“பாலா சாருக்குதான் நான் நன்றி சொல்லணும்.. நீங்க உங்க வேலைய ஒழுங்கா பார்த்தீங்கன்னா போதும்” - வேதிகா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
“நம்ம சக்சஸ் என்ன அப்படிங்கிறத நாமதான் முடிவு பண்ணனும். என்னோட பொருத்தவர சக்சஸ் அப்படிங்கிறது, எனக்கு கிடைச்ச கதாபாத்திரத்த நான் ஒழுங்கா பண்ணேனாஅப்படிங்கிறதுதான். அதுதான் எனக்கு முக்கியம்.” - வேதிகா எக்ஸ்க்ளூசிவ் பேட்டி
சினிமாவில் வாய்ப்புக்கிடைப்பது அரிதினும் அரிது என்றால், அந்த வாய்ப்பை தக்க வைத்து நம்முடைய கெரியரை அடுத்தடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது அதை விட கடினம். அதுவும் பெண்களுக்கு கடினத்திலும் கடினம். அப்படிப்பட்ட துறையில், 10 வருடங்களுக்கு மேலாக தாக்குப்பிடித்து நின்று கொண்டிருக்கிறார் நடிகை வேதிகா.
தமிழில் ‘முனி’ படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து சாந்தனுவின் ‘சக்கரக்கட்டி’, சிம்புவுடன் ‘காளை’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் புருவம் விரிய வைத்தது என்றால், அதற்கடுத்தபடியாக வெளியான காவியத்தலைவன் படத்தில் வேதிகா வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் வியக்க வைத்தது.
அதன் பின்னர் காஞ்சனா 3 - ல் நடித்தவர் தற்போது தெலுங்கில் வெளியான ஃபியர் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் ஓரளவிற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், அவருடன் உரையாடினேன்.
சினிமாவில் உங்களுக்கு இதை விட பெட்டரான இடம் கிடைச்சிருக்கணும்னு நினைச்சு இருக்கீங்களா?
இங்க நாம பெட்டரான இடத்துக்கு போறதுக்கான வாய்ப்பு எப்போதுமே இருக்கு.. இவ்வளவு வருஷம் நான் இந்த திரைத்துறையில இருந்திருக்கேன். எனக்கு பெரும்பாலும், நடிப்பை வெளிப்படுத்துற கதாபாத்திரங்கள்தான் கிடைச்சிருக்கு. எல்லா மொழியிலும் நான் நடிச்சிட்டு இருக்கேன்.
உண்மைய சொல்லணும்னா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இந்த இடத்துல, நான் நிறைய விஷயங்கள பத்தி குறை சொல்லலாம். ஆனா, நம்மக்கிட்ட என்ன இருக்கு.. நாம எவ்வளவு லக்கியா இருக்கோம். ஆடியன்ஸ் எவ்வளவு அன்பு கொடுத்து இருக்காங்க.. அதையெல்லாம் மறக்கக்கூடாது. நம்ம சக்சஸ் என்ன அப்படிங்கிறத நாமதான் முடிவு பண்ணனும். என்னோட பொருத்தவர சக்சஸ் அப்படிங்கிறது, எனக்கு கிடைச்ச கதாபாத்திரத்த நான் ஒழுங்கா பண்ணேனா அப்படிங்கிறதுதான். அதுதான் எனக்கு முக்கியம்.
ஒரு நடிகையா நாம அதுல கவனம் செலுத்துனா, விமர்சனங்கள் நல்லா வரும். ஆடியன்ஸ்கிட்ட இருந்து லவ் கிடைக்கும். என்னோட ஃபோக்கஸ் முழுக்க என்னோட வொர்க் மேலதான் இருக்கு. உங்கள நீங்க, ஃபெர்பாமன்ஸ்ல நிரூபிச்சிட்டீங்கன்னா, உங்கள நீங்க நிரூபிக்கிறதுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகிட்டே இருக்கும்.
இந்த இடத்துல நான் பாலா சாருக்கு நன்றி சொல்லணும். காரணம், எனக்கு அவர் பரதேசி படம் கொடுத்தார். அந்தப்படத்துக்கு அப்புறம்தான் காவியத்தலைவன் படம் பண்ணேன். காஞ்சானால காமெடி ரோல் பண்ணேன். வேற மொழிகள்லையும் நடிக்க வாய்ப்பு கிடைச்சிச்சு. தெலுங்குலையும் என்னோட நடிப்ப வெளிப்படுத்துற மாதிரியான ரோல்ஸ் வந்துகிட்டு இருக்கு. பாலா சார் 25 வருடங்கள சினிமா துறையில நிறைவு செஞ்சிருக்கார். ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நீங்க ஒரு நடிகரா இருந்தீங்கன்னா உங்களோட மிகப்பெரிய பலமா ஆக்டிங்கா இருக்கணும். படம் ஹிட் ஆகலாம் அல்லது ஃப்ளாப் ஆகலாம். ஆனா உங்க ஆக்டிங் ஃபவுண்டேஷன் எப்போதுமே ஸ்ராங்கா இருக்கணும். அது இருந்தாலே, நீங்க இந்த துறையில நீண்ட காலம் இருக்க முடியும். வெறுமனே கிளாமர் ரோல்ஸ் மட்டும் பண்ணிக்கிட்டு இருந்தேன்னா, என்னால இவ்வளவு காலம் இந்த சினிமா துறையில இருந்திருக்க முடியாது.
