Breast Cancer Remedy : மார்பக புற்றுநோயை அடித்து விரட்டும் மாயம் செய்யும்! இந்த கசாயத்தை அடிக்கடி பருகினால் பலன் பல!
Breast Cancer Remedy : எல்டிஎல், லோடென்சிட்டி லிப்போபுரோட்டீன் எனப்படும் கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதை குறைக்கும் திறன் கருஞ்சீரகத்துக்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இதய நோய் ஆபத்தை குறைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
மரணத்தை தவிர மற்ற அனைத்தையும் குணப்படுத்தக்கூடியது கருஞ்சீரகம் என்று நபிகள் நாயகம் குரானில் தெரிவித்துள்ளார். மார்பக புற்றுநோய் இருந்தால், அது வேறு உறுப்புகளுக்கு பரவாமல் தடுக்க முதலில் செய்ய வேண்டியது கருஞ்சீரக கசாயம்.
அரபு நாடுகளில் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மார்பக புற்றுநோயை தடுக்க விரும்பும் பெண்களும் இதை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். வீக்கத்தை குறைக்கும் தன்மை கருஞ்சீரகத்துக்கு உள்ளது என்று சித்த மருத்துவர் கு.சிவராமன் தெரிவித்துள்ளார்.
தேவையான பொருட்கள்
இஞ்சி – ஒரு துண்டு
கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் தட்டிய இஞ்சி மற்றும் கருஞ்சீரகம் சேர்த்து கொதிக்க விடவேண்டும். தண்ணீர் ஒரு டம்ளராக குறையும் வரை கொதிக்க விடவேண்டும்.
பின்னர், அதை வடிகட்டி தேனில் கலந்து பருகவேண்டும்.
இதை காலை, மாலை, காபி, டீக்கு பதிலாகவும் பருகலாம் அல்லது இடைவேளையில் ஒருமுறை பருகலாம். இதை எப்போது வேண்டுமானாலும் பருக உங்கள் உடலுக்கு அத்தனை பலன்களை கொடுக்கிறது.
இதில் தேன் சேர்க்காமலும் பருகலாம். ஆனால் அப்படி பருகினால், கொஞ்சம் கசக்கும் என்பதால் தேன் சேர்ப்பது நல்லது. தேனுக்கு பதில் நாட்டுச்சர்க்கரை மற்றும் வெல்லம் என எது வேண்டுமானாலும் சேர்க்கலாம். ஆனால், வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கருஞ்சீரகத்தின் நன்மைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்கள்
கருஞ்சீரகத்தில் வைட்டமின் ஏ, பி, சி, பி12 ஆகியவை உள்ளது. தேவையான ஃபேட்டி ஆசிட்கள், நார்ச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் சோடியம், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் போன்ற மினரல்கள் உள்ளது.
கருஞ்சீரகத்தில் தைமோகுனன், கார்வக்ரால், டி அந்தோலே மற்றும் 4-டெர்பினோயல் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இது நாள்பட்ட நோய்களுக்கு தீர்வு கொடுக்கிறது. அதில் சர்க்கரை, புற்றுநோய், இதய நோய், உடல் பருமன் ஆகியவையும் அடங்கும்.
கருஞ்சீரகம், பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. சில பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது மற்றும் மெத்திசிலின் எதிர்ப்பு கொண்டது என்றும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது.
கருஞ்சீரகத்துடன், புதினா சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது நினைவாற்றல் பெருகுவதாக ஆயுர்வேத மருத்துவம் கூறுகிறது. இது வயோதிகர்களுக்கு ஏற்படும் அல்சைமர் எனப்படும் நினைவாற்றல் இழப்பு நோயை தடுக்க அல்லது தாமதப்படுத்த உதவுகிறது.
எல்டிஎல், லோடென்சிட்டி லிப்போபுரோட்டீன் எனப்படும் கெட்ட கொழுப்பு உடலில் சேர்வதை குறைக்கும் திறன் கருஞ்சீரகத்துக்கு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், இதய நோய் ஆபத்தை குறைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
கருஞ்சீரகத்தில் புற்றுநோய் எதிரான குணங்கள் உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இதில் உள்ள தைமோகுயினன் அதற்கு உதவுகிறது. இது கணையம், நுரையீரல், கருப்பை, ப்ராஸ்டேட், சருமம் மற்றும் குடல் புற்றுநோய்களுக்கு எதிராக போராடுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9