Breastfeeding : குழந்தைகள் தாய்ப்பால் கொடுக்கும்போது கடிக்க காரணம்.. தாய்பால் கொடுப்பதால் தாய்க்கு இவ்வளவு நன்மையா!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Breastfeeding : குழந்தைகள் தாய்ப்பால் கொடுக்கும்போது கடிக்க காரணம்.. தாய்பால் கொடுப்பதால் தாய்க்கு இவ்வளவு நன்மையா!

Breastfeeding : குழந்தைகள் தாய்ப்பால் கொடுக்கும்போது கடிக்க காரணம்.. தாய்பால் கொடுப்பதால் தாய்க்கு இவ்வளவு நன்மையா!

Pandeeswari Gurusamy HT Tamil
Oct 03, 2024 10:16 AM IST

Breastfeeding : தாய்ப்பால் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரவல்லது. அதேசமயம் குழந்தையுடன் பிணைப்பை ஏற்படுத்துவது மட்டும் அல்ல. தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. கர்ப்பகாலத்தில் அதிகரித்த உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆஸ்டியோபோராசிஸ் போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

Breastfeeding : குழந்தைகள் தாய்ப்பால் கொடுக்கும்போது கடிக்க காரணம்.. தாய்பால் கொடுப்பதால் தாய்க்கு இவ்வளவு நன்மையா!
Breastfeeding : குழந்தைகள் தாய்ப்பால் கொடுக்கும்போது கடிக்க காரணம்.. தாய்பால் கொடுப்பதால் தாய்க்கு இவ்வளவு நன்மையா!

குழந்தைகள் மார்பகங்களை கடிக்க காரணங்கள்:

தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தைகள் கடிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். குழந்தைகள் பால் குடிக்கும் போது, ​​போதுமான பால் கிடைக்காவிட்டாலும் கடிக்க ஆரம்பிக்கலாம். அல்லது சில சமயங்களில் தாயின் கவனத்தை ஈர்ப்பதற்காக முலைக்காம்பைக் கடிக்கத் தொடங்குவார்கள். பல் முளைக்கும் முன் ஈறுகளில் ஏற்படும் அரிப்புகளைப் போக்கவும் இதைச் செய்யலாம். இதைத்தடுக்க உதவும் சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

அமரும் நிலை:

உட்கார்ந்து அல்லது படுத்த நிலையில் தாய்ப்பால் கொடுங்கள். இதனால் பால் சரியாக கிடைக்கும். பால் உற்பத்தி குறைகிறதா என்பதை அடிக்கடி பாருங்கள். அதற்கு அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். சத்தான உணவை உண்ணுங்கள். அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். பால் உற்பத்தி நன்றாக இருந்தால், பால் கொடுக்கும் போது குழந்தை கடிப்பதை நிறுத்திவிடும்.

மேலும், குழந்தைகள் பால் குடிக்கும் போது உடனடியாக விலகிச் சென்றால், குழந்தைகள் கடிக்கலாம். வலி ஏற்படலாம். இதனால் , குழந்தைகள் பால் குடிக்கும் போது அவர்கள் வாய்க்கு முடிந்தவரை நெருக்கமாக இருங்கள். அல்லது குழந்தையை அருகில் கொண்டு வாருங்கள். கடிப்பதை உடனே நிறுத்திவிடுவார்கள்.

கவனம் செலுத்துங்கள்.

பல சமயங்களில் தாய்மார்கள் மொபைலில் பிஸியாக இருப்பார்கள், அல்லது டிவி பார்ப்பது, குழந்தைகளுக்கு பாலூட்டும் போது ஏதாவது புத்தகம் படிப்பது. தாயின் கவனத்தை ஈர்க்க குழந்தைகள் கடிக்க ஆரம்பிக்கிறார்கள். எனவே உங்கள் முழு கவனத்தையும் குழந்தைகள் மீது மட்டும் செலுத்துங்கள். குழந்தைகளுடன் நகைச்சுவைகளை பேசவும் அல்லது பாடவும் செய்யுங்கள்

பற்கள்:

பால் பற்கள் வெளிவரும் போது அல்லது அதற்கு முன் ஈறுகளில் அரிப்பு ஏற்படும். அதனால்தான் நிவாரணத்திற்காக பால் குடிக்கும் போது கடிக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட அவர்களின் ஈறுகளை சிறிது மசாஜ் செய்யலாம். உங்கள் விரல் கொடுக்கலாம். அல்லது நீங்கள் டீத்தர்களை பயன்படுத்தலாம். கேரட் போன்ற பச்சைக் காய்கறிகளை நீண்ட துண்டுகளாக வெட்டி கொடுத்தால் அவர்கள் மென்று சாப்பிட முயற்சிப்பார்கள். இது அரிப்பைக் குறைக்கிறது.

தாய்ப்பால் கொடுப்பதால் நன்மைகள்

தாய்ப்பால் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரவல்லது. அதேசமயம் குழந்தையுடன் பிணைப்பை ஏற்படுத்துவது மட்டும் அல்ல. தாயின் ஆரோக்கியத்திற்கும் தாய்ப்பால் கொடுப்பது நல்லது. கர்ப்பகாலத்தில் அதிகரித்த உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆஸ்டியோபோராசிஸ் போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. அதே சமயம் புற்றுநோய் அபாயத்தை தடுக்க உதவுகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.