பண்டிகைக் காலங்களில் கன்னாபின்னாவென சாப்பிட்டு எகிறிய உடல் எடை; உடனே குறைப்பது எப்படி?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பண்டிகைக் காலங்களில் கன்னாபின்னாவென சாப்பிட்டு எகிறிய உடல் எடை; உடனே குறைப்பது எப்படி?

பண்டிகைக் காலங்களில் கன்னாபின்னாவென சாப்பிட்டு எகிறிய உடல் எடை; உடனே குறைப்பது எப்படி?

Priyadarshini R HT Tamil
Nov 11, 2024 10:27 AM IST

பண்டிகைக் காலங்கள் என்றாலே கொண்டாட்டம்தான். கூடவே எண்ணற்ற பலகாரங்களும் இருக்கும். அதை நாம் கணக்கு வழக்கின்றி கன்னாபின்னாவென சாப்பிடுவதால் உடல் எடை எகிறிவிடும். அந்த எடையை உடனே குறைப்பது எப்படி?

பண்டிகைக் காலங்களில் கன்னாபின்னாவென சாப்பிட்டு எகிறிய உடல் எடை; உடனே குறைப்பது எப்படி?
பண்டிகைக் காலங்களில் கன்னாபின்னாவென சாப்பிட்டு எகிறிய உடல் எடை; உடனே குறைப்பது எப்படி?

பர்ப்பீஸ் எனப்படும் குப்புறப்படுத்து எழுந்து குதிக்கும் பயிற்சி

இந்த உடற்பயிற்சி செய்யும்போது கிட்டத்தட்ட உடலின் அனைத்து தசைகளுக்கும் வேலைகிடைக்கும். உங்கள் கைகள் முல் கால்கள் வரை அவை நன்றாக இயங்க உதவும். இந்த இயக்கத்தில் தோப்புக்கரணம், குதிப்பது, புஷ்அப் எடுப்பது, ப்ளாங்க் போன்ற அனைத்து வகை உடற்பயிற்சிகளும் ஒரே நேரத்தில் கிடைத்துவிடுகின்றன. 15 முதல் 20 முறை, 3 முறை 30 நொடி இடைவெளியில் செய்யவேண்டும். அப்போது நல்ல பலன் கிட்டும்.

மலையேறும் பயிற்சி

மலையேறும் பயிற்சியை நீங்கள் ப்ளாக் பயிற்சி செய்வதுபோல் படுத்துக்கொண்டே செய்யவேண்டும். அதை மாற்றியும் செய்யும்போது, அது ஒவ்வொரு மூட்டுக்கும், நெஞ்சுக்கும் வேகமாக பயிற்சி கொடுக்கிறது. இந்தப் பயிற்சி உங்கள் இதயதுடிப்பை அதிகரிப்பதுடன், உங்களுக்கு வலுகொடுக்கிறது. இது கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகிறது.

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங் கயிறு வைத்து குதிப்பது, நீங்கள் மைதானத்தில் செய்யும் பயிற்சிகளை விட சிறந்தது. இது அதி கடினமான இதயப் பயிற்சியாகும். இது விரைவாக கலோரிகளைக் குறைக்கும். எனவே நீங்கள் மிதமான அளவு குதிப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மிதமானது முதல் அதிகரித்துக்கொண்டே செல்லவேண்டும். இது உங்களின் கலோரிகளை அதிகம் எரிக்க உதவும். ஒரு நிமிடம் 5 செட், இடையில் 30 நொடிகள் ஓய்வுடன் செய்யும்போது, இது உங்கள் உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.

வேகமான உடற்பயிற்சி

எந்த ஒரு உடற்பயிற்சியையும் வேகமாக செய்யும்போது, இடையில் குறிப்பிட்ட இடைவெளி கொடுத்துவிடவேண்டும். இதை செய்யும்போதுதான் அதன் பலன் அதிகம் கிடைக்கும் குதித்தல், ஓட்டப் பயிற்சி, மூட்டு பயிற்சி என 20 நிமிடங்கள் தொடர்ந்து விடாமல் வேகமாக செய்யவேண்டும். இடையில் 30 நொடிகள் மாற்றி செய்துவிட்டு, 15 நொடிகள் ஓய்வு கொடுத்துவிடவேண்டும்.

கெட்டில் பெல் ஸ்விங்ஸ்

உங்கள் கால்களுக்கும் தோள்பட்டைக்கும் இடையில் கெட்டில்பெல்லை வைத்து சுழற்றவேண்டும். இந்தப் பயிற்சியை 20 முறை தொடர்ந்து 3 செட்கள் செய்யவேண்டும். இடையில் 30 நொடிகள் ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டும்.

பாக்ஸ் மீது குதிப்பது

ஒரு நல்ல பாக்ஸை எடுத்துக்கொள்ளவேண்டும். அது 2 அடி உயரம் இருப்பது நல்லது. அதில் தரையில் இருந்து எகிறி குதிக்கவேண்டும். குதிக்கும்போது உங்கள் முட்டியை வளைத்துக்கொள்ளவேண்டும். இதை 10 – 12 முறை மீண்டும், மீண்டும் செய்யவேண்டும். 3 செட்கள், 30 நொடி இடைவெளியில் செய்யவேண்டும்.

கயிறுவைத்து செய்யும் பயிற்சி

இரண்டு கயிறை உயரமான இடத்தில் கட்டிவிடவேண்டும். இரண்டு கைகளிலும் அந்த கயிறை பிடித்துக்கொள்ளவேண்டும். உங்களால் எவ்வளவு வேகமாக முடியுமோ அத்தனை வேகமாக மேலும் கீழுமாக கயிறை பிடித்துக்கொண்டு கையை அசைக்கவேண்டும். இதை 30 நொடிகள் 5 செட்கள் செய்யவேண்டும். இடையில் 15 நொடிகள் ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டும்.

சைக்கிளிங்

சைக்கிள் ஓட்டுவது போன்ற பயிற்சி, இதை 45 நிமிடங்கள், மிதமானது முதல் வேகமாக வரை செய்யவேண்டும். பண்டிகை காலங்களில் அதிகம் ஏறிய கலோரிகள் குறையவேண்டுமெனில், வேறு வழிகளே இல்லை. இதை நீங்கள் கட்டாயம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் இந்த கொழுப்பு உடலில் அப்படியே நிரந்தமாகத் தங்கி, பல்வேறு உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.