Exclusive : அர்த்த ராத்திரியில் அசிடிட்டியால் அவதியா? உடனடி நிவாரணம் பெற என்ன செய்யலாம் - உணவியல் நிபுணர் அறிவுரை!
இந்த மூன்று வழிகளைப் பின்பற்றினாலே போதும் அசிடிட்டியை அடித்து விரட்டலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அசிடிட்டி உங்கள் உடலில் எண்ணற்ற அசவுகர்யங்களை ஏற்படுத்துகிறது. இது உங்கள் வயிற்றுக்கு எண்ணற்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் ஒன்றாகும். அசிடிட்டி ஏற்படும்போது, வயிறு உப்புசம், நெஞ்சு எரிச்சல் போன்ற கோளாறுகள் ஏற்பட்டு மேலும் தொல்லையைத் தருகிறது. இதனால் உங்களின் நாளே சிதைந்துவிடுகிறது. நாள் முழுவதும் வாயுத்தொல்லை ஏற்படுகிறது. சில நேரங்களில் அசிடிட்டிக்கு பயந்து நீங்கள் சில உணவுகளையும் தவிர்த்துவிடுகிறீர்கள். அந்த உணவுகள் வாயுத்தொல்லையை ஏற்படுத்தும் என்று கூறுகிறீர்கள். ருஜீதா திவாகர் என்ற உணவியல் நிபுணர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அசிடிட்டி பிரச்னைகளை எதிர்கொள்ளும் வழிகள் என்னவென்று அவர் தெரிவித்துள்ளார். அசிடிட்யை தவிர்க்க குறிப்பிட்ட பழக்கவழக்கங்களைப் பின்பற்ற அவர் அறிவுறுத்துகிறார். சிலவற்றை நாம் தவிர்க்கவேண்டும் என்று கூறுகிறார். எனவே அசிடிட்டி பிரச்னைகளால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுவதைக் கேளுங்கள்.
தாமத உணவு மற்றும் உறக்கம் தவிர்க்கவும்
ருஜீதா திவாகர், தாமதமாக சாப்பிடக்கூடாது என்பதை கோடிட்டு காட்டுகிறார். நீங்கள் சரியான நேரத்தில் உணவு உட்கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு அசிடிட்டி பிரச்னைகளே ஏற்படாது என்று கூறுகிறார். நீங்கள் சரியான நேரத்தில் உறங்கினாலும் உங்களுக்கு அசிடிட்டி தொல்லைகள் ஏற்படாது என்கிறார். மற்ற காரணங்கள் மற்றும் பணி காரணமாக நீங்கள் உணவு உட்கொள்வதை தவிர்க்கிறீர்கள் அல்லது தள்ளிப்போடுகிறீர்கள். நீங்கள் இரவில் சரியாக உறங்கவில்லையென்றாலும், காலையில் ஓய்வின்றி உணர்கிறீர்கள். இதனால் அடுத்த நாள் காலையிலும் அசிடிட்டி உங்களுக்கு ஏற்படுகிறது. எனவே சரியான நேரத்தில் உணவு உட்கொள்வது மற்றும் தரமான உறக்கம் ஆகியவை அசிடிட்டியைப் போக்கும் என்று கூறுகிறார். எனவே அசிடிட்டியை நீங்கள் தவிர்க்க வேண்டுமெனில் இவற்றை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
மதிய உணவில் கட்டாயம் மோர்
அசிடிட்டியால் உங்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலைப் போக்க நீங்கள் கட்டாயம் ஒரு டம்ளர் மோரை மதிய உணவுடன் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதில் கொஞ்சம் பெருகாயத்தூள் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறார். இவையிரண்டும் உங்கள் வயிற்றுக்கு இதமளிக்கும். அசிடிட்டியால் ஏற்படும் வயிறு அசவுகர்யங்களைப் போக்கும். அசிடிட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் மோர் பருகுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
வெட்டிவேர் தண்ணீர்
அசிடிட்டிக்கு தீர்வளிக்கும் மற்றொரு சிகிச்சையாக அவர் வெட்டிவேர் தண்ணீரைக் குறிப்பிடுகிறார். ருஜீதா திவாகர் கூறுகையில், வெட்டி வேர் தண்ணீரை நீங்கள் பருகும்போது, அது உங்களின் அசிடிட்யை உடனடியாப்போக்குகிறது. இந்த தண்ணீரை தயாரிப்பது எப்படி என்று வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளங்கள். எனவே உங்கள் அசிடிட்டி பிரச்னைகளுக்கு இந்த மூன்று தீர்வுகளையும் நீங்கள் பயன்படுத்தி பலன்பெறலாம். எனவே எந்த நேரத்தில் அசிடிட்டி பிரச்னைகள் ஏற்பட்டாலும், இந்த மோர் மற்றும் வெட்டிவேர் தண்ணீர் அதற்கு உடனடி நிவாரணம் தரும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்