தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ashwagantha Benefits For Sex Life : செக்ஸ் பிரச்னைகளால் அவதியா பெண்களே? இதோ அஷ்வகந்தா செய்யும் அற்புதம் பாருங்க!

Ashwagantha Benefits for Sex Life : செக்ஸ் பிரச்னைகளால் அவதியா பெண்களே? இதோ அஷ்வகந்தா செய்யும் அற்புதம் பாருங்க!

Priyadarshini R HT Tamil
Jun 24, 2024 10:13 AM IST

Ashwagantha Benefits for Sex Life : செக்ஸ் பிரச்னைகளால் அவதிப்படும் பெண்களுக்கு, அஷ்வகந்தா மூலிகை அற்புதம் செய்கிறது.

Ashwagantha Benefits for Sex Life : செக்ஸ் பிரச்னைகளால் அவதியா பெண்களே? இதோ அஷ்வகந்தா செய்யும் அற்புதம் பாருங்க!
Ashwagantha Benefits for Sex Life : செக்ஸ் பிரச்னைகளால் அவதியா பெண்களே? இதோ அஷ்வகந்தா செய்யும் அற்புதம் பாருங்க!

அஷ்வகந்தா ஆயுர்வேத மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து பொருள். இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அஷ்வகந்தா எவ்வாறு செக்ஸ் வாழ்க்கைக்கு உதவுகிறது என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். செக்ஸ் வாழ்க்கை சிறப்பதற்கு மட்டுமின்றி அஷ்வகந்தா உடலுக்கும் பல்வேறு நன்மைகளைத் தரும் ஒரு மூலிகை என்பதால் அதை அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

இன்றைய பரபரப்பான காலத்தில் பயம், பதற்றம் நிறைந்த வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே மகிழ்ச்சிகரமான செக்ஸ் வாழ்க்கை என்பது சவாலான ஒன்றாக மாறிவிட்டது. அதற்காக இயற்கை நமக்கு சில நன்மைகளைக் கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் இந்த மூலிகை அஷ்வகந்தா.

அதில் எண்ணிலடங்கா மருத்துவ பலன்கள் உள்ளன. அது செக்ஸ் வாழ்க்கை சிறக்கவும் உதவுகிறது. அதன் மூலம் உங்கள் உணர்வுகள் தூண்டப்படுவதுடன், கருவுறும் திறனை அதிகரிக்க முடியும். உங்கள் உடலுறவு இன்பத்தையும் அதிகரிக்கச்செய்கிறது. ஒரு முழுமையான செக்ஸ் வாழ்க்கைக்கான சாவியாக அஷ்கந்தா உள்ளது. அஷ்வகந்தா உங்கள் செக்ஸ் வாழ்க்கைக்கு எவ்வாறு உதவுகிறது என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.

தாவரவியல் பெயர்

அஷ்வகந்தாவின் தாவரவியல் பெயர் வித்தானியா சோம்னிஃபெரா, இது ஒரு மூலிகை பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுகிறது. அஷ்வகந்தா செக்ஸ் வாழ்க்கைக்கு உதவுகிறது என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ட்ரெண்டிங் செய்திகள்

உணர்ச்சிகளை தூண்டுகிறது

அஷ்வகந்தாவில் உள்ள அப்ஃரோடைசியாக், பெண் மற்றும் ஆண் இருவருக்குமே காம உணர்வை தூண்டுகிறது. இது செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை இணையர்களிடையே தூண்டி, ஒட்டுமொத்த பாலியல் திருப்திக்கு வழிவகுக்கிறது. பெண்களுக்கு ஆர்கஸம் அதிகரிக்க உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

உங்களின் செக்ஸ் மனநிலையை அதிகரிக்கிறது, அஷ்வகந்தாவில் உடலுறவு கொள்ளும் மனநிலையை அதிகரிக்கச்செய்யும் மூலப்பொருட்கள் உள்ளன. ஆரோக்கியமான மனநிலையை அதிகரிப்பதுடன், பயம் மற்றும் பதற்ற மனநிலையை குறைக்கிறது. செக்ஸ் மனநிலைக்கு நேர்மறையாக உதவி உங்கள் இன்பத்தை இரட்டிப்பாக்கிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது

அஷ்வகந்தாவில் உள்ள மூலப்பொருட்கள் உடலுக்கு மனஅழுத்தத்தை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வழங்குவதால், பயம், பதற்றத்தை போக்க உதவுகிறது. அது மறைமுகமாக செக்ஸில் ஆர்வம் அதிகரிக்க உதவுகிறது.

உடலுக்கு வலுவை அதிகரிக்க உதவுகிறது

உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, மயக்கம் போன்றவற்றை தவிர்த்து செக்ஸில் நன்றாக செயல்பட உதவுகிறது.

ஹார்மோன் சமநிலையை பேணுகிறது

உடலில் ஹார்மோன் சமநிலையை பேணுவதற்கு அஸ்வகந்தா உதவுகிறது. டெஸ்டோஸ்ரோன் என்ற ஹார்மோன்தான் செக்ஸ் உணர்வுகளை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதன் அளவை பராமரிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆணுறுப்பின் விறைப்புத்தன்மைக்கு உதவுகிறது

பிறப்புறுப்பில் சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் ஆணுறுப்பு நன்றாக செயல்படுகிறது. ஸ்பர்ம்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. இதை மாத்திரைகளாகவும், பொடியாகவும் பயன்படுத்தலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.