Birthday Wishes : உயிரானவர்களின் பிறந்த நாள்; நவீன வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வது எப்படி?-birthday wishes birthday of the living how to share modern greetings - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Birthday Wishes : உயிரானவர்களின் பிறந்த நாள்; நவீன வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வது எப்படி?

Birthday Wishes : உயிரானவர்களின் பிறந்த நாள்; நவீன வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Sep 03, 2024 07:00 AM IST

Birthday Wishes : உயிரானவர்களின் பிறந்த நாள்; நவீன வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வது எப்படி?

Birthday Wishes : உயிரானவர்களின் பிறந்த நாள்; நவீன வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வது எப்படி?
Birthday Wishes : உயிரானவர்களின் பிறந்த நாள்; நவீன வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்வது எப்படி?

ஒருவரை பிறந்த நாளில் வாழ்த்துவது எப்படி?

ஒவ்வொரு உறவையும் எப்படி வாழ்த்தவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். அவர்களுக்கான தனிப்பட்ட பரிசுப்பொருட்களை வாங்கி, அவர்களின் பிறந்த நாளை நீங்கள் எத்தனை மகிழ்ச்சி நிறைந்ததாக மாற்றலாம் என்றும் தெரிந்துகொள்ளுங்கள்.

அவர்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம்களை பரிசாக்கலாம். ஓவியங்கள், தனிப்பட்ட போர்வைகள் மற்றும் அவர்களின் ஃபோட்டோக்கள் போடப்பட்ட காபி கப்கள் என நீங்கள் அவர்களின் நாளுக்கு மேலும் இனிமை சேர்க்கலாம்.

இது அவர்களுக்கு மறக்க முடியாத பிறந்த நாள் அனுபவத்தைதரும். உங்களுக்கு நெருக்கமானவர்களின் வயது அதிகரிக்கும்போது, அவர்களின் நாளை கூடுதல் சிறப்பாக்க நீங்கள் முயலுங்கள்.

நீங்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னெடுக்கலாம். அவர்களுக்கு பிடித்த உணவகத்துக்கு இரவு உணவுக்கு அழைத்துச் செல்லாம். அவர்களுக்காக சிறப்பான வார்த்தைகள் அடங்கிய வாழ்த்து அட்டைகளை தயாரிக்கலாம்.

அதற்காக சில பிறந்த நாள் கொண்டாட்ட வாசகங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வயது கூடுதலாக ஒன்று அதிகரிக்கும்போது, அவர்களை கொண்டாட மேலும் ஒரு காரணம் கிடைக்கிறது. அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாட நீங்கள் உங்கள் வாழ்த்துக்களை இப்படியெல்லாம் கூறலாம்.

நவீன பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நவீன பிறந்த நாள் வாழ்த்துக்களில் நிறைய எமோஜிக்களைப் பயன்படுத்தவேண்டும். பிறந்த நாள் வாழ்துதுக்கள் கூற ஷார்ட் ஃபார்ம்கள், அப்ரிவியேசன்களை கூறவேண்டும். பெஸ்டி போன்ற நவீன வார்த்தைகளை உபயோகித்து வாழ்த்து கூறவேண்டும்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! பெஸ்டியே, உன்னைப்போலவே காவியமானது உனது பிறந்த நாள். நாம் சேர்ந்து சில நல்ல நினைவுகளை உருவாக்கலாம்.

இது உனது சிறப்பான நாள். உன்னைக் கொண்டாட எனக்கு மேலும் ஒருநாள் கிடைத்துள்ளது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இது உனது சிறப்பாக நாள். அதற்கு நான் நன்றி கூறுகிறேன். உனது சிறப்பானவற்றை மேலும் ஓராண்டு கொண்டாடுவது எனக்கு மகிழ்ச்சிதான். சியர்ஸ், இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! எனது பெஸ்டி, உனது பிறந்த நாள் உன்னை மகிழ்விக்கும் விஷயங்களால் நிரம்பி வழியட்டும். சிறந்த சாதனைகளை புரிய மீண்டும் ஒரு ஆண்டு வரட்டும்.

மற்றுமொரு சிறந்த ஆண்டைக் கொண்டாடவும், சிறந்த நினைவுகளை உருவாக்கவும் சியர்ஸ்! இனிய பிறந்த நாள் வாழத்துக்கள் எனது ஆருயிர் நண்பரே, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஆச்சர்யமளிக்கு உங்களைப் போன்ற நண்பர்களுடன் கொண்டாடும் பிறந்த நாள் மேலும் சிறப்பான நாளாகிறது. உங்களின் நாள் மகிழ்ச்சி, அன்பு மற்றும் உங்களை பிரகாசிக்கச் செய்யும் பல விஷயங்களால் நிரம்பி வழியட்டும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உங்களைப்போன்ற சிறப்பான மற்றும் துருதுருப்பான பிறந்த நாளாக இது அமையட்டும். உங்களை கொண்டாடுகிறோம் நண்பரே, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொண்டுவரும் உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். எனது வாழ்வின் ஒளி நீ. அதேபோன்ற ஒளியை மேலும் ஓராண்டு பெற நினைக்கிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உன்னை ஒரு சிறந்த நபராக்கும், சிறப்பாக விஷயங்களுக்கு நன்றி, மீண்டும் ஒரு ஆண்டு, மீண்டும் ஒரு வாய்ப்பு உன்னை கொண்டாட கிடைத்துள்ளது. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

இது உனது சிறப்பான நாள். இது உன்னைப்போன்ற ஒரு நாளாகும். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

எனது வாழ்வில் உனது இருப்பு என்பது, மறக்க முடியாத ஒன்று. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.