தொங்கும் தொப்பையால் சங்கடாமா? இந்த 10 பானங்களை பருகுங்கள்! பெல்லி தெறித்து ஓடும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  தொங்கும் தொப்பையால் சங்கடாமா? இந்த 10 பானங்களை பருகுங்கள்! பெல்லி தெறித்து ஓடும்!

தொங்கும் தொப்பையால் சங்கடாமா? இந்த 10 பானங்களை பருகுங்கள்! பெல்லி தெறித்து ஓடும்!

Priyadarshini R HT Tamil
Dec 24, 2024 07:00 AM IST

தொப்பையை தெறித்து ஓடவைக்கும் பானங்கள்.

தொங்கும் தொப்பையால் சங்கடாமா? இந்த 10 பானங்களை பருகுங்கள்! பெல்லி தெறித்து ஓடும்!
தொங்கும் தொப்பையால் சங்கடாமா? இந்த 10 பானங்களை பருகுங்கள்! பெல்லி தெறித்து ஓடும்!

சீரகத் தண்ணீர்

நீங்கள் ஒரு ஸ்பூன் சீரகத்தை தண்ணீரில் ஓரிரவு ஊறவைக்கவேண்டும். அடுத்து அதை காலையில் எழுந்து காய்ச்ச வேண்டும். இதை தினமும் வெறும் வயிற்றில் பருகினால் உங்களுக்கு நல்ல பலன் கிட்டும். சீரக தண்ணீர் உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. செரிமானத்தைத் தூண்டுகிறது. இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்றுகிறது.

ஓமம் தண்ணீர்

ஓமம் தண்ணீரும் உங்களுக்கு செரிமானத்தைக் கொடுக்கிறது. இது உங்கள் வயிறு உப்புசத்தைக் குறைக்கிறது. இதில் உள்ள எண்சைம்கள் உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் எண்சைம்களை அதிகரிக்கிறது. எனவே ஒரு ஸ்பீன் ஓமத்தை நீங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து, அதை சூடாக பருகினால், அது உங்கள் தொப்பையில் உள்ள கொழுப்பை கரைத்த வெளியேற்ற உதவுகிறது.

துளசியுடன் கிரீன் டீ

துளசியை நீங்கள் கீரின் டீயுடன் சேர்த்து பருகும்போது, அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவு அதிகரிக்கிறது. இது உங்கள் உடலின் வளர்சிதையை மேம்படுத்துகிறது. இது அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கிறது. இது உங்கள் வயிற்றிச் சுற்றி தங்கியிருக்கும் கொழுப்பை அகற்றுகிறது. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தேன் மற்றும் எலுமிச்சை தண்ணீர்

இளஞ்சூடான தண்ணீரில் தேன் மற்றும் எலுமிச்சை கலந்து பருகும்போது, உங்கள் உடலில் உள்ள கழிவுகள் நீக்கப்பட்டு, உங்கள் செரிமான ஆரோக்கியத் அதிகரிக்கிறது. எனவே தொப்பையைக் குறைக்க இதை தினமும் வெறும் வயிற்றில் பருகவேண்டும். இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கிறது.

மஞ்சள் பால்

இளஞ்சூடான பாலில் மஞ்சள் கலந்து பருகும்போது, குறிப்பாக இதை இரவில் செய்யவேண்டும். அது உங்களுக்கு கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. இது நல்ல உறக்கத்தைக் கொடுக்கிறது. மஞ்சளில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உங்கள் உடலின் வளர்சிதையை முறைப்படுத்த உதவுகின்றன. இது உங்களின் உடலில் சேரும் கொழுப்பைக் குறைக்கிறது.

வெந்தயத் தண்ணீர்

வெந்தயத்தை ஓரிரவு ஊறவைத்துவிடவேண்டும். இதை பசியைத்தூண்டும் மற்றும் உடல் வளர்சிதையை மேம்படுத்தும் உட்பொருட்களை வெளியிடும். எனவே இந்த தண்ணீரை பருகுவது உங்களுக்கு காலையில் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

நெல்லிக்காய்ச் சாறு

நெல்லிச்சாறில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலில் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலின் கொழுப்பை எரிக்கிறது. எனவே நெல்லிக்காய் சாறு பருகும்போது, அதை தேனுடன் கலந்து பருகவேண்டும். இதை நீங்கள் வெறும் வயிற்றில் பருகினால், அது உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரும்.

வரமல்லி தண்ணீர்

கொதிக்க வைத்த வரமல்லி தண்ணீரை பருகுவது, உங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது உங்களின் வயிற்றில் உள்ள தொப்பை கரைத்து ஓடவைக்கிறது. இது உங்கள் கல்லீரல் நல்ல முறையில் இயங்க உதவுகிறது. உங்கள் உடலின் வளர்சிதையை அதிகரிக்கிறது.

இஞ்சி டீ

இஞ்சி துண்டுகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, அந்த தண்ணீருடன் தேன் கலந்து பருகினால், அது உங்கள் தொப்பையை இயற்கையான முறையில் குறைக்க உதவுகிறது.

மசாலா மோர்

உப்பு, வறுத்த சீரகம், சிட்டிகை பெருங்காயத்தூள் கலந்த மோரை பருகும்போது, உங்கள் செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது. உங்கள் வயிறு உப்புசம் குறைகிறது. இந்த குளுமையான பானம், உங்கள் உடல் எடையை முறையாகப் பாராமரிக்கவும், உங்கள் தொப்பையை தட்டையாக்கவும் உதவுகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.