Boy Baby Names : 2024ம் ஆண்டில் இதுதான் டிரெண்ட்! உங்கள் குழந்தைக்கு இந்தப் பெயர் வைத்துள்ளீர்களா பாருங்க!-boy baby names this is the trend in 2024 see if you name your baby this - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Boy Baby Names : 2024ம் ஆண்டில் இதுதான் டிரெண்ட்! உங்கள் குழந்தைக்கு இந்தப் பெயர் வைத்துள்ளீர்களா பாருங்க!

Boy Baby Names : 2024ம் ஆண்டில் இதுதான் டிரெண்ட்! உங்கள் குழந்தைக்கு இந்தப் பெயர் வைத்துள்ளீர்களா பாருங்க!

Priyadarshini R HT Tamil
Aug 09, 2024 12:59 PM IST

Girl Baby Names : 2024ம் ஆண்டில் இதுதான் டிரெண்ட்! உங்கள் ஆண் குழந்தைகளுக்கு இந்தப் பெயர் வைத்துள்ளீர்களா என்று பாருங்கள்.

 Boy Baby Names : 2024ம் ஆண்டில் இதுதான் டிரெண்ட்! உங்கள் குழந்தைக்கு இந்தப் பெயர் வைத்துள்ளீர்களா பாருங்க!
Boy Baby Names : 2024ம் ஆண்டில் இதுதான் டிரெண்ட்! உங்கள் குழந்தைக்கு இந்தப் பெயர் வைத்துள்ளீர்களா பாருங்க!

ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம்

இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும்.

அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.

எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.

2024ம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தைகள்

ஒரு குழந்தைக்கு பெயர் சூட்டுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அவர்கள் வைக்கும் பெயர் அந்த குழந்தையின் எதிர்காலத்தை வளமாக்கவேண்டும். அதற்காக அவர்கள் என்ன பெயர் வைக்கலாம் என்று பல தேடல்களுக்குப்பின் ஒரு பெயரை தேர்ந்தெடுக்கிறார்கள். 2024ம் ஆண்டில் டிரெண்டிங்கில் இருந்த ஆண் குழந்தைகளின் பெயர்களையும், அதன் அர்த்தங்களையும் பாருங்கள்.

விஹான்

விடியல் என்பதை குறிக்கிறது. புதிய காலத்தின் துவக்கம். நம்பிக்கை மற்றும் புதிய துவக்கம் என்பது இதன் அர்த்தம். இந்தாண்டு வைக்கப்பட்ட பெயர்களில் இந்தப் பெயர் அதிக இடம் பிடித்துள்ளது.

அத்வைத்

தனித்தன்மையான, ஒப்பிட்டு பார்க்க முடியாத பெயராக அத்வைத் உள்ளது. இது தனித்தன்மை மற்றும் தனி அடையாளத்தை நிறுபுபவர் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

ஆர்யன்

உன்னதமானவன், உயர்ந்தவன் என்ற அர்த்தத்தை குறிப்பிடுகிறது. பாரம்பரியம் மற்றும் கௌரவத்தைக் குறிக்கிறது.

விவான்

ஆற்றல் மற்றும் உயிரானவன் என்ற அர்த்தத்தை குறிக்கிறது. உயிர் மற்றும் உற்சாகம் நிறைந்தவன் என்ற அர்த்தத்தைக் கொண்டது.

அயான்

இந்தப் பெயரின் அர்த்தம் கடவுளின் பரிசு என்பதாகும். அயான் என்றால் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன் மற்றும் ஒளி என்று பொருள்.

ருத்ரா

சிவனின் பெயர், ருத்ரா என்றால், சக்தி, தீயசக்திகளை அழிப்பவன் என்று பொருள் தருகிறது.

ரேயான்ஷ்

ஒளிக்கீற்று, ரேயான்ஷ் என்றால், நம்பிக்கை மற்றும் துணிவை விதைப்பவர் என்று பொருள். விஷ்ணுவின் அங்கம் என்ற பொருளும் உண்டு.

கியான்

கடவுள் அல்லது அரசனின் கருணை என்று பொருள். பலம் மற்றும் நளினம் என்பதும் இதன் ஒரு அர்த்தம் ஆகும்.

சமர்த்

ஆற்றல் நிறைந்த, எதையும் செய்ய முடிந்த என்று பொருள். சமரத் என்றால் பலமான, திறன் கொண்ட, போட்டியிடும் வலுகொண்ட என்று பொருள்.

இந்த பெயர்கள் இந்தாண்டு டிரெண்டிங்கில் இருந்த பெயர்களாக உள்ளது. எந்த பெயரை வைத்தாலும் உங்கள் குழந்தைகள் புகழோடு வாழ ஹெச்.டி. தமிழ் வாழ்த்துகிறது. மேலும் உங்களுக்கு பல பெயர்களை அறிமுகப்படுத்துகிறோம். தொடரந்து ஹெச்.டி தமிழுடன் இணைந்திருங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.