்ச்சித்திறன், உடலின் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. காய்ச்சல் மற்றும் சூடான வெப்பத்தில் இருந்து நிவாரணம் தருகிறது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது
புளியில் முக்கியமான வைட்டமின்கள் உள்ளது. வைட்டமின் சி போன்ற மற்ற ஊட்டச்சத்துக்கள், உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இது தொற்றுகள் மற்றும் பருவக்கால சளியை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
புளியில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைய உள்ளது. இது உங்களுக்கு ஏற்படும் வலிகளைக் குறைக்கவும் உதவுகிறது. ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்னைகளால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இது உடலில் காயத்தால் ஏற்படும் வீக்கம் மற்றும் தொற்றுக்களை குணப்படுத்துகிறது.
செரிமானத்துக்கு உதவுகிறது
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடலின் இயக்கத்தை இனிமையாக்கி, மலச்சிக்கலைத் தடுக்கிறது. இதன் இயற்கை எண்சைம்கள், உங்கள் உடலில் செரிமான சாறுகள் உற்பத்தியாக உதவுகிறது. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம்
புளியில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் உடலை ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தில் இருந்து காக்கிறது. நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தைப் போக்குகிறது. இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றையும் நீக்குகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்கிறது.
இதய ஆரோக்கியம்
புளியில் உள்ள பொட்டாசியம், ரத்த அழுத்தத்தை முறைப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள், கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் இதயத்தை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகிறது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்