Benefits of Lychee Seeds : செரிமானத்தை அதிகரிப்பது முதல் பல நன்மைகள் தரும் லிச்சி விதைகளை எப்படி பயன்படுத்துவது?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Lychee Seeds : செரிமானத்தை அதிகரிப்பது முதல் பல நன்மைகள் தரும் லிச்சி விதைகளை எப்படி பயன்படுத்துவது?

Benefits of Lychee Seeds : செரிமானத்தை அதிகரிப்பது முதல் பல நன்மைகள் தரும் லிச்சி விதைகளை எப்படி பயன்படுத்துவது?

Priyadarshini R HT Tamil
Jun 09, 2024 01:30 PM IST

Benefits of Lychee Seeds : செரிமானத்தை அதிகரிப்பது முதல் பல நன்மைகள் தரும் லிச்சி விதைகளை எப்படி பயன்படுத்துவது? லிச்சி பழத்தின் விதைகளை சாப்பிட முடியுமா? அதன் நன்மைகளையும் பக்கவிளைவுகளையும் தெரிஞ்சுக்கங்க!

Benefits of Lychee Seeds : செரிமானத்தை அதிகரிப்பது முதல் பல நன்மைகள் தரும் லிச்சி விதைகளை எப்படி பயன்படுத்துவது?
Benefits of Lychee Seeds : செரிமானத்தை அதிகரிப்பது முதல் பல நன்மைகள் தரும் லிச்சி விதைகளை எப்படி பயன்படுத்துவது?

லிச்சி பழங்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைப்பவை. இவற்றை நீங்கள் மிதமான அளவில் மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். லிச்சியின் கருப்பு நிற விதைகளும் உங்கள் உடலுக்கு நன்மையைத் தருகிறது.

லிச்சியின் விதைகளுக்கு தனி குணம் உள்ளது. லிச்சி விதைகளின் சாறு உங்கள் ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. இதில் சாப்போனின் என்ற உட்பொருள் உள்ளது. இது உங்கள் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. 

லிச்சி விதைகளை சாப்பிடும் முன், பச்சை லிச்சி விதைகளை சரியான முறையில் பதப்படுத்தி பயன்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் அவை உங்கள் ரத்த சர்க்கரை அளவை ஆபத்தான அளவு குறைத்து, உங்கள் உடலை நச்சாக்கிவிடும்.

லிச்சி, அதன் சாறு நிறைந்த இனிப்பு சுவைக்காக அதிகம் விரும்பப்படுகிறது. ஆனால் அதன் விதைகள் அவ்வளவாக பயன்படுத்தப்படுவதில்லை. இந்த விதைகளில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.

லிச்சி விதைகள் உட்கொள்ள உகந்ததா?

லிச்சி விதைகளை ஹைப்போகிளைசின் உள்ளது. இது ஒரு நச்சுப்பொருள் ஆகும். உங்கள் வளர்சிதையில் மாற்றத்தை ஏற்படுத்தி, உங்கள் ரத்த சர்க்கரை அளவை அச்சுறுத்தும் அளவில் குறைத்துவிடும். 

அதற்குப் பெயர் ஹைப்போகிளைசிமியா, அதை நேரடியாக உட்கொள்ளும்போது, இந்த ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது. எனவே லிச்சியின் விதைகளை அப்படியே சாப்பிடக்கூடாது. அது ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா கூறுகிறார்.

லிச்சி விதைகளை பதப்படுத்துவது எப்படி?

லிச்சி விதைகளை முறையாக பதப்படுத்தும்போது, அதன் நச்சு ஹைப்போகிளைசின் கரைக்கப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது.

இந்த விதைகளை பொடி செய்யலாம் அல்லது சாறாக்கலாம். இது உட்கொள்ள பாதுகாப்பானது மற்றும் எண்ணற்ற நன்மைகளையும், பல்வேறு பயன்பாடுகளையும் கொண்டது. லிச்சி விதைகளை காயவைத்து, வறுத்து, ஊறவைத்து என அந்த பதப்படுத்தும் முறைகள் செய்யவேண்டும். இதனால் அதில் உள்ள நச்சுகள் அகற்றப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட லிச்சி விதைகளின் நன்மைகள்

செரிமானத்தை அதிகரிக்கிறது

லிச்சி விதைகள், செரிமான கோளாறுகளுக்கு தீர்வு கொடுத்து, உங்கள் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

வீக்கத்துக்கு எதிரான குணங்கள்

லிச்சி விதைகளின் சாறு, வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது. ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த லிச்சி விதை சாறு, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது. செல்களின் சேதத்தை தடுக்கிறது.

சரும புத்துணர்ச்சி

லிச்சி விதை பொடி அல்லது சாறுகளை உங்கள் சருமத்தில் பூசும்போது, அது உங்கள் சரும பிரச்னைகளை குணப்படுத்துகிறது. முகப்பருக்கள், சரும வெடிப்பு ஆகியவற்றை குணப்படுத்தி, சருமத்துக்கு புத்துணர்ச்சி அளித்து, சரும ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.

மிதமான அளவில் உட்கொள்ள வேண்டும்

லிச்சி விதைப் பொடிகளை மிதமான அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன்தான் சாப்பிடவேண்டும். இந்த அளவு எந்த பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.

இதன் சாறை தண்ணீரில் சேர்த்து அழகுசாதனபொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சாறை நேரடியாக சருமத்திலும் தடவும்போது, அது உங்கள் சரும பிரச்னைகளுக்கு தீர்வுகொடுக்கிறது.

அதிகம் உட்கொண்டால் செரிமான கோளாறுகளை லிச்சி விதைப்பொடிகள் ஏற்படுத்தும். ஹைப்போகிளைசின் பிரச்னைகளை ஏற்படுத்தும். லிச்சி விதையை நீங்கள் பயன்படுத்தும்போது, உங்கள் சுகாதார நிபுணரின் அறிவுரை கட்டாயம் தேவை. உங்களுக்கு உடலில் வேறு பிரச்னைகள் இருந்தால் அவரது அறிவுரைகள் மிகவும் தேவை.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.