காமெடியோ காமெடி; நீங்கள் சிரிசிரியென சிரிப்பா சிரிக்க இதோ மொக்க ஜோக்குகள்! மகிச்சியில் மிதக்கலாமா?
உங்களை கலகலவென சிரிக்கவைக்கும் சில ஜோக்குகள்.
ஒரு பாம்பு ரொம் நேரம் அழுதுகிட்டே இருக்காம், ஏன்?
ஏன்னா, அது எடுத்த படம் ஃப்ளாப் ஆயிடுச்சாம், ஹாஹாஹா!
எந்த வாட்ச் சரியான நேரத்த காட்டும்?
எந்த வாட்சும் காட்டாது நாமதான் பாத்துக்கணும். ஹாஹாஹா!
ஒரு யானை ரிவர் பக்கம் போச்சாம், திடீர்னு தண்ணீல விழுந்துடுச்சு, அது எப்படி வெளிய வந்திருக்கும்.
வேற எப்டி வந்திருக்கும் நனைஞ்சுதான். ஹாஹாஹா!
ஒருத்தர் மாட்டுக்கு ரோஸ் சாப்பிட கொடுத்தாராம், ஏன்?
ஏன்னா, மாடு ரோஸ் மில்க் குடுக்குமான்னு பாக்கத்தான், ஹாஹாஹா!
ஒரு பேஷன்ட் டாக்டர் கிட்ட நீங்க ஒரு பல் டாக்கரான்னு கேட்டாராம், ஏன்?
இல்லையே 32 பல்லுக்கும் நான்தான் டாக்டர் என்று சென்னாராம். ஹாஹாஹா!
எல்லா லெட்டரும் வர மாதிரி ஒரு வேர்ட் சொல்லுங்க!
ஃபோஸ்ட் ஆபிஸ், ஹாஹாஹா!
எல்லா டியூலயும் தண்ணீ வரும். ஆனா ஓரு ட்யூப்ல மட்டும் தண்ணீ வராது.
அதுதாங்க யூடிப், ஹாஹாஹா!
ஓய்வெடுக்கும் சிகரம் எது?
எவரெஸ்ட், அதுதானே எப்போதும் ஓய்வெடுக்குமாம், ஹாஹாஹா!
மேங்கோ மரத்தில் இருந்து 10 இலையம், கொய்ய மரத்தில் இருந்து 10 இலையும் கூட்டினால் என்னவரும்?
வேற என்ன குப்பதான் வரும். ஹாஹாஹா!
ஒரு டாக்டர் பேஷன்ட் கிட்ட உங்கள் கிட்னி ஃபெயில் ஆயிடுச்சுன்னு சொன்னாராம்.
அது அந்த பேஷன்ட், நான் என் கிட்னிய படிக்க வைக்கவேயில்லையே, அப்போ எப்டி அது ஃபெயிலாகும்னு கேட்டாராம். ஹாஹாஹா!
ஒரு வொயிட் கேட்டும், ப்ளாக் கேட்டும் ஒரு நாள் ரோட்டுல நடந்து போச்சாம். அப்போ அந்த வொயிட் கேட் சாக்கடையில விழுந்து ப்ளாக் ஆயிடுச்சாம். அப்போ அந்த ப்ளாக் கேட் வொயிட் கேட்ட பாத்து என்ன சொல்லியிருக்கும்?
வேற என்ன? மியாவ்தான். ஹாஹாஹா!
இரண்டு பேர் கொடை பிடிச்சு நடந்து போய்கிட்டு இருந்தாங்களாம். ஆனால் நினையவில்லையாம், எப்படி?
ஏன்னா, மழையே பெய்யலையாம். ஹாஹாஹா!
கரும்புக்கும், எறும்புக்கும் என்ன வித்யாசம்?
வேறென்ன, கரும்பு நம்ம கடிப்போம், எறும்பு நம்மள கடிக்கும். ஹாஹாஹா!
ஒரு டீச்சர் அவரோடு ஸ்டுடன்ட்கிட்ட கேக்குறார். நான் வரும்போது மட்டும் ஏன்டா கண்ணாடி போடுற?
அதுக்கு அந்த ஸ்டூடன்ட், டாக்டர் தலை வலி வரும்போது மட்டும் கண்ணாடி போடச்சொன்னார் அதான் போட்டேன்னு சொன்னானாம். ஹாஹாஹா!
