செட்டிநாடு பழ பாயாசம்; சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் சுவை நிறைந்தது! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  செட்டிநாடு பழ பாயாசம்; சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் சுவை நிறைந்தது! இதோ ரெசிபி!

செட்டிநாடு பழ பாயாசம்; சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் சுவை நிறைந்தது! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Dec 21, 2024 02:37 PM IST

செட்டிநாடு பழ பாயாசம் செய்வது எப்படி?

செட்டிநாடு பழ பாயாசம்; சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் சுவை நிறைந்தது! இதோ ரெசிபி!
செட்டிநாடு பழ பாயாசம்; சாப்பிட்டுக்கொண்டே இருக்கத் தூண்டும் சுவை நிறைந்தது! இதோ ரெசிபி!

கன்டென்ஸ்ட் மில்க் – கால் கப்

மாதுளை பழம் – 1 (பெரியது)

மாம்பழம் - 1 (பெரியது புளிப்பில்லாதது)

ஆப்பிள் - 1

திராட்சை – 20 (புளிப்பில்லாத, விதையில்லாத பச்சை திராட்சைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்)

வாழைப்பழம் – 1

பாதாம் – 5

பிஸ்தா – 5

ஏலக்காய் – 1

சர்க்கரை – ஒரு ஸ்பூன்

அரைக்க தேவையான பொருட்கள்

பச்சரிசி – ஒரு டேபிள் ஸ்பூன்

முந்திரி – 10

பாதாம் – 10

செய்முறை

பச்சரிசியை நன்றாக அலசி 3 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். அடுத்து முந்திரி, பாதாம் இரண்டையும் கழுவி சுத்தம் செய்து அதையும் 3 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். ஊறிய பாதாமின் தோலை நீக்கிவிடவேண்டும்.

சுத்தம் செய்த பாதாம், ஊற வைத்த முந்திரி மற்றும் பச்சரிசியை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிடவேண்டும். அதில் திராட்சைகளை சேர்த்து அலசி எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

திராட்சையை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். மாதுளையின் முத்துக்களை உதுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். ஆப்பிள் மற்றும் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும். வாழைப்பழத்தை மட்டும் பாலில் சேர்க்கும் முன்னர் வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.

முன்னரே வெட்டி வைத்துவிட்டால் வாழைப்பழத்தின் நிறம் மாறிவிடும். தனியான கொஞ்சும் பாதாம் மற்றும் பிஸ்தாக்களை எடுத்து பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் வால்நட்ஸ், ஹநசல் நட்ஸ் உள்ளிட்ட நட்ஸ்களை சேர்த்துக்கொள்ளலாம்.

மிக்ஸி ஜாரில் ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து பொடியாக அரைத்து கொள்ளவேண்டும். இவற்றையெல்லாம் முதலிலே தயாரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பாலை சேர்க்கவேண்டும். பால் நன்றாக பொங்கியதும் அடுப்பை மிதமான தீயில் வைக்கவேண்டும். அதனுடன் அரிசி மற்றும் நட்ஸ் சேர்த்து அரைத்த கலவையை சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். அதனுடன் கன்டென்ஸ்ட் மில்க் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

கடைசியாக அரைத்து வைத்த ஏலக்காய் மற்றும் சர்க்கரை பொடி சேர்த்து பால் சிறிதளவு திக்கானதும் அடுப்பை அணைக்கவேண்டும். பால் ரொம்பவும் திக்காகி விட்டால் ஆற வைக்கும் போது கெட்டியாகிவிடும்.

பால் நன்றாக ஆறியதும் நறுக்கி வைத்த பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து நன்றாக கலந்து விட்டால் செட்டிநாட்டு பழ பாயசம் தயார். இது ஒரு நல்ல டெசர்ட் ஆகும். இதை நீங்கள் விருந்துகள் பரிமாறும்போது செய்யலாம். இல்லாவிட்டால் வீட்டில் கூட பிரியாணி செய்யும்போது டெசட்டுக்கு செய்துகொள்ளலாம்.

இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் சுவைக்கத் தூண்டும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.