சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் சூப்பர் டயட்! இன்னைக்கே ஆரம்பிக்கலாம்!
சர்க்கரை நோய் வந்த ஒருவர் நோய் வந்த பின்பு தவிர்க்க வேண்டிய உணவு, சாப்பிட வேண்டிய உணவு என கட்டுப்பாடு இருக்கிறது. இந்நிலையில் சர்க்கரை நோய் வந்தவர்களும் நாள் ஒன்றுக்கு நான்கு வேலை சாப்பிடலாம்.
சர்க்கரை நோய் என்பது உலகளவில் பெரும் ஆபத்தான நோயாக இருந்து வருகிறது. மேலும் பெரும்பாலானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் நிலையும் அதிகரித்து வருகிறது. சரியான உணவு பழக்கம் இல்லாத காரணத்தால் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சர்க்கரை நோய் வந்த ஒருவர் நோய் வந்த பின்பு தவிர்க்க வேண்டிய உணவு, சாப்பிட வேண்டிய உணவு என கட்டுப்பாடு இருக்கிறது. இந்நிலையில் சர்க்கரை நோய் வந்தவர்களும் நாள் ஒன்றுக்கு நான்கு வேலை சாப்பிடலாம்.
உங்களுக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் முன்பு போல் சாப்பிட முடியாமல் போய்விடுமோ என்று கவலைப்படுகிறீர்களா? இப்போதைய உணவுப் பழக்கத்தை சரிசெய்தாலே போதும். நீரிழிவு நோய் என்பது பல மூத்த வயதினரைத் தாக்கும் ஒரு நோயாகும். சர்க்கரை நோயாளிகள் உண்ணக்கூடிய உணவு முறைகளைப் பார்ப்போம்.
காலை உணவு
இதில் கூறப்பட்டிருக்கும் ஏதேனும் ஒரு உணவை சாப்பிடலாம். புட்டு, பட்டாணிஅல்லது கடலைப்பருப்பு இவை இரண்டும் சரிபாதி அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் 2 முதல் 4 இட்லிகள் மற்றும் அதற்கு சாம்பார், சட்னி இரண்டில் ஏதேனும் ஒன்று. மேலும் 3 தோசை மற்றும் தேங்காய் சட்னி அல்லது சாம்பார். 2 ஆப்பம் மற்றும் சுண்டல் கறி. மேலும் அதிக காய்கறிகள் போட்டு செய்யப்பட்ட உப்புமா. 1 முதல் 2 பூரி மற்றும் உருளைக்கிழங்கு கரி அல்லது காய்கறிகள் கலந்த கறி ஆகியவாய் இதில் அடங்கும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் 1 அல்லது 2 சர்க்கரை இல்லாமல் டீ குடிக்கவும்.
காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் இது ஒரு சிறிய சிற்றுண்டியாக இருக்கலாம் . பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று - வெள்ளரி சாலட், ஒரு கிண்ணம் ரஸ்க் , 1-2 ஓட்ஸ் பிஸ்கட், மேலும் மதிய உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் ஒரு சிறிய துண்டு இஞ்சி, கறிவேப்பிலை, 6 பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் கலந்த மோர் குடிக்கலாம். இது மதியம் சாப்பிடும் சாதத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் உடலில் உள்ள இரத்த கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
மதிய உணவு
மதிய உணவிற்கு வெள்ளை அரிசியைத் தவிர்த்துவிட்டு , அதற்குப் பதிலாக முழு தானிய அரிசி அல்லது மட்டா அரிசியைப் பயன்படுத்துங்கள். அரிசி மட்டும் 1-1.5 கப் செய்து சாப்பிட வேண்டும். காய்கறிகள் சேர்த்து செய்யப்பட்ட கறியின் அளவை அதிகரிக்கலாம். பருப்பு வகைகள், மீன்கள் ஆகியவற்றை பொரிக்காமல் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை 4 மணிக்கு பொரித்த தின்பண்டங்களை தவிர்த்துவிட்டு ஒரு கிரீன் டீ அல்லது பூசணிக்காய் ஜூஸ் அருந்தலாம். அதனுடன் பிரவுன் ப்ரெட் , ஓட் பிஸ்கட் இதில் ஏதேனும் ஒன்றை சாப்பிடவும்.
இரவு உணவு
இரவு நேரத்தில் 1 அல்லது 2 சப்பாத்தி/ ராகி தோசை/ கோதுமை தோசை/ ஓட்ஸ் தோசை + கலந்த காய்கறி கறி/ பாதி சமைத்த காய்கறி. பழங்களை அளவோடு சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் பழச்சாறு நல்லதல்ல. இவை அனைத்துடனும், சரியான நேரத்தையும் உடற்பயிற்சியையும் கடைப்பிடித்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்