Ceylon Sambal : சட்டுன்னு செஞ்சு பட்டுன்னு பரிமாறலாம் சிலோன் சம்பல்; அடுப்பின்றி செய்து அசத்துங்கள்!-cylone sambal make it oven free and be awesome - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ceylon Sambal : சட்டுன்னு செஞ்சு பட்டுன்னு பரிமாறலாம் சிலோன் சம்பல்; அடுப்பின்றி செய்து அசத்துங்கள்!

Ceylon Sambal : சட்டுன்னு செஞ்சு பட்டுன்னு பரிமாறலாம் சிலோன் சம்பல்; அடுப்பின்றி செய்து அசத்துங்கள்!

Priyadarshini R HT Tamil
May 18, 2024 12:32 PM IST

Cyclone Sambal : சட்டுன்னு செஞ்சு பட்டுன்னு பரிமாறலாம் சிலோன் சம்பல், அடுப்பின்றி செய்ய முடிந்த அருமையான சைட்டிஷ் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Cyclone Sambal : சட்டுன்னு செஞ்சு பட்டுன்னு பரிமாறலாம் சிலோன் சம்பல்; அடுப்பின்றி செய்து அசத்துங்கள்!
Cyclone Sambal : சட்டுன்னு செஞ்சு பட்டுன்னு பரிமாறலாம் சிலோன் சம்பல்; அடுப்பின்றி செய்து அசத்துங்கள்!

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இதை அடுப்பு இல்லாமல் நாம் எளிதாக 10 நிமிடங்களில் பட்டென்று செய்து முடித்துவிட முடியும். மேலும் இதை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட முடியும் என்று தெரிவித்தார்.

உங்களுக்கு டிபஃன் செய்துவிட்டு, சட்னி அல்லது சாம்பார் செய்ய பிடிக்காமல் இருக்கும்போது அல்லது டிபஃனுக்கு வித்யாசமாக சைட் டிஷ் வேண்டும் என்று நினைக்கும்போதும் அல்லது ஒரே மாதிரி சட்னி, சாம்பார் மட்டுமே செய்து சாப்பிட்டு போர் அடிக்கும் போதிலும் இந்த சிலோன் சம்பலை பத்து நிமிடத்தில் செய்து ருசித்துவிடுங்கள்.

இதை பொதுவாக அம்மிக்கல்லில்தான் செய்யவேண்டும். ஆனால் சின்ன உரலிலும் செய்யலாம், இரண்டுமே இல்லாமலும் செய்யமுடியம். அம்மியில் செய்யும்போது அதன் சுவை வேறலெவலில் இருக்கும்’ என்று கூறுகிறார்.

சிலோன் சம்பல் செய்ய தேவையான பொருட்கள்

துருவிய தேங்காய் – ஒரு கப்

கல் உப்பு – தேவையான அளவு

சின்ன வெங்காயம் – 10

எலுமிச்சை சாறு – உங்கள் புளிப்பு சுவைக்கு ஏற்ப

வரமிளகாய் – 2

செய்முறை

வரமிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு, உரலில் சேர்த்து கல் உப்புடன் இடித்துக்கொள்ள வேண்டும். நன்றாக நுணுங்கியவுடன், அடுத்து சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக அதையும் ஒன்றிரண்டாக இடித்துக்கொள்ளவேண்டும்.

அனைத்தையும் முக்கால் பதத்துக்கு இடித்து தேங்காய் பூவில் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும். அதில் உங்களுக்கு தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்தால் சிலோன் சம்பல் தயார். இதை டிஃபன் அல்லது சாதம் எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடுங்கள்.

இதை உரல், அம்மி எதுவுமே இல்லாமல் செய்வது எப்படி?

சின்னவெங்காயத்தை மத்தில் தட்டி வைத்துக்கொள்ள வேண்டும். வரை மிளகாய்க்கு பதில் மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தேங்காய்ப்பூவில், தட்டிய சின்ன வெங்காயம், மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக கலந்துவிட்டால் நிமிடத்தில் தயார்.

நீங்கள் விருந்து வைத்தால், துருவிய தேங்காய் கட்டாயம் இருக்கும் அல்லது மிஞ்சி விட்டால் வீணாவிடும். எனவே அப்போது இந்த சம்பலையும் செய்து அதில் ஒரு சைட் டிஷ்ஷாக பரிமாறி அசத்திவிடுங்கள். நிச்சயம் உங்கள் விருந்து சிறப்பாக இருக்கும் என்று ஒரு ஐடியாவும் கொடுக்கிறார் ஷ்யாம்.

ஸ்ரீலங்காவில் இது பரவலாக பயன்படுத்தப்படும் ஒன்றுதான். சிலோன்காரர்கள் இந்த சம்பலை பல்வேறு டிஃபன் மற்றும் சாப்பாட்டுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.

குறிப்பாக மைதாவில் தேங்காய் சேர்த்து செய்யும் ரொட்டி மற்றும் இடியாப்பம் ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள செய்வார்கள். இதை சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்கு கூட தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அட்டகாசமாக இருக்கும். எனவே இதை கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள் என்று ஷ்யாம் தெரிவித்தார்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.