உணர்வு ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறீர்களா? இதோ அதன் 5 அறிகுறிகள் இவைதான்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உணர்வு ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறீர்களா? இதோ அதன் 5 அறிகுறிகள் இவைதான்!

உணர்வு ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறீர்களா? இதோ அதன் 5 அறிகுறிகள் இவைதான்!

Priyadarshini R HT Tamil
Oct 18, 2024 12:02 PM IST

உணர்வு ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறீர்களா? இதோ அதன் 5 அறிகுறிகள் இவைதான். என்னவென்று தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.

உணர்வு ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறீர்களா? இதோ அதன் 5 அறிகுறிகள் இவைதான்!
உணர்வு ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறீர்களா? இதோ அதன் 5 அறிகுறிகள் இவைதான்!

நீங்கள் மனரீதியாகவும் ஒருவரை உடல் ரீதியாக தண்டித்த அளவுக்கு தண்டிக்க முடியும். ஆனால் அவற்றுக்கு நாம் பெருமளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உங்கள் மன ஆரோக்கியத்தை சத்தமின்றி குலைப்பதில் முதலிடம் பிடிப்பது உணர்வு ரீதியான துன்புறுத்தல்தான். இது ஒருவரின் தன்னம்பிக்கையை குலைத்துவிடும். உங்கள் நலன் கருதி உணர்வு ரீதியான துன்புறுத்தல் குறித்து முழுவதும் தெரிந்துகொள்ளுங்கள்.

உணர்வு ரீதியான துன்புறுத்தல்

உணர்வு ரீதியான துன்புறுத்தல் என்பது ஒருவரின் உணர்வு நலனை முற்றிலும் பாதிக்கக்கூடிய அளவுக்கு கடுமையான சொற்களால் பேசுவது என்பதாகும். உணர்வு ரீதியான துன்புறுத்தல் என்பது ஒருவரின் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். இதை நீங்கள் கண்டுகொள்ளாவிட்டால் நாளடைவில் உங்கள் மனஆரோக்கியம் கெடும். இதனால் பயம், பதற்றம், மனஅழுத்தம் பாதித்து, இறுதியில் ஒருவரின் தன்னம்பிக்கையே பறிபோய்விடும். எந்த உறவிலும் உணர்வு ரீதியான துன்புறுத்தல் இருக்கலாம். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் காதல் உறவிலும், உடல் ரீதியான தாக்குதல், வார்த்தைகளில் திட்டுவது என துன்புறுத்தல்கள் இருக்கலாம்.

அதன் அறிகுறிகள்

அதிக கட்டுப்பாடுகள் அல்லது கண்காணிப்பு

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ளவும், உங்களின் ஃபோனை பரிசோதிக்கல அல்லது சிறிய விஷயங்களை கூட கண்காணித்தால், அது உணர்வு ரீதியான துன்புறுத்தலில் வரும். அதிகம் கட்டுப்படுத்துவது, நம்பிக்கையின்மையை காட்டுகிறது. உங்களின் ஒவ்வொரு நகர்வையும் ஒருவர் கண்காணித்துக்கொண்டே இருந்தால், அது உங்களின் சுதந்திரத்தை முற்றிலும் பாதிக்கும். உங்களின் தனித்தன்மையையும் பாதிக்கும்.

தொடர்ந்து திட்டுவது

உங்களுக்கு நெருக்கமானவர்கள் அவர்களின் பிரச்னைகளுக்கெல்லாம் உங்களை தொடர்ந்து திட்டிக்கொண்டே வந்தால், அது மற்றொரு அறிகுறி. உணர்வு ரீதியாக துன்புறுத்துபவர்கள், நீங்கள்தான் அவர்களின் மனநலனுக்கு காரணம் என்று குறிப்பிடுவார்கள். இவை அனைத்துக்கும் நீங்களே காரணம் என்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் பாதிக்கப்பட்டால் அது உங்களுக்கு நல்லதல்ல. எனவே மற்றவர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் காரணமே கிடையாது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.

கேஸ் லைட்டிங்

உங்களையே உங்கள் மீது சந்தேகம் கொள்ள வைத்துவிடுவார்கள். உங்களின் உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் நினைவுகள் மீதே உங்களுக்கு சந்தேகம் ஏற்படும். உங்களுக்கே உங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு, நாளடைவில் உங்களின் உண்மைத்தன்மை பாதிக்கப்படும். இதில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களையே கேள்விகள் கேட்டு அவர்களே பாதிக்கப்படுவார்கள்.

பாசம் காட்டுவதில் வேசம்

நீங்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளும்போது பாசம் காட்டுவார்கள். நீங்கள் அவர்களை ஏற்கவில்லை அல்லது அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லையென்றால், அனைத்து பாசமும் காணாமல்போய்விடும். உங்களை தனித்துவிட்டுவிடுவார்கள். ஆரோக்கியமான உறவில், அன்பு மற்றும் ஆதரவு என்பது நிபந்தனையற்றதாக இருக்கும். உணர்வு ரீதியாக துன்புறுத்துபவர்கள், பாசத்தை கட்டுப்படுத்தும் கருவியாகக் கொள்வார்கள்.

மன தடுமாற்றம்

உணர்வு ரீதியான துன்புறுத்துபவர்கள் எப்போதும், கடும் மன தடுமாற்றத்தில் இருப்பார்கள். ஒரு நேரம் கடும் கோவத்தில் இருப்பார்கள். சில நேரங்களில் மகிழ்ச்சியாக காட்சியளிப்பார்கள். இதனால் அவர்களுக்கு பதற்றம் அதிகம் இருக்கும். உணர்வு ரீதியான அவர்கள் நிலையின்றி இருப்பார்கள். இதனால் அவர்கள் மன ரீதியாக மீண்டெழுவதில் சிரமப்படுவார்கள். அவர்களுக்கு உணர்வு ரீதியான பாதுகாப்பு என்பது சிரமமான ஒன்றாகிவிடும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.