Exclusive : குளித்துவிட்டு, ஈரத்தலையுடன் உறங்கச் செல்லும் நபரா நீங்கள்? காத்திருக்கும் ஆபத்து என்ன-விளக்கும் மருத்துவர்!
நீங்கள் ஏன் ஈரத்தலையுடன் உறங்கக்கூடாது தெரியுமா? உங்களுக்கு மருத்துவர் கொடுக்கும் எச்சரிக்கை என்னவென்று பாருங்கள்.

நீங்கள் உங்கள் தலைமுடியை அலசி காய வைப்பீர்களா? அல்லது அது தானாகவே காய்ந்து விடவேண்டும் என்று விட்டுவிடுவீர்களா? சில நேரத்தில் காயவிடாமலே உறங்கச் சென்றுவிடுவீர்களா? நீங்கள் காய விடாமலே உறங்கச்செல்லும் நபராக இருந்தால், நீங்கள் சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் அந்த தவறை செய்யும் நபராக இருந்தால் அது உங்கள் தலையில் பூஞ்ஜை தொற்றை ஏற்படுத்திவிடும். ஆமாம் உங்கள் தலையில் பூஞ்ஜை தொற்று ஏற்பட்டால் அது பல்வேறு பிரச்னைகள் ஏற்படுத்தும்.
டாக்டர் ஆம்னா அடேல என்ற சரும நோய் நிபுணர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் நீங்கள் தலைக்கு குளித்துவிட்டு, முடியை காயவிடாமல் ஈரத்துடன் உறங்கச் சென்றுவிட்டால் என்னவாகும் என்று கூறியுள்ளார். அதில், அடேல் ஒரு விஷயத்தை அழுத்தி கூறுகிறார். நீங்கள் ஈரத்தலையுடன் உறங்கச்சென்றால், அது உங்கள் தலையில் பூஞ்ஜைகள் ஏற்பட வாய்ப்பாக இருந்துவிடும் என்கிறார். உங்கள் தலையில் இயற்கை ஈஸ்ட் இருந்தாலும், ஈரத்தலை, இந்த ஈஸ்ட் அதிகம் உங்கள் தலையில் வளர்வதற்கு சிறந்த சூழலை அமைத்துவிடும். இதனால் உங்கள் தலையில் பூஞ்ஜை தொற்றுக்களும், நாடாபுழுக்களும் உருவாக காரணமாகிவிடும்.
ஈரத்தலையுடன் உறங்காதீர்கள்!
அந்த வீடியோவில் அவர் மேலும் கூறுகையில், நாம் தலைக்கு குளித்துவிட்டு, நமது தலைமுடியை அலசாவிட்டால், அதனால் நமது தலையில் தொற்றுகள் ஏற்படுவதுடன், நம்மை வேறு விதமாக மக்கள் பார்க்கத் துவங்கிவிடுவார்கள். எனவே நமது தலையில் இயற்கையான ஈஸ்ட் அதிகம் உள்ளது என்பதை நாம் உணரவேண்டும். அது நமது சருமத்திலும் இருக்கும். வாடகையில்லாமல் தங்கும் ஒட்டுண்ணியாகும். பூஞ்ஜையும் நமது உடலில் ஒட்டிக்கொண்டு வாழும் ஒட்டுண்ணியாகும். அதற்கு மலாசெஸ்யா என்று பெயர். இதற்கு ஈரம் மிகவும் பிடிக்கும். கொஞ்சம் ஈரம் கிடைத்தால் கூட இது பல்கிப்பெருகிவிடும்.