Brain Booster : உங்கள் குழந்தைகள் படிக்கும்போது சோர்ந்து போகிறார்களா? அவர்களுக்கான ப்ரைன் பூஸ்டர் இதோ!
Brain Booster : உங்கள் குழந்தைகள் படிக்கும்போது சோர்ந்து போகிறார்களா? அவர்களுக்கான ப்ரைன் பூஸ்டர் இதோ!
படிக்கும்போது உங்கள் குழந்தைகள் சோர்ந்து போகிறார்களா அல்லது உங்களுக்கே உடலில் சோர்வு ஏற்படுகிறதா? மூளை சோர்வதால் சுறுசுறுப்பில்லாமல் உணர்கிறார்களா? உங்களுக்கான ப்ரைன் பூஸ்டர் பவுடர் எப்படி செய்வது என்ற தெரிந்துகொள்ளுங்கள். சிலருக்கு கண் சோர்வு மற்றும் மூளை சோர்வு ஏற்படுபவர்களும் இந்தப்பொடியை பயன்படுத்தலாம்.
இதில் நிறைய பலன்கள் உள்ளது. உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், கண்பார்வை குறைபாடு நீங்கும், கால்சியம், இரும்புச்சத்துக்களும் கிடைக்கும். இதனால் நரம்பு மண்டலம் வலுப்பெறும். நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களும் எடுத்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பாதாம் – ஒரு கைப்பிடி
வால்நட் – ஒரு கைப்படி
மூளைபோல் தோற்றம் கொண்டது. இதை சாப்பிடும்போது மனிதனின் மூளை சுறுசுறுப்படையும், மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும், ஞாபக சக்தியை அதிகரிக்கும். மூளை போலவே தோற்றம் கொண்டது. அக்ரூட் பருப்பு என்றும் அழைக்கப்படுகிறது. மூளைக்கு அக்ஸிஜன் சீராக பாய உதவும்.
முந்திரி – ஒரு கைப்பிடி
உடலுக்கு ஊட்டமளிக்கும், போஷாக்கு கொடுக்கிறது. ப்ரைன் பூஸ்டருக்கு சுவையும் கொடுக்கிறது.
மக்கானா – ஒரு கப்
தமிழில் பொரித்த தாமரை விதைகள். பரவலாக அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. குறிப்பாக நட்ஸ் கடைகளில் கிடைக்கும். இதில் அதிகளவில் மெக்னீசியச்சத்து உள்ளது. ரத்தஓட்டத்தை சீராக்கும். அதிகப்படியான பொட்டாசியம் உள்ளது. குறைந்தளவு சோடியம் உள்ளது. அதனால் உடலுக்கு நல்லது. கால்சியம் அதிகம் உள்ளது. பொதுவாக குழந்தைகளுக்கு கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் குழந்தைகள் சோர்ந்து காணப்படுவார்கள். சிறிது நேரம் படித்தாலோ அல்லது விளையாடினிலோ அதிகம் சோர்வடைவார்கள். இதில் உள்ள கால்சியம் சத்துக்கள் உடல் சோர்வை நீக்கி மூளையை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கும்.
ஏலக்காய் – 4
கோகோ பவுடர் – சிறிதளவு
செய்முறை
முதலில் பாதாம் மற்றும் வால்நட் சேர்த்து சிறிது நேரம் வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கைப்பிடி முந்திரியையும் வறுக்க வேண்டும். மக்கானாவையும் வறுக்க வேண்டும். ஏலக்காய் என ஒவ்வொன்றாக சிறிது நேரம் வறுத்த எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்தையும் நன்றாக ஆறவைத்துட்டு, காய்ந்த மிக்ஸிஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து எடுக்க வேண்டும்.
இதனுடன் சிறிது கோகோ பவுடர் சேர்த்து கலக்க வேண்டும்.
அனைத்தையும் ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை மிதமான சூட்டில் உள்ள பாலில் நாட்டுச்சர்க்கரையுடன் கலந்து காலை, மாலை என இருவேளையும் பருகலாம். உங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
இதை அன்றாடம் பருகிவர உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. சில குழந்தைகள் பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்றவற்றை அப்படியே எடுத்து சாப்பிடுவார்கள். அதுபோல் இதையும் சாப்பிடலாம். இதை குழந்தைகள் விரும்பு எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு மூளை சுறுசுறுப்பாகும். நீங்கள் எடுக்கும் பூஸ்ட் மற்றும் ஹார்லிக்ஸ் போன்வற்றை தவிர்த்து விடலாம்
நரம்பு பிரச்னைகளை தீர்க்கும், மூட்டு வலிக்கும் நல்லது. சருமம் பளபளப்பாக இருக்கவும் உதவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்