Benefits of Cinnamon : பட்டையின் 10 நன்மைகள் என்ன தெரியுமா? இதய ஆரோக்கியம் முதல் உடல் எடை குறைப்பு வரை பலன்கள் இதோ!
Benefits of Cinnamon : பட்டையின் 10 நன்மைகள் என்ன தெரியுமா? இதய ஆரோக்கியம் முதல் உடல் குறைப்பு வரை உங்கள் உடலுக்கு பல பலன்களை தருகிறது, இந்த பட்டை.

பட்டை நாம் அதிகம் பயன்படுத்தும் ஒரு மசாலாப்பொருள்தான். உலகம் முழுவதும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பட்டையிலும் குறிப்பாக சுருள் பட்டைதான் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. இந்தப்பட்டை இனிப்பு, காரம், மசாலா என பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. பட்டையாகவும், இடித்து பொடியாகவும் இந்தப்பட்டை பயன்படுத்தப்படுகிறது. பட்டை எண்ணெயும் தயாரிக்கப்படுகிறது. பட்டை மரத்தில் இருந்து அதன் பட்டைகளை பிரிந்து எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இதில் எண்ணற்ற வகைகள் உண்டு. இதமான, மரத்தின் மணம் கொண்டிருக்கும் இந்தப்பட்டை. இந்த மணம், நமது மூக்கை துளைக்கும். பயன்படுத்தும்போது நரம்புகளை அமைதிப்படுத்தும். இதை பட்டையாகவும், பொடியாகவும் வாங்கிக்கொள்ளலாம். பட்டையை அரைக்கும்போது அதன் மணம் அதிகரிக்கிறது. பொடியாக வாங்குவதைவிட பட்டையாக வாங்குவது சிறந்தது. பட்டைப்பொடி கேக், இனிப்புகள், பழ சாலட்களில் சேர்க்கப்படுகிறது. சூடான பானங்களிலும் கலக்கப்படுகிறது. அசைவ உணவு தயாரிக்க அவசியமானது பட்டை. இனிப்பு மற்றும் காரம் இரு சுவைகளையும் கொண்டது. இதனால் இனிப்பு, காரம் என இரண்டு வகை உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பட்டைப்பொடியை அதன் மணத்தை வைத்தே கண்டுபிடித்துவிடலாம்.
பட்டை, எலுமிச்சை, தேன்
பட்டை, எலுமிச்சை மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து பருகும்போது, அது உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது. பல்வேறு தொற்றுகளில் இருந்தும் உங்களைக்காக்கிறது. பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, எலுமிச்சை மற்றும் தேன் கலந்து பருகவேண்டும். இதில் நீங்கள் ஏலக்காய், இஞ்சி, புதினா, மிளகு என அனைத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.