தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Benefits Of Olive Oil For Skin Care

Olive Oil For Skin Care: சரும ஆரோக்கியத்துக்கு ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள்

I Jayachandran HT Tamil
May 21, 2023 05:39 PM IST

சரும ஆரோக்கியத்துக்கு ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

சரும ஆரோக்கியத்துக்கு ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள்
சரும ஆரோக்கியத்துக்கு ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள்

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் ஆலிவ் எண்ணெய்யை வைத்து சமையல் செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது சமையல் தவிர சருமப் பாதுகாப்புக்கும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்தலாம் என உணவியல் துறை நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

எனவே ஆலிவ் எண்ணெய் என்பது உங்கள் சமையல் அறையில் மட்டும் பயன்படும் பொருள் அல்ல. இதை உங்கள் சருமம் மற்றும் கூந்தல் பிரச்னைகளை சரிசெய்யவும் பயன்படுத்தலாம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

ஆலிவ் எண்ணெய் பயன்பாடுகள்-

சன்ஸ்கிரீன்: இதை டீ டிக்காஷனோடு சம அளவில் கலந்து, உடல் மற்றும் முகம் முழுவதும் பூசவும். 1 மணி நேரம் கழித்து நீரால் அலசவும். சருமத்தில் இந்தக் கலவை சன்ஸ்கிரீனாக செயல்படும்.

வலி நிவாரணி: ஆறு துளி லேவண்டர் எசன்ஷியல் ஆயிலுடன், 2 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைக் கலக்கி வலி உள்ள பகுதியில் மசாஜ் செய்யவும்.

வறண்ட சருமம்/கூந்தலுக்கு: முட்டையின் மஞ்சள் கருவுடன் கொஞ்சம் ஆலிவ் ஆயிலை கலக்கி, முகத்தில் பூசவும். 20 நிமிடங்கள் கழித்து, நீரில் கழுவவும். மஞ்சள் கரு, ஆலிவ் ஆயில் கலவை, வறண்ட கூந்தலையும் சரி செய்ய உதவும்.

உடையும் நகத்துக்கு: 1 கப் ஆலிவ் ஆயிலுடன், ஒரு துளி எலுமிச்சை, யூகலிப்டஸ் எசன்ஷியல் ஆயிலை சேர்த்து, அதில் நகங்களை 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்களுடைய நகங்கள் பலமடைந்து ஆரோக்கியமாகக் காட்சியளிக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்