தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  How Are Rusks Made In A Factory And Viral Clip Exposes Unhygienic Conditions

Viral: ரஸ்க் சாப்பிட இனி ரிஸ்க் எடுக்கணுமா? - வெளியான அதிர்ச்சி வீடியோ

Marimuthu M HT Tamil
Jan 07, 2024 11:00 PM IST

சமீபத்தில் வைரல் ஆன வீடியோவில் ரஸ்க் உற்பத்தி செய்யும் ஆலையில், தொழிலாளர்கள் கையுறை அல்லது தலை தொப்பி கூட அணியாமல் மாவு பிசைகின்றனர்.

ரஸ்க் சாப்பிட இனி ரிஸ்க் எடுக்கணுமா? - வெளியான அதிர்ச்சி வீடியோ
ரஸ்க் சாப்பிட இனி ரிஸ்க் எடுக்கணுமா? - வெளியான அதிர்ச்சி வீடியோ (X/@Ananth_IRAS)

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக ஆனந்த் ரூபனகுடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவில், "இது உண்மையாக இருந்தால், நான் மீண்டும் டிஃபன் சாப்பிட பயப்படுகிறேன்!" என்று பகிர்ந்துள்ளார். பின்னர், அதை அவர் நீக்கிவிட்டார். ஆனால், அவர் நீக்குவதற்குப் பின் அந்த வீடியோவில், ஒரு சுகாதாரமற்ற அறையில் உள்ள தொழிலாளர்கள் ரஸ்கு தயாரிக்கும் மாவில் எண்ணெய் மற்றும் உப்பைக் கலந்து பிசைகின்றனர். பின்னர், அதைத் தட்டுகளாகப் பிரித்து ஒரு பெரிய அடுப்பில் வைக்கின்றனர். அதன்பின், அந்த ரஸ்குகளை இரண்டு அடுப்புகலன்களுக்கு மாற்றுகின்றனர்.

அந்த ஆலையில் சுகாதாரமற்ற நிலைமைகள் காணப்படுகின்றன. தொழிலாளர்கள் கையுறைகள் மற்றும் தலை தொப்பிகளை அணியாமல் இருந்தனர். மேலும், அந்த வீடியோவில் ஒரு தொழிலாளி மாவை பிசைந்து கொண்டே பீடியைப் புகைத்துக்கொண்டே இருந்தார். 

அதுகுறித்து நெட்டிசன்கள் சிலர் கருத்துப் பதிவு செய்திருந்தனர். 

அதில் ஒருவர் கூறுகையில், "கவலைப்படாதே. வெப்பம் அனைத்து கிருமிகளையும் வைரஸ்களையும் அழித்திருக்கும்’’ என கமெண்ட் பதிவிட்டிருந்தார். மற்றொருவரோ, "அந்தப் பீடி பகுதி இறுதியானது" என்று குறிப்பிட்டார்.

இன்னொரு நெட்டிசன், "கால்களைப் பயன்படுத்தாததற்கு நன்றி" என்று பதிவிட்டிருந்தார்.

"வீட்டு உணவுதான் சிறந்தது. கன்னாட் பிளேஸில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு சமோசாவிற்குள் சிகரெட் இருந்ததை நான் தனிப்பட்ட முறையில் அனுபவித்தேன், "என்று கூறினார்.

இது குறித்து உங்கள் கருத்து என்ன?

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்