ஒரு பேஷன்ட் டாக்டர் கிட்ட சொன்னாராம். 4 மாவமா இருமல் டாக்டர்ன்னு, அதுக்கு அந்த டாக்டர் அப்படியா, சும்மாவா இருந்தீங்கன்னு கேட்டாராம்.
அதுக்க அந்த பேஷன்ட் சும்மா இல்லை டாக்டர் இருமிக்கிட்டு இருந்தேன்னு சொன்னாராம். ஹாஹாஹா!
இன்றைய சிந்தனைக்கு
எடுத்து வைப்பது சிறிய அடியாக இருந்தாலும், எட்டுவது சிகரமாக இருக்கவேண்டும்.
சிரிக்க ஜோக்குகளும், சிந்திக்க சிந்தனை வரிகளும் படிச்சுட்டீங்களா? இதோ ஜோக்குன்னா என்னான்னு தெரிஞ்சுக்கங்க.
ஜோக்
ஜோக்குகள் என்றால் என்ன? ஜோக்குகள், நகைச்சுவை என்பது குறிப்பிட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட வகையில் எழுதி மக்களை சிரிக்கவைப்பது ஆகும். ஆனால் அதுபோல் எழுதும்போது அது யார் மனதையும் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது. ஜோக்குகள் கதைபோல் இருக்கலாம் அல்லது உரையாடல்களாக இருக்கலாம். முடிக்கும்போது பஞ்ச் லைன் சேர்க்கலாம். அதில் சிரிக்கக்கூடிய அம்சம் இருக்கவேண்டும். சிறிய ஜோக்குகளாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, படிக்கும்போதோ அல்லது படித்து முடித்த பின்னரோ உங்களுக்கு சிரிப்பு வரவேண்டும் அதுதான் ஜோக்குகள் எனப்படும். ஜோக் விடுகதைகளும் உள்ளன. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் கேட்டுகும்போது அவர்களின் சிந்தனைத்திறன் வளரும். ஜோக்குளின் நவீன வடிவம்தான் மீம்ஸ்கள். ஜோக்குகளை நீங்கள் கூறும்போது மற்றவர் கட்டாயம் சிரிக்கவேண்டும். ஆனால் அவர்கள் மனம் புண்படக்கூடாது.
சிந்திக்க வைக்கும் ஜோக்குகள்
சில ஜோக்குகள் சிந்தனையை தூண்டுவதாகவும் இருக்கவேண்டும். சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளிலும், சிலர் சிரிக்க மட்டுமே வைப்பார்கள். சிலர் சிரிக்கவும், சிந்திக்கும் வகையிலும் நகைச்சுவை காட்சிகளை அமைப்பார்கள். அனைத்து கலாச்சாரங்களிலும் பொழுதுபோக்கு அம்சமாக ஜோக்குகள் உள்ளது. அச்சு ஊடக காலத்தில் அதில் ஜோக்குகள் எழுதப்படும். அதற்கு முன் தெருக்கூத்துகள் மற்றும் நாடகங்கள் என்ற நமது பாரம்பரிய ஊடகங்களிலும் இடையில் பபூன் வருவார்கள். ஜோக்குகள் செய்யும் நகைச்சுவை கலைஞர்களுக்கு பபூன், ஜோக்கர் என்ற பெயர்கள் உண்டு. அவர்கள் வித்யாசமாக உடை உடுத்தியிருப்பார்கள். சர்க்கஸ்களிலும் கோமாளிகள் இருப்பார்கள். அவர்களும் நம்மை மகிழ்விப்பார்கள்.
எனவே ஜோக்ஸ் மற்றும் ஜோக்கர்கள் என்பவர்களின் வேலை நம்மை மகிழ்விப்பதாகும். அடுத்து காட்சி மற்றும் வானொலி காலத்தில் அதிலும் ஜோக்குகள் இடம்பெற்றன. தற்போது மீம்ஸ்கள் சமூக வலைதளங்கள், இணைய பக்கங்களிலும் ஜோக்ஸ்களை காட்சிகளாகவும், வார்த்தைகளாகவும் எழுதி படித்து, சிரித்து, மகிழ்ந்து நமது நகைச்சுவை உணர்வுக்கு மதிப்புக் கொடுத்துக்கொள்கிறோம்.
தொடர்புடையை செய்திகள்