Breast Milk: 2116 லிட்டர் தாய்ப்பால் தானம் - தமிழ்நாடு தாய்மார்கள் சாதனை!
தமிழ்நாடு முழுவதும் 2022 ஆம் ஆண்டில் 2116 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியமாகும். தாய்ப்பால் ஆனது திரவத்தங்கம் என அழைக்கப்படுகிறது. இயற்கையாகவே குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கக் கூடியது இந்த தாய்ப்பால்.
ட்ரெண்டிங் செய்திகள்
தாய்ப்பால் இல்லாமல் ஏராளமான பச்சிளம் குழந்தைகள் தவிர்த்து வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு உதவுவதற்கு ஏற்றவாறு அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தற்போது பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள காரணத்தினால் ஏராளமான பெண்கள் தங்களது குழந்தைகளுக்குப் போக மீதம் இருக்கும் தாய்ப்பாலைத் தானமாக வழங்கி வருகின்றனர்.
இது குறித்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரூபாய் என்ற இளம் பெண் அம்ருதம் என்ற பெயரில் தாய்ப்பால் சேகரிக்கும் அமைப்பு என்று உருவாக்கி தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பாலைச் சேகரித்து கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கி வருகிறார்.
தற்போது இந்த இயக்கமானது தமிழ்நாடு முழுவதும் விரிவடைந்து இயங்கி வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் தாய்ப்பாலை தானம் செய்து வருகின்றனர். 2022 ஆம் ஆண்டு மட்டும் தமிழ்நாடு முழுவதும் 2116 லிட்டர் தாய்ப்பாலை பெண்கள் தானமாக வழங்கியுள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ரூபா அறிவித்துள்ளார்.
குறிப்பாகத் தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களைச் சேர்ந்த தாய்மார்கள் இவ்வளவு பாலையும் தானம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் ஏழு மாதங்களில் 16 லிட்டர் தாய்ப்பாலை மௌனமாக வழங்கியதற்காகக் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ வித்யா என்ற பெண் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம்பெற்றுள்ளது.
உலகத்தின் முதல் தாய்ப்பால் வங்கி ஆனது வட அமெரிக்காவில் போஸ்டர் மாநகரில் 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவைப் பொறுத்தவரை 1989 ஆம் ஆண்டு மும்பை தாராவியில் அர்மேத்தா பெர்னாடஸ் என்பவரால் இந்த தாய்ப்பால் வந்து தொடங்கப்பட்டது.
முதன்முதலாகத் தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், சேலம், தேனி என ஐந்து மாவட்டங்களில் 2014 ஆம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் இந்த தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது.
இதில் சிறப்பு என்னவென்றால் ஒரு பட்டதாரி இளம் பெண் ஏழு மாதங்களில் கொடுத்த 42 லிட்டர் தாய்ப்பால் 1400 குழந்தைகளைக் காப்பாற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஏழு மாதங்களில் 106 லிட்டர் தாய்ப்பாலைத் தானமாக வழங்கி உள்ளார்.
இதுபோல் விழிப்புணர்வு ஏற்பட்டு பலரும் தாய்ப்பாலைத் தானமாக வழங்க முன்வர வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.