Beetroot Jam : வீட்டிலே செய்யலாம் பீட்ரூட் ஜாம்! நிமிடங்களில் செய்து குழந்தைகளை அசத்தலாம்!-beetroot jam beetroot jam can be made at home make it in minutes and wow the kids - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beetroot Jam : வீட்டிலே செய்யலாம் பீட்ரூட் ஜாம்! நிமிடங்களில் செய்து குழந்தைகளை அசத்தலாம்!

Beetroot Jam : வீட்டிலே செய்யலாம் பீட்ரூட் ஜாம்! நிமிடங்களில் செய்து குழந்தைகளை அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil
Sep 09, 2024 01:52 PM IST

Beetroot Jam : வீட்டிலே செய்யலாம் பீட்ரூட் ஜாம், ஆரோக்கியம் நிறைந்த ஜாமை நிமிடங்களில் செய்து குழந்தைகளை அசத்தலாம். பிரட்டில் தொட்டு மகிழ்ச்சியாக சாப்பிடலாம்.

Beetroot Jam : வீட்டிலே செய்யலாம் பீட்ரூட் ஜாம்! நிமிடங்களில் செய்து குழந்தைகளை அசத்தலாம்!
Beetroot Jam : வீட்டிலே செய்யலாம் பீட்ரூட் ஜாம்! நிமிடங்களில் செய்து குழந்தைகளை அசத்தலாம்!

பீட்ரூட்டின் நன்மைகள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது

வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது

ரத்த அழுத்தத்தை குறைக்கும்

உடற்பயிற்சியின் ஆற்றலை அதிகரிக்கும். உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும்

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

மெனோபாஸ்க்கு பிந்தைய காலத்திற்கு பயனுள்ளது

ரேநாய்ட் ஃபினாமினன் அறிகுறிகளைப் போக்குகிறது

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – கால் கப் (பொடியாக நறுக்கியது)

பேரிட்சை பழம் – 10 (விதைகள் நீக்கியது)

நெய் – தேவையான அளவு

சர்க்கரை – ஒரு கப்

முந்திரி, பாதாம் – கால் கப் (பொடித்தது)

செய்முறை

பீட்ரூட்டை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும். பேரிட்சை பழத்தை விதைகளை நீக்கிவிட்டு இரண்டையும் குக்கரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதை ஆறவைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் சர்க்கரை, (வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை, பிரவுன் சுகர் வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம்) சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு கரைந்து வந்தவுடன், அதில் அரைத்த பீட்ரூட் கலவையை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். நன்றாக கலந்துவிட்டு, தண்ணீர் வற்றி ஜாம் பதம் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

தேவைப்படும்போது இடையில் நெய் சேர்த்துக்கொள்ளவேண்டும். இறக்கும்போது பொடித்து வைத்த முந்திரி பாதாம் சேர்த்து இறக்கினால் சூப்பர் சுவையான பீட்ரூட் ஜாம் தயார்.

இதை வெள்ளை பிரட், பிரவுன் பிரட், சப்பாத்தி, பூரி என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

கடைகளில் செயற்கை நிறங்கள், பிரசர்வேட்டிவ்கள் சேர்த்ததை பயன்படுத்தாதீர்கள். வீட்டில் நீங்களே தயாரிக்கும்போது அது ஆரோக்கியம் தருவதாக இருக்கும். இதை ஃபிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.

குழந்தைகள் எப்போதும் கடைகளில் விற்கும் துரித உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களை நாம் தடுக்கவும் முடியாது. எனவே வீட்டிலே இதுபோன்றவற்றை செய்துகொடுத்தால் அவர்களுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். இதுபோன்ற உணவுகளை சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.