தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Champaran Egg Curry : பீகார் ஸ்டைல் முட்டை, உருளைக்கிழங்கு கிரேவி – எக் சம்பாரன்!

Champaran Egg Curry : பீகார் ஸ்டைல் முட்டை, உருளைக்கிழங்கு கிரேவி – எக் சம்பாரன்!

Priyadarshini R HT Tamil
Oct 31, 2023 12:00 PM IST

Champaran Egg Curry : பீகார் ஸ்டைல் முட்டை, உருளைக்கிழங்கு கிரேவி. எக் சம்பாரன், பூண்டை முழுதாக சேர்த்து செய்வது. இப்டி செஞ்சு பாருங்க செம்ம டேஸ்டா இருக்கும்.

Champaran Egg Curry : பீகார் ஸ்டைல் முட்டை, உருளைக்கிழங்கு கிரேவி – எக் சம்பாரன்!
Champaran Egg Curry : பீகார் ஸ்டைல் முட்டை, உருளைக்கிழங்கு கிரேவி – எக் சம்பாரன்!

ட்ரெண்டிங் செய்திகள்

இஞ்சி - 1 இன்ச் (இடித்தது)

பூண்டு – 2 (முழுதாக தோல் நீக்காமல் அப்படியே சேர்க்க 

வேண்டும் )

வெங்காயம் – 1 (இடித்தது)

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

கொத்தமல்லித்தூள் – 1 ஸ்பூன்

சீரகத்தூள் – 1அரை ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தயிர் – 4 ஸ்பூன்

உருளைக்கிழங்கு – 1 (தோல் சீவாமல் குட்டி சதுரங்களாக வெட்டிக்கொள்ள வேண்டும்)

எண்ணெய் – 1 ஸ்பூன்

கடுகு எண்ணெய் – 4 ஸ்பூன் (தாராமாக எண்ணெய் சேர்க்க வேண்டும்)

ஏலக்காய் – 2

பிரியாணி இலை – 1

பட்டை – 1

வேக வைத்த முட்டை – 4

பொடி செய்ய

ஜாவித்திரி – 1

சீரகம் – அரை ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

வர மல்லி – அரை ஸ்பூன்

கிராம்பு – 6

ஏலக்காய் – 2

மல்லித்தண்டு – கைப்பிடியளவு (கொத்தமல்லித்தழையின் தண்டு பகுதி)

(பொடி செய்ய கொடுத்துள்ள இந்தப்பொருட்களை மட்டும் தனியாக காய்ந்த மிக்ஸியில் பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை

பச்சை மிளகாயை கிள்ளி ஒரு அகலமான பாத்திரத்தில் போடவேண்டும். பின்னர் அதில் இடித்த இஞ்சி, முழு பூண்டு, இடித்த வெங்காயம், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு, தயிர் சேர்த்து கையால் நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

தோல் சீவாமல் குட்டி சதுரங்களாக வெட்டிய உருளைக்கிழங்கு, எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய், (தாராமாக எண்ணெய் சேர்க்க வேண்டும்), ஏலக்காய், பிரியாணி இலை, பட்டை, சேர்த்து நன்றாக கலந்து, அதில் வேகவைத்த முட்டை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, ஊறிய முட்டை கலவையை சேர்த்து நன்றாக மூடிவைத்து அரை மணி நேரம் வேக வைக்க வேண்டும். குறைவான தீயில் வேகவேண்டும். அப்போதுதான் அடிப்பிக்காது.

அரை மணிநேரத் கழித்து திறந்து பார்த்தால், சம்பாரன் தயாராகியிருக்கும். இதில் வறுத்த அந்தப்பொடியை தூவ வேண்டும். சுவையை அதிகரிக்க சிறிது கொத்தமல்லியின் தண்டுகளை தூவி மூடிவைத்துவிட்டு, பின்னர் திறந்து சிறிது மல்லித்தழை தூவவேண்டும்.

இதில் பூண்டு உடைக்காமல், உரிக்காமல் முழுதாவே பயன்படுத்தப்பட்டிருக்கும். சாப்பிடும்போது அதை எடுத்து, வெந்த பூண்டை தோல் நீக்கிவிட்டு சாப்பிட சுவை அள்ளும்.

இதை சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, உப்புமா, இடியாப்பம், பிரியாணி, பிரஞ்சி ரைஸ், புலாவ் என எதற்கு வேண்டுமானாலும் சிறந்த சைட் டிஷ் ஆகும்.

WhatsApp channel

டாபிக்ஸ்