Wrong Food Combinations: ‘பாலில் பேரீச்சைப் பழத்தை சாப்பிடக் கூடாதா?’ - நீங்கள் தவிர்க்க வேண்டிய 7 தவறான உணவு இணைகள்!
Wrong Food Combinations: ஆயுர்வேதத்தின்படி, இரும்புச்சத்து நிறைந்த மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை கலப்பது நல்ல யோசனையாக இருக்காது என்று ஒரு நிபுணர் எச்சரிக்கிறார். அதேபோல், நீங்கள் தவிர்க்க வேண்டிய 7 தவறான உணவு இணைகள் பற்றி அறிந்துகொள்வோம்.
Wrong Food Combinations: செரிமானப் பிரச்னைகள் மற்றும் தோல் ஒவ்வாமையால் பாதிக்கப்படுகிறீர்களா? ஆயுர்வேதத்தின் படி, நீங்கள் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, அவற்றை தவறான கலவையில் சேர்த்து சாப்பிட்டால் இந்த ஊட்டச்சத்துக்களைப் பெற முடியாமல் போகலாம். ஆயுர்வேதத்தின் படி, 'விருத்த ஆஹார்' என்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு அழிவை ஏற்படுத்தும் செரிக்கப்படாத வளர்சிதை மாற்ற கழிவுகள் குவிதலுக்கு வழிவகுப்பது தான்.
தவறான இணை உணவுகளால் உண்டாகும் பாதிப்புகள்:
சில உணவுகள் இணைந்து நன்றாக வேலை செய்கின்றன மற்றும் ஊட்டச்சத்தினை உடலில் மேம்படுத்துகின்றன. சப்பாத்தியின் மேல் நெய் தடவுவது நல்ல உணவு கலவைக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
ஆயுர்வேதத்தின்படி, பால் மற்றும் பழம் ஒன்றாக சாப்பிடக் கூடாது மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். கீரை பன்னீர் உங்களுக்கு பிடித்த உணவுகளில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், பன்னீர் கால்சியம் நிறைந்ததாக இருப்பது, கீரையில் இருந்து இரும்பு உறிஞ்சப்படுவதைத் தடுக்கும் மற்றும் உங்கள் உணவின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து சேர்க்கையையும் குறைக்கும். நீங்கள் குலாப் ஜாமூனுடன் ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பினால், உங்களுக்கு ஏன் அமிலத்தன்மை மற்றும் அஜீரணப் பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, தவறான இணை உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறான உணவு சேர்க்கைகள்
ஊட்டச்சத்து நிபுணரும் யோகா ஆசிரியருமான ஜூஹி கபூர் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில், ஆயுர்வேதத்தின்படி 7 தவறான உணவு சேர்க்கைகளைப் பகிர்ந்து கொள்கிறார். எனவே, நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறான உணவு இணைகள் பற்றி அறிந்துகொள்வோம்.
1. பழம் மற்றும் பால்: பழம் மற்றும் பால் ஆகியவற்றினை, ஒன்றாக உணவில் எடுக்கக் கூடாது என ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. ஏனெனில் இது செரிமானப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இந்த கலவையில் இருக்கும் பழம் வயிற்றில் புளிக்கக்கூடும். இது சில நபர்களுக்கு உடலில் வீக்கம் என்னும் பக்கவிளைவை உண்டு செய்துவிடும். அசௌகரியத்திற்கு வழிவகுக்கும். மாம்பழங்களுடன் மட்டுமே பால் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றது.
2. பாலக்(கீரை) மற்றும் பனீர்: கீரை மற்றும் பனீர் (இந்திய சீஸ்) இரண்டும் தனித்தனியே சத்தான உணவுகள் என்றாலும், அவற்றைச் சேர்த்து சாப்பிடக் கூடாது. பனீரில் உள்ள கால்சியம் கீரையிலிருக்கும் இரும்பை உடலில் சேரவிடாமல் தடுக்கும். இது உணவின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து நன்மைகளைக் குறைக்கிறது.
3. தேன் மற்றும் சூடான நீர்: தேனை சூடாக்குவது அதன் நன்மை பயக்கும் நொதிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை அழிக்கும் தன்மை கொண்டது. ஆகையால், இது குறைந்த சத்துள்ளதாக மாறும். கூடுதலாக, ஆயுர்வேதத்தின்படி தேனை மிகவும் சூடான நீரில் கலப்பது தீங்கு விளைவிக்கும் சேர்மங்களை உருவாக்கக்கூடும். தேனை, அதன் ஆரோக்கிய நன்மைகளைப் பாதுகாக்க வெதுவெதுப்பான அல்லது அறை வெப்பநிலை நீரில் உட்கொள்வது பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.
4. பேரீச்சை மற்றும் பால்: கால்சியம் நிறைந்த பால் உணவுகளை மற்றும் பேரீச்சை போன்ற இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளுடன் இணைக்கும்போது, கால்சியம் இரும்புச் சத்து உடலில் சேர்வதைத் தடுக்கக்கூடும் என்ற கவலை உள்ளது. பாலில் இருந்து வரும் கால்சியம் பேரீச்சைபழத்திலிருந்து வரும் இரும்பை உறிஞ்சும் தன்மை கொண்டது. இது உணவில் இருந்து ஒட்டுமொத்த இரும்பு உட்கொள்ளலைக் குறைக்கும். குறிப்பாக, உங்களுக்கு இரத்த சோகை இருந்தால், இந்த கலவை உணவானது, இரும்புச்சத்தினை உடலில் சேரவிடாது. எப்போதாவது இதனை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டாம்.
5. ஐஸ்கிரீம் மற்றும் குலாப் ஜாமூன்: சூடான மற்றும் குளிர்ந்த உணவுகள் ஒன்றோடு ஒன்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அது நன்றாக இருக்காது. நீங்கள் சூடான உணவை உட்கொள்ளும்போது, செரிமானத்திற்கு உதவும். மேலும், வெப்பத்தை உடலில் இருந்து வெளியேற்றவும் உங்கள் உடல் வயிற்றுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மாறாக, குளிர்ந்த உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி, வயிற்றில் உள்ள இரத்த நாளங்களை சுருக்கும். இந்த ஐஸ்கிரீம் மற்றும் குலாப் ஜாமூன் இணை சேர்க்கையானது, உடலில் வீக்கம், வாயு அசெளகரியத்திற்கு வழிவகுக்கும்.
6. உணவுடன் தேநீர்: தேநீரில் டானின் மற்றும் காஃபின் போன்ற ஆன்டிநியூட்ரியன்கள் உள்ளன. இது உடலில் இரும்பு மற்றும் கால்சியம் உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது. எனவே, காலை உணவு அல்லது சிற்றுண்டியுடன் தேநீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
டாபிக்ஸ்