Benefits of Mudakathan Keerai : மூட்டு வலிக்கு மட்டுமா முடக்கத்தான்? இன்னும் எத்தனை நன்மைகள் பாருங்கள்!
Benefits of Mudakathan Keerai : மூட்டு வலிக்கு மட்டுமா முடக்கத்தான்? இன்னும் எத்தனை நன்மைகள் உள்ளது என்று பாருங்கள். அவற்றை தெரிந்துகொண்டால் அன்றாடம் உணவில் சேர்ப்பீர்கள்.

முடக்கத்தான் கீரை பலூன் வைன் என்று அழைக்கப்படுகிறது. இது அதிகப்படியான நன்மைகள் கொண்ட மூலிகையாகும். இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் வழங்குகிறது. மூட்டுவலி, வீக்கம், சளி, இருமல் ஆகிய தொல்லைகளைப் போக்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். உள்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டிலும் உபயோகிக்கலாம். எண்ணற்ற ஆரோக்கிய குறைபாடுகளுக்கு தீர்வாகிறது. இது மூட்டுவலிக்கு சிறந்த நிவாரணம் தருகிறது. இது சளி மற்றும் இருமலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சரி செய்கிறது. இதன் சாறு காது வலியை சரிசெய்கிறது. இதன் இலையை அரைத்து அனைத்து வலிகளுக்கும் பூசலாம். இதன் சாறில் மஞ்சள் தூள் கலந்து பூசினால் அது சரும நோயான எக்சைமாவை குணப்படுத்துகிறது.
மூட்டுவலிக்கு முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம் தரும் மூலிகையாகும். அதற்கு நீங்கள் தோசை மாவுடன் இரண்டு கைப்பிடியளவு முடக்கத்தான் கீரை, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ளலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த தோசை நீங்கள் தேங்காய் சட்னியுடன் சாப்பிட அது ஆர்த்ரிட்டிஸ் மற்றும் மூட்டு வலிக்கு தீர்வாகும்.
ஆர்த்ரிட்டிஸ் குணப்படுத்த முடக்கத்தான் துவையல்
சாதத்துடன் சேர்த்து சாப்பிட இதில் செய்யும் துவையல் மிகவும் உகந்தது. ஒரு ஸ்பூன் எண்ணெயை அடுப்பில் காய்ச்சி அதில் உளுந்து, வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, கொஞ்சும் முடக்கத்தான் கீரை சேர்த்து வதக்கி, தேங்காய் துருவல் அரை கப், புளி சிறிதளவு மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால், சூப்பர் சுவையில் துவையல் தயார். இதை சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட ஆர்த்ரிட்டிஸ் அடித்து விரட்டப்படும்.