மாங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jun 07, 2024
Hindustan Times Tamil
இனிப்பு மற்றும் புளிப்பு கலந்து சுவை கொண்டதாக இருக்கும் மாங்காய் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி சத்துக்களின் களஞ்சியமாக உள்ளது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
மாங்காயில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதால் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் ஆக செயல்பட்டு செல்கள் சேதமடைவதில் இருந்து தடுத்து, நாள்பட்ட இதய நோய் பாதிப்பை தடுக்கிறது
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி சரும ஆரோக்கியத்துக்கு பங்களிப்பு தருகிறது. கொலஜன் உற்பத்தியை மேம்படுத்தி சுருக்கங்கள் ஏற்படுவதை குறைக்கிறது
செரிமான ஆரோக்கியத்துக்கு நல்லது
மாங்காயில் இடம்பிடித்திருக்கும் நொதிகள் கார்ப்போஹைட்ரேட்களை உடைத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது
இதய ஆரோக்கியத்துக்கு நல்லது
இதில் இருக்கும் நியாசின் (வைட்டமின் பி3) ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய நோய் ஆபத்தை குறைக்கிறது. மாங்காயில் இடம்பிடித்திருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தருகிறது
ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு
இனிப்பு சுவை இருந்தாலும் குறைவான கிளைசெமிக் குறியீடு கொண்டதாக இருப்பதால் டயபிடிஸ் நோயாளிகளுக்கு சிறந்ததாக உள்ளது. ரத்த சர்க்கரை அளவை சீராக்குகிறது
கண்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோடீன் அதிகமாக இருப்பதால் கண் பார்வைக்கு நன்மை தருகிறது. கண் தொடர்பான பிரச்னைகள், மாலக்கண், மாகுலர் சிதைவு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கிறது
நீர்இழப்பை தடுக்கிறது
மாங்கையை நன்கு வேக வைத்து அதை அறைத்து பானமாக பருகினால் உடலில் எலெக்ட்ரோலைட்கள் நிரம்புவதோடு, நீர் இழப்பு ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது
சென்னையில் புஷ்பா 2 படக்குழுவினர் 'வைல்ட் ஃபயர்' என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ’கிஸ் கிஸ் கிஸ்கிஸ்ஸ்கிக்’ என்னும் பாடல் வெளியிடப்பட்டது.