Numerology Horoscope: செப்டம்பர் 3ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?-numerology horoscope 3 september 2024 discover who will be lucky or unlucky on 3st september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope: செப்டம்பர் 3ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Numerology Horoscope: செப்டம்பர் 3ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

Kathiravan V HT Tamil
Sep 02, 2024 04:58 PM IST

Numerology Horoscope: எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது.

numerology horoscope 3 September 2024
numerology horoscope 3 September 2024

இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. உங்களின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே நியுமராலஜி எண்ணாக கணக்கில் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியுமராலஜி எண்ணாக 03 (3 + 0 = 1, 1 + 2 = 3) இருக்கும்.

எண் 1

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நேர்மறையான சிந்தனைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். இந்த நாள் நிறைய தன்னம்பிக்கை நிறைந்தநாளாக இருக்கும். வியாபாரத்தில் சிரமம் ஏற்படலாம். லாபத்திலும் குறைவு ஏற்படலாம். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் சுபமாக பொழுதை செலவிடுவீர்கள். வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

எண் 2

இரண்டாம் எண்ணில் பிற்நதவர்கள் இந்த நாளில் சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம், கோபத்தைத் தவிர்க்கவும், இல்லையெனில் பிரச்னைகளை சந்திக்க வேண்டி நேரிடலாம். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பொருளாதார ஆதாயங்களுக்கான வாய்ப்புகளும் அமையும்.

எண் 3

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் நண்பர் ஒருவர் இன்று உங்களை தேடி வரலாம். வியாபாரிகளுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நண்பரின் உதவியால் வியாபாரம் வளரும். லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வாழ்க்கைத்துணை ஆதவாக இருப்பார்கள். 

எண் 4

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சற்று சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பொறுமையாக இருங்கள். கோபத்தை தவிர்க்கவும். குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். செலவுகள் அதிகரிக்கும்.வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை. இறைவழிபாடு ஏற்றத்தை தரும். 

எண் 5

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் இந்த நாளில் வாசிப்பில் ஆர்வமாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பொருளாதார ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரிகள் தன்னிச்சையாக லாபம் ஈட்டலாம். தந்தையிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

எண் 6

ஆறாம் எண்ணில் பிறந்தவர்கள் மனதில் ஏற்ற தாழ்வுகள் வந்து போகும். வருமானம் குறைந்து செலவுகள் அதிகமாகலாம் என்பதால் கவனம் தேவை. வியாபாரத்தில் லாப வாய்ப்புகள் அமையும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.  

எண் 7

ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்று, மனம் தன்னம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். ஆனால் மனதில் ஏற்ற தாழ்வுகள் வந்து நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உத்தியோகத்தில் ஆதரவுகள் கிடைக்கும். விபாரத்தில் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். 

எண் 8

எட்டம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மனம் அமைதியற்றதாக இருக்கும். குடும்பத்தின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வியாபாரத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நீங்கள் வேறு இடத்திற்கு செல்லலாம். செலவுகள் அதிகரிக்கும். இன்று நீங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வழிவகை செய்யப்படும். அரசுக்கு ஆதரவு கிடைக்கும்.

எண் 9

ஒன்பதால் எண்ணில் பிறந்தவர்களுக்கு இனந்தெரியாத பயத்தால் தொந்தரவு ஏற்படலாம். உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். பணியில் உள்ள அதிகாரிகளுடன் இணக்கத்தை பராமரிக்கவும். முன்னேற்ற வாய்ப்புகள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும், பழைய வருமானத்திலிருந்து பணமும் வரும். முதலீட்டில் நல்ல வருமானத்தைப் பெறலாம்.

டாபிக்ஸ்