தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Venus Luck: பகடையாக உருட்டும் சுக்கிரன்.. பணத்தில் குதிக்கும் ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை உங்களுக்குத்தான்

Lord Venus Luck: பகடையாக உருட்டும் சுக்கிரன்.. பணத்தில் குதிக்கும் ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை உங்களுக்குத்தான்

Suriyakumar Jayabalan HT Tamil
May 26, 2024 09:43 AM IST

Lord Venus: ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி இன்று அவருடைய சொந்த ராசியான ரிஷப ராசியில் புகுந்தார். வருகின்ற ஜூன் 12-ம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார்.

பகடையாக உருட்டும் சுக்கிரன்.. பணத்தில் குதிக்கும் ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை உங்களுக்குத்தான்
பகடையாக உருட்டும் சுக்கிரன்.. பணத்தில் குதிக்கும் ராசிகள்.. சொர்க்க வாழ்க்கை உங்களுக்குத்தான்

ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் கடந்த மே 19ஆம் தேதி இன்று அவருடைய சொந்த ராசியான ரிஷப ராசியில் புகுந்தார். வருகின்ற ஜூன் 12-ம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ரிஷப ராசி

உங்கள் ராசிகள் சுக்கிரன் அது இஷ்ட பலன்களை கொடுக்க போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். இந்த காலகட்டத்தில் பணவரவு பலன்களும் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். குடும்பத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் வாழ்க்கையில் அமையும்.

மிதுன ராசி

உங்கள் ராசிகள் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்து வைத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். அனைத்து காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பணவரவில்லை இந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

கடக ராசி

உங்கள் ராசிகள் சுக்கிரப் பெயர்ச்சி சாதகமாக அமைந்துள்ளது. இதனால் உங்களுக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். அனைத்து வேலைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் கல்வியை திறந்து விளங்குவார்கள்.

சிம்ம ராசி

உங்கள் ராசிகள் சுக்கிரன் முழுமையான பலன்களை கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு உங்களுக்கு மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

துலாம் ராசி

சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்கக்கூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

 

WhatsApp channel