தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Deepavali Special Sweet : சருமம் பளபளக்க உதவும்! பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய இனிப்பு! வித்யாசமான தீபாவளி ரெசிபி!

Deepavali Special Sweet : சருமம் பளபளக்க உதவும்! பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய இனிப்பு! வித்யாசமான தீபாவளி ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Oct 30, 2023 09:00 AM IST

Deepavali Special Sweet : சருமம் பளபளக்க உதவும், பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய இனிப்பு, வித்யாசமான இந்த தீபாவளி ரெசிபியை செய்து கொண்டாடுங்கள்.

Deepavali Special Sweet : சருமம் பளபளக்க உதவும்! பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய இனிப்பு! வித்யாசமான தீபாவளி ரெசிபி!
Deepavali Special Sweet : சருமம் பளபளக்க உதவும்! பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய இனிப்பு! வித்யாசமான தீபாவளி ரெசிபி!

ட்ரெண்டிங் செய்திகள்

கஸ்டட் பவுடர் – அரை கப்

சர்க்கரை – முக்கால் கப்

பால் – 2 கப்

நெய் – கால் கப்

குறிப்புகள்

நீங்கள் பயன்படுத்தும் பப்பாளி நல்ல பழுத்த பழமாக இருக்கவேண்டும். இனிப்பு சுவை நிறைந்ததாக இருக்க வேண்டும். அழுகியதாக இருக்கக்கூடாது. அழுகி, சுவை மாறியிருந்தால் அது முழு அல்வாவையும் கெடுத்துவிடும்.

பப்பாளிக்கு பதில் மாம்பழம், ஆரஞ்ச், அன்னாளி பழங்களிலும் செய்யலாம். பப்பாளி உடலுக்கு சூடு கொடுக்கும் என்பதால் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் கவனமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை

பப்பாளி பழத்தின் தோல் மற்றும் விதைகளை நீக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். அதை நறுக்கி, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதை ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து, அதில் கஸ்டட் பவுடர், சர்க்கரை, பால் அனைத்தையும் சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக கலக்க வேண்டும்.

கடாயை சூடாக்கி அதில் இந்த கலவையை சேர்தத்து மிதமான தீயில் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 5 நிமிடங்களில் இந்க்கலவை கெட்டியாக துவங்கும்.

அப்போது 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, நன்றாக கலந்துவிடவேண்டும். பின்னர் கொஞ்சம், கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து பகுதியிலும் நன்றாக வேகும்.

தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அல்வா பதம் வரும் வரையும், பாத்திரத்தை விட்டு நீங்கும் வரையும் கிளறவேண்டும்.

இந்தக்கலவையை ஒரு ட்ரேவுக்கு மாற்றிவிடவேண்டும். சமப்படுத்தி, ஒரு மணி நேரம் வைத்தால் அல்வா நன்றாக செட்டாகி வரும்.

அதை உங்களுக்கு பிடித்த வடிவத்தில் கட் செய்து, டெசிக்கேடட் கோகனட்டில் பிரட்டி எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடவேண்டும்.

பெண்களின் சருமம் பளபளக்க இந்த பப்பாளி உதவுகிறது. எனவே பெண்கள் இந்த இனிப்பை தீபாவளிக்கு கட்டாயம் சாப்பிடவேண்டும். இதை சாப்பிட்டால் 70 கலோரிகள் அதிகரிக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்