Morning Quotes : வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பி வழிய வேண்டுமா? அதற்கு உங்கள் மூளையை இப்படி பழக்குங்கள்!
Morning Quotes : வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பி வழிய வேண்டுமா? அதற்கு உங்கள் மூளையை இப்படி பழக்குங்கள். என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள்.
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பி வழிய வேண்டுமெனில், உங்களின் சந்தோசம் இரட்டிப்பாக வேண்டுமெனில், அதற்கு உங்கள் மூளையை இப்படி பழக்கப்படுத்துங்கள். அதற்கு உதவும் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அன்பின் சிறிய நடவடிக்கைகளை பழகுவது முதல் நன்றியுடன் நடந்துகொள்வது வரை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை வரவழைத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள். உங்களுக்கு இங்கு சில விஷயங்களை பட்டியலிடுகிறோம். அதில் இருந்து நீங்கள் உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். சில எளிய அன்றாட பழக்கவழக்கங்கள் உங்களின் மூளையை மகிழ்ச்சிக்காக பயன்படுத்த உதவும். அது உங்களுக்கு நீண்ட நாள் மகிழ்ச்சியைத்தரும். அதை தெரிந்துகொண்டு உங்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கவும், நீண்ட நாளாகவும் மாற்றுங்கள். மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்.
நன்றி பழகுங்கள்
உங்களிடம் என்ன இல்லை என்பதில் நீங்கள் கவனம் செலுத்துவதற்கு பதில், உங்கள் வாழ்வில் எது தவறாக செல்கிறது எனப்பாருங்கள். உங்களின் கவனத்தை உங்கள் வாழ்வில் நடந்த எண்ணற்ற நேர்மறை நிகழ்வுகளுடன் பொருத்திப்பாருங்கள். நன்றி என்ற உணர்வுதான் உங்களின் மூளையில் வாழ்வின் நேர்மறை விஷயங்களின் கவனம் செலுத்தச் செய்யும். அது உங்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கும்.
உங்கள் அன்றாட வாழ்வில் மனநிறைவு
உங்களின் அன்றாட வாழ்வில் நீங்கள் மனநிறைவுடன் இருப்பது மிகவும் அவசியம். அது உங்களுக்கு அந்த நிமிடத்தில் வாழ உதவும். வாழ்வை முழுமையாகவும் வாழச்செய்யும். உங்களுக்கு திருப்தியைத்தரும். உங்களின் மனஅழுத்ததைப் போக்கும். வாழ்வில் சில நல்ல விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். இது உங்களின் மனநிலையை மகிழ்ச்சியாக்கும்.
நேர்மறை உறவுகள்
உங்களைச் சுற்றி நேர்மறை உறவுகளை எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள். இருவருக்கும் வாழ்வைப்பற்றிய நேர்மறை எண்ணங்கள் மட்டும்தான் இருக்கவேண்டும். அது உங்கள் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். இது உங்களுக்கு அன்பு, மகிழ்ச்சி, சேர்ந்திருத்தல் போன்ற நல்ல பழக்கங்களைக் கொண்டுவரும்.
சிறிய சாதிக்கக்கூடிய இலக்குகளை நிர்ணயுங்கள்
உங்களின் தினசரி வேலைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். அவற்றை சாதிக்க முடிந்த இலக்குகளாக மாற்றிக்கொள்ளுங்கள். அதற்காக நாள் முழுவதும் உழைத்துக்கொள்ளுங்கள். அவற்றை நீங்கள் முடித்துவிட்டாலே உங்களுக்கு சாதித்த உணர்வைத்தரும். இது உங்களின் தன்னம்பிக்கைளை வளர்க்கும்.
அன்பு
உங்கள் வாழ்வில் அன்பை அதிகரிக்கும் அனைத்தையும் செய்யுங்கள். மற்றவர்களுக்கு உதவும்போது உங்கள் உடல் தானாவே மகிழ்ச்சி ஹார்மோன்களை சுரக்கச்செய்கிறது. அது உங்களை மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் வைக்கிறது. அது நீங்கள் பணம் கொடுப்பதாக இருக்கட்டும் அல்லது ஒருவருக்கு உதவுவதாக இருக்கட்டும் அல்லது நீங்கள் ஒருவரை பார்த்து புன்னகைப்பதாக இருக்கட்டும் அல்லது ஒருவரின் நாளை உருவாக்குவதாக இருக்கட்டும். மற்றவர்களிடம் அன்பு காட்டுங்கள். அது உங்களின் மனநிலையை மாற்றும்.
வளர்ச்சி மனநிலை
எப்போதும் வளர்ச்சி மனநிலையிலேயே இருங்கள். எப்போதும் புதிய சவால்கள் மற்றும் வாய்ப்புக்களை எதிர்நோக்கியிருங்கள். அது வாழ்விலாக இருக்கட்டும் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையிலாக இருக்கட்டும் சவால்களுக்கு காத்திருங்கள். நீங்கள் வெல்லாம் அல்லது உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்கலாம். எந்த வகையிலாவது அது உங்களுக்கு வெற்றியைத்தரும். நீங்கள் ஒரு நபராக வளர்வதற்கு அது உங்களுக்கு உதவும். உங்களின் தன்னம்பிக்கையை அது வளர்த்துவிடும்.
எதிர்மறை எண்ணங்களை கைவிடுங்கள்
எதிர்மறை எண்ணங்களை நோக்கிய உங்களின் தொடர்பை குறைத்துக்கொள்ளுங்கள். அது சமூகவலைதளங்களில் இருந்து கிடைப்பதாக இருக்கலாம் அல்லது உங்களைச் சுற்றியுள்ள நச்சு நபர்கள் ஏற்படுத்துவதாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இது உங்களுக்கு நீங்கள் நேர்மறை எண்ணங்களைச் சுற்றி இருக்க உதவும். அதில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள். உங்களின் மனநிலை மற்றும் சிந்தனைகளை மேம்படுத்துங்கள்.
அன்றாட உடற்பயிற்சி
நீங்கள் அன்றாடம் உடற்பயிற்சிகள் செய்வது உங்கள் உடலில் எண்டோர்ஃபின்களைச் சுரக்கச் செய்யும். அது உங்களின் மனநிலையை மாற்றும். மேலும் அது உங்கள் வாழ்வில் உங்களுக்கு நேர்மறை எண்ணங்களை நிறைந்தோடச் செய்யும்.
தொடர்புடையை செய்திகள்