VIJAYAKANTH BIRTHDAY: மதுரை டூ சென்னை.. நடிகரானபின் எப்போதும் போட்ட சாப்பாடு.. குறுகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சித்தலைவர்
VIJAYAKANTH BIRTHDAY: மதுரை டூ சென்னை.. நடிகரானபின் எப்போதும் போட்ட சாப்பாடு.. குறுகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சித்தலைவர் என விஜயகாந்தின் செயல்பாடு பலரையும் ஈர்த்தது.

VIJAYAKANTH BIRTHDAY: தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக வாழ்ந்த எம்.ஜி.ஆர், கொடை வள்ளல் எனப் பலராலும் போற்றப்படுகிறார். அதற்குப் பிறகு இன்றுவரை சினிமாவில் மட்டுமல்லாது பொதுமக்களிடத்திலும் கொடை வள்ளலாக வாழ்ந்தவர், நடிகர் விஜயகாந்த். கேப்டன் என தமிழ் சினிமாவில் அனைவராலும் அழைக்கப்படும் விஜயகாந்த் அலுவலகத்துக்குச் சென்றால், எளியவர்கள் யார் வேண்டுமென்றாலும் சாப்பிடலாம் என்னும் நிலையை உருவாக்கி வைத்தார்.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக திரையுலகில் ஜொலித்த விஜயகாந்த் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதில் வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, பூந்தோட்ட காவல்காரன், செந்தூரப்பூவே, புலன் விசாரணை, சின்ன கவுண்டர், ஹானஸ்ட் ராஜ், கேப்டன் பிரபாகரன் மாநகர காவல், வல்லரசு, வானத்தைப்போல, ரமணா ஆகியப் படங்கள் இவரை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன. காவல் துறை அதிகாரி வேடமென்றாலே, அது விஜயகாந்த் என்னும் அளவுக்கு நிறையப் படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்தார், விஜயகாந்த்.
இதுவரை இரண்டு தென்னிந்தியாவுக்கான ஃபிலிம்பேர் விருதையும், மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளையும் வென்றவர்.