கர்ப்பகாலத்தில் பெண்கள் சீத்தா பழம் சாப்பிடலாமா.. இதில் எவ்வளவு நன்மைகள் கொட்டி கிடக்கு பாருங்க!
சீத்தா பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் குறைக்கிறது. பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக்கும் போது, மெக்னீசியம் தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.

கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான நேரம். இந்த நேரத்தில் என்னென்ன உணவுகளை உண்ணலாம். எந்த உணவுகளை சாப்பிட்டால் என்ன நடக்கும் என பெண்கள் அனைவருக்கும் பல்வேறு கேள்விகள் உள்ளன. சீத்தாப்பழம் சீசன் நெருங்கி வருகிறது. இந்த பழங்களை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா வேண்டாமா என்ற சந்தேகம் உள்ளது. சுகாதார நிபுணர்களின் ஆலோசனைப்படி சீத்தாப்பழம்சாப்பிடலாம். இது கருவில் இருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் எப்படி பலன் தரும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
சீத்தாப்பழத்தில் உள்ள ஊட்டச் சத்துக்கள்:
கிரீமி, இனிப்பு மற்றும் ருசியான, சீத்தா பழத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதன் சத்துக்கள் கர்ப்ப காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பழத்தில் உள்ள ஃபோலேட் கருவில் எந்த குறைபாடுகளும் ஏற்படாமல் தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சருமத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வைட்டமின் பி6 மூளையின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. சீத்தாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளையும் குறைக்கிறது. பொட்டாசியம் இரத்த ஓட்டத்தை சீராக்கும் போது, மெக்னீசியம் தசைகளின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.