சீனியர் நடிகர்களோட நீங்க பல படங்கள்ல நடிச்சிருக்கீங்க? அது எல்லாமே அவங்க படமாதான் பார்க்கப்படும். ஃபியர் மாதிரி படங்கள்ல நீங்கதான் மையகதாபாத்திரம்.. உங்க ஷோல்டர்லதான் முழு படத்தையும் தாங்கணும். இந்த சவால் எப்படி இருக்கு?
உண்மைய சொல்லணும்னா, இரண்டு பக்கத்துல இருந்து கிடைக்கக்கூடிய கதாபாத்திரங்களுமே எனக்கு முக்கியம். ஒரு படத்துல நீங்கதான் மையக்கதாபாத்திரமா இருக்கும் போது, உங்களுக்கு பொறுப்பு ரொம்ப அதிகமா இருக்கும்.
அதே நேரம், சீனியர் நடிகர்களோடு நடிக்கும் போது, அவங்களுக்கு பொறுப்பு அதிகமா இருக்கும். காரணம், அவங்களுக்கு ஃபேன்ஸ் அதிகம். அதுக்கேத்தபடி படத்தோட ரீச்சும் பெருசா இருக்கும். அதுதான் உண்மை. இதற்கிடையில, பெர்பாமன்ஸ் பண்ற கதாபாத்திரங்களும் வருது. எனக்கு இதுவும் முக்கியம், அதுவும் முக்கியம்.
பாலா சார் ஸ்கூல் எப்படி இருந்துச்சு?
பாலா சார்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள கத்துக்கிட்டேன். குறிப்பா, ஒரு கதாபாத்திரத்துல நாம நடிக்கும் போது, அந்த கதாபாத்திரத்துக்கான லுக், அந்தக் கதாபாத்திரத்தை நாம சரியா பண்ணனும் அப்படிங்கிற எண்ணம், இது இரண்டும் ரொம்ப முக்கியம்ங்கிறத கத்துக்கிட்டேன்.
இத நீங்க கொண்டு வந்துட்டாலே, அந்த கதாபாத்திரத்திற்கான 50 சதவீத வேலை முடிஞ்சிருச்சு.. இதுதான் ஸ்கிரீன்ல மேஜிக்கா விரியும். நான் நிறைய ரோல்ஸ் பண்ணிருக்கேன்.. அந்த ரோல்ல கமிட் ஆகுறதுக்கு முன்னாடி, அந்தக் கதாபாத்திரத்துல நடிக்க முடியுமா? முடியாதுன்னு எனக்குத் தெரியாது. ஆனா, கமிட் ஆனதுக்கு அப்புறம், அந்த ரோலுக்காக என்ன வேணாலும் நான் செய்ய ரெடி.. அதற்கான தயார் படுத்துதலுக்கான எல்லை எவ்வளவு தூரம் இருந்தாலும் பராவாயில்ல.. நான் ரெடிதான்.
இப்படி நீங்க இருக்கும் போது, அந்த ரோல்ல நீங்க நல்லதான் நடிப்பீங்க.. அது நல்லதான் வரும். நீங்க உங்கள தயார் படுத்தினீங்கன்னா, நீங்க என்ன வேணாலும் சாதிக்கலாம். பாலா சார் கூட வொர்க் பண்ணும்போது, அவர் என்ன சொல்றாரோ, அதைத்தான் நாங்க பண்றோம் ; அங்க நீங்க டென்ஷன் ஆக வேண்டிய தேவையில்ல. அவரே எல்லாத்தையும் பார்த்துப்பார். காரணம், அவருக்கு என்ன வேணும்னு அவருக்கு நல்லாவே தெரியும்.
காவியத்தலைவன் பற்றி?
பரதேசி திரைப்படம் வெளியான சமயத்துல காவியத்தலைவன் படத்துக்கான காஸ்டிங் போயிட்டு இருந்தச்சு. பரதேசி படத்த பார்த்த வசந்தபாலன், அதுல என்னோட பெர்பாமன்ஸ் பார்த்துட்டு, அந்தப்படத்துல கமிட் பண்ணார். ஆனா, அதுக்கு முன்னாடியே எனக்கு காவியத்தலைவன் படத்துல நடிக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆமா, அந்தப்படம் தொடர்பான போஸ்டர்கள நான் முன்னாடியே பேப்பர்ல பார்த்து இருந்தேன். அப்பவே இந்தப்படம் நமக்கு வந்தா நல்லா இருக்குமேன்னு ஃபீல் பண்ணேன்.
அத நான் கற்பனை செஞ்சேன்னு கூட சொல்லலாம். அந்தப்படம் வாய்ப்பு கிடைச்சப்ப ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டேன். எல்லாத்தையும் மீறி, எனக்கு பரதநாட்டியம் தெரியும் அப்படிங்கிறதுக்காக, ஒரு கிளாசிக்கல் சாங்கையும் எனக்காக டீம் வச்சாங்க. எனக்கு அது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.” என்று பேசினார்.
முழு பேட்டி விரைவில்…
டாபிக்ஸ்