தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Breast Feeding Mothers : பாலூட்டும் தாய்மாரா நீங்கள்? இயற்கை முறையில் பால் அதிகம் சுரக்கச்செய்யும் வழிகள்!

Breast Feeding Mothers : பாலூட்டும் தாய்மாரா நீங்கள்? இயற்கை முறையில் பால் அதிகம் சுரக்கச்செய்யும் வழிகள்!

Priyadarshini R HT Tamil
Mar 12, 2024 03:00 PM IST

Breast Feeding Mothers : எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு பால் சரியாக சுரக்கவில்லையென்று வருந்தவேண்டாம். எளிதாக வீட்டிலே செய்யக்கூடிய இவற்றை பின்பற்றி செய்துபார்த்து பலன்பெறுங்கள்.

Breast Feeding Mothers : பாலூட்டும் தாய்மாரா நீங்கள்? இயற்கை முறையில் பால் அதிகம் சுரக்கச்செய்யும் வழிகள்!
Breast Feeding Mothers : பாலூட்டும் தாய்மாரா நீங்கள்? இயற்கை முறையில் பால் அதிகம் சுரக்கச்செய்யும் வழிகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

உங்களுக்கு அப்போது பால் சுரப்பது சரியாக இல்லையெனில், அதற்கு நீங்கள் சில இயற்கையான முறைகளை முயற்சி செய்யலாம். மிதமான அளவு அவற்றை முயற்சிப்பதால் உங்களுக்கு பிரச்னைகள் வருவதில்லை. ஆனால் எது செய்வதாக இருந்தாலும், செய்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவரிடம் அறிவுரை பெறுவது நல்லது. தாய்ப்பாலை பெருக்கும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

வெந்தய குடிநீர்

தாய்ப்பாலை அதிகரிக்கும் ஒரு பொருள் என்றால் அது வெந்தயம். இது பால்சுரக்கவைக்கும் பல பொருட்களிலும் கலக்கப்படுகிறது. இது மாத்திரை வடிவிலும் கிடைக்கிறது. இது ஆசியாவைச் சேர்ந்த ஒரு மூலிகையாகும். இதை ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்து, காலை எழுந்தவுடன் வடித்து, முதலில் அதை பரும பால் சுரப்பது அதிகரிக்கும்.

சோம்பு டீ

சோம்பு டீயை பயன்படுத்தியும் பால் சுரப்பதை தாய்மார்கள் அதிகரித்துக்கொள்ள முடியும். கர்ப்பத்தை எதிர்நோக்கும் கர்ப்பிணிகளுக்கும் இது கொடுக்கப்படுகிறது. இது குழந்தையை வாயுத்தொல்லைகளில் இருந்து காக்கிறது. சோம்பை பெரியவர்கள் செரிமானத்துக்கும், வயிறு கோளாறுகளை சரிசெய்யவும் பயன்படுத்துகிறார்கள். 

எனவே, சோம்பு டீ பருகினால், அதில் உள்ள நன்மைகள் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் வழியாக கிடைக்கும். பாரம்பரியமாக குழந்தை பிறந்த பின் சோம் தண்ணீர் அல்லது சோம்பு தேநீர் வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கும், தங்களுக்கும் சோம்பு நன்மை கொடுப்பதாக தாய்மார்க்ள் நம்புகிறார்கள்.

எள் உருண்டை

பால் பொருட்கள் அல்லாமல், கால்சிய சத்தை நாம் எள்ளில் இருந்தும் பெற முடியும். பாலூட்டும் தாய்மார்களுக்கு கால்சியச்சத்து என்பது மிகவும் அவசியம். உங்களின் உடல் நலன் மற்றும் உங்கள் குழந்தையின் வளர்ச்சி இரண்டுக்கும் முக்கியம் கால்சியச்சத்து. 

இதனால்தான் இதை பாலூட்டும் தாயமார்கள் தங்கள் உணவுகளில் கட்டாயம் எடுத்துக்கொள்கிறார்கள். எள்ளுடன், உங்களுக்கு பிடித்த விதைகள், பேரிட்சை பழங்கள், நட்ஸ்கள், டெசிகேடட் தேங்காய் ஆகியவற்றை சேர்த்து உருண்டையாக பிடித்து சாப்பிட்டு பாருங்கள். சுவை அள்ளும். ஆரோக்கியமும் உறுதி.

முருங்கைக்காய்

முருங்கைக்காய் பால் சுரப்பதை ஊக்குவிக்கு ஒன்று. இதை சாம்பார், கிரேவி, என செய்து சாப்பிடும்போது, சுவை அள்ளும். அதனுடன் ஆரோக்கியமும் அதிகம். ஒரு மாதம் முருங்கைக்காயை சாறு பிழிந்து பருகுங்கள். மாதத்தில் இருமுறை எடுத்தாலே பால் சுரப்பது அதிகரிக்கும்.

மசூர் தால் சூப்

தாய்மார்களுக்கு பால் சுரக்கச்செய்வதில் மிக முக்கியமானது மசூர் தால். இது பால் சுரப்பை அதிகரிக்கும். இதை பருப்பாக்கவும் சாப்பிடலாம். சூப் வைத்தும் சாப்பிடலாம். இந்த பிங்க் நிற பருப்பை சாப்பிடுவதால், பால் அதிகளவில் சுரக்கும். இதனுடன், நெய் மற்றும் ஒரு சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட வேண்டும்.

எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு பால் சரியாக சுரக்கவில்லையென்று வருந்தவேண்டாம். எளிதாக வீட்டிலே செய்யக்கூடிய இவற்றை பின்பற்றி செய்துபார்த்து பலன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்