தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Venus : குரு சுக்கிரன் பணத்தில் குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்ட வாழ்க்கை யாருக்கு?.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்க

Guru Venus : குரு சுக்கிரன் பணத்தில் குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்ட வாழ்க்கை யாருக்கு?.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்க

Suriyakumar Jayabalan HT Tamil
May 26, 2024 05:31 PM IST

Guru Venus: குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு திரிகோண ராஜயோகத்தை கொடுக்க உள்ளது.

குரு சுக்கிரன் பணத்தில் குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்ட வாழ்க்கை யாருக்கு?.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்க
குரு சுக்கிரன் பணத்தில் குதிக்கும் ராசிகள்.. அதிர்ஷ்ட வாழ்க்கை யாருக்கு?.. உங்க ராசி இதில் இருக்கா பாருங்க

குருபகவான் நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர். இவர் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார் இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

தற்போது மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். குரு பகவான் ஒரு ஆண்டு காலம் இது ராசியில் பயணம் செய்வார். ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு கடந்த மே 19ஆம் தேதி அன்று புகுந்தார். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும்.

தற்போது குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு திரிகோண ராஜயோகத்தை கொடுக்க உள்ளது. அதை பெறுகின்ற ராசிகள் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

விருச்சிக ராசி

உங்கள் ராசியில் திரிகோண ராஜயோகம் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பல துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கியமான காலங்களில் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும்.

கடக ராசி

திரிகோண ராஜ யோகம் உங்களுக்கு சிறப்பாக செயல்பட உள்ளது. பணத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பண வரவு அதிகரிக்கும். கடன் தொல்லையால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எந்த வேலையை தொடங்கினாலும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். எளிதில் இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்ம ராசி

யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான வெற்றிகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் போதுமான நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளிக் கொடுப்பார்கள். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். புதிய யோசனைகள் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel