Cabbage Chutney : டிபஃனுக்கு எப்போதும் ஒரே மாதிரி சட்னி வேண்டாமா? இதோ முட்டைகோசில் கூட செய்யலாம்!-cabbage chutney dont want the same chutney for tiffen you can even make it with cabbage - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cabbage Chutney : டிபஃனுக்கு எப்போதும் ஒரே மாதிரி சட்னி வேண்டாமா? இதோ முட்டைகோசில் கூட செய்யலாம்!

Cabbage Chutney : டிபஃனுக்கு எப்போதும் ஒரே மாதிரி சட்னி வேண்டாமா? இதோ முட்டைகோசில் கூட செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Sep 07, 2024 04:16 PM IST

Cabbage Chutney : டிபஃனுக்கு எப்போதும் ஒரே மாதிரி சட்னி வேண்டாமா? இதோ முட்டைகோசில் கூட செய்யலாம். அனைத்து டிபஃனுக்கும் ஏற்றது.

Cabbage Chutney : டிபஃனுக்கு எப்போதும் ஒரே மாதிரி சட்னி வேண்டாமா? இதோ முட்டைகோசில் கூட செய்யலாம்!
Cabbage Chutney : டிபஃனுக்கு எப்போதும் ஒரே மாதிரி சட்னி வேண்டாமா? இதோ முட்டைகோசில் கூட செய்யலாம்!

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்

முட்டைகோஸ் – இரண்டரை கப்

பச்சை மிளகாய் – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – தேவையான அளவு

புளி – சிறிதளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 1 அல்லது 2 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

வர மிளகாய் – 2

செய்முறை

நல்லெண்ணெயை கடாயில் சேர்த்து சூடாக்கி, உளுந்து மற்றும் கடலை பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்துக்கொள்ளவேண்டும். அதிகம் இருந்தால் இவையனைத்தும் கருகிவிடும்.

பச்சை மிளகாய், உங்களின் கார அளவுக்கு ஏற்ப இதன் அளவை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். அடுத்து கறிவேப்பிலை, முட்டைகோஸ் சேர்த்து வதக்கவேண்டும்.

நீங்கள் முட்டைகோஸை வேக வைக்க விரும்பினால் வதக்குவதற்கு முன் வேக வைக்கவேண்டும். தண்ணீரை வடித்துவிட்டு வதக்கலில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும். கடாயை மூடி சிறிது நேரம் வதங்கவிடவேண்டும். அவ்வப்போது திறந்து பார்த்து அதை கிளறிவிடவேண்டும். முட்டைகோஸை வேகவைத்து சேர்த்தால் விரைவில் வதங்கிவிடும்.

வேகவைக்காமல் சேர்த்தால் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே அதற்கு ஏற்றாற்போல் கிளறவேண்டும். முட்டைகோஸ் கடாயில் ஒட்டினால் அதில் கொஞ்சம், கொஞ்சம் தண்ணீர் தெளித்து வதக்கவேண்டும.

முட்டைகோஸை முழுவதும் வேகவிடக்கூடாது. அதில் கொஞ்சம் மொறுமொறுப்பு இருக்கவேண்டும். அதை ஆறவிடவேண்டும்.

மிக்ஸியில் புளி சேர்த்து அரைக்கவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து நல்ல மையாக அரைத்துக்கொள்ளவேண்டும். மிக்ஸியில் இருந்து வேறு பாத்திரத்துக்கு சட்னியை மாற்றிக்கொள்ளவேண்டும்.

தாளிப்பு

கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் அதில் கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து பொரிந்தவுடன், அரைத்து வைத்துள்ள சட்னியில் தாளிப்பை சேர்க்கவேண்டும். அனைத்தையும் கலந்துவிட்டு பரிமாறலாம்.

சூப்பர் சுவையான முட்டைகோஸ் சட்னியை இட்லி, தோசை, ரவா இட்லி, ராகி இட்லி, வடை, உப்புமா, ஊத்தப்பம், அடை என எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இதை சாம்பார், பருப்பு, ரசம் ஆகிய சாதத்துடன் தொட்டுக்கொள்ளலாம். இதை ஃபிரிட்ஜில் ஒரு நாள் மட்டும் தான் வைக்க முடியும். கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். முட்டைகோஸ் சட்னி ஒரு வித்யாசமான சைட் டிஷ். இதை வழக்கமான சட்னிகளுக்கு பதிலாக தொட்டுக்கொண்டு சாப்பிடுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.