Ice Water Wash: அலியா பட் முதல் சமந்தா வரை ஐஸ் வாட்டரில் முகத்தை கழுவுவது ஏன்? இதுல இவ்வளவு பெனிபிட்ஸ் இருக்கா?
Ice Water Wash: சமீப காலமாக சமூக வலைத் தளங்களில் பெரும்பாலானோர் ஐஸ் வாட்டரில் காலை எழுந்ததும் முகத்தை டிப் செய்து வீடியோ வெளியுடுவதை பாரக்க முடிகிறது. இது போல செய்வதால் முகத்தில் பல மாறுதல்கள் உண்டாகின்றன.

சமூகவலைத்தளத்தின் அசுர வளர்ச்சிக்கு பின்னர் அழகு குறிப்புகளும், மருத்துவ குறிப்புகளும் ஏக்கச்சக்கமாக பெருகி வருகின்றன. அதில் சிலவற்றை பிரபலம் அடைந்தவர்களும் பின்பற்றி வருகின்றனர். அதில் ஒன்று தான் காலை எழுந்தவுடன் அல்லது மேக்கப் போடும் முன்பு முகத்தை ஐஸ் தண்ணீரில் முழுவதுமாக மூழ்க விடுவது.
சமீப காலமாக சமூக வலைத் தளங்களில் பெரும்பாலானோர் இந்த ஐஸ் வாட்டரில் காலை எழுந்ததும் முகத்தை டிப் செய்து வீடியோ வெளியுடுவதை பாரக்க முடிகிறது. இது போல செய்வதால் முகத்தில் பல மாறுதல்கள் உண்டாகின்றன. இதனை இந்தியா சினிமாவில் முக்கிய நடிகைகளான அலியா பட், தமன்னா, சமந்தா உட்பட பலர் பின் பற்றுகின்றனர். இதில் உண்மையாகவே உள்ள பலன்களை இங்கு காண்போம்.
புத்துணர்ச்சி
காலை எழுந்ததும் புத்துணர்ச்சி பெறுவதற்காக டீ குடிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவை வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த ஐஸ் வாட்டரில் முகத்தை டிப் செய்வதால் நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சி அடையும். இதன் வாயிலாக அன்றையயா நாள் சிறப்பாக இருக்கும். முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, சிறந்த தோற்றம் வரும். மேலும் கண்களுக்கு கீழே உள்ள வீங்கியது போன்ற தோற்றம் சரியாகும். தூங்கி எழுந்ததால் இவ்வாறு இருக்கும். பொதுவாகவே குளிர்ந்த நீர் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே முகம் பொலிவாக தெரிய இது உதவுகிறது.
