சமைக்கும் போது இதை எல்லாம் கவனிங்க.. இல்லைன்னா அது உங்க உயிருக்கே உலை வச்சிரும்.. ஜாக்கிரதை
- நாம் சமைக்கும் பாத்திரங்கள் எந்த பொருளால் அல்லது உலோகத்தால் ஆனது என தெறிந்து கொள்ளாவிடில் அது உயிருக்கே ஆபத்தாய் போய் விடும்.
- நாம் சமைக்கும் பாத்திரங்கள் எந்த பொருளால் அல்லது உலோகத்தால் ஆனது என தெறிந்து கொள்ளாவிடில் அது உயிருக்கே ஆபத்தாய் போய் விடும்.
(1 / 6)
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி குடித்தால் உடலுக்கு எவ்வளவு நல்லதோ அதே அளவு கெட்டது அந்தப் பாத்திரங்களை சமைக்க பயன்படுத்துவது. சமைக்கும் போது நாம் பயன்படுத்தும் உப்பு செம்போடு கலந்து நம் உயிருக்கே உலை வைத்துவிடும்.
(2 / 6)
பித்தளை பாத்திரங்கள் பெரும்பாலும் அடி கனமாக இருப்பதால் அதிக அளவு சமைக்கும் உணவுகளுக்கு இவை உதவுகின்றன. ஆனால், இவையும் உப்புடன் வினை புரிபவை தான். அதனால் பித்தளை பாத்திரங்களையும் மிக கவனமாக கையாள வேண்டும்.
(3 / 6)
பெரும்பாலான வீடுகளில் அலுமினியப் பாத்திரங்கள் தான் சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவை எந்த அளவு வெப்பத்தை விரைந்து கடத்தி சமையலுக்கு உதவுகிறதோ அந்த அளவு அமிலத்தன்மை உள்ள உணவுப் பொருட்களுடன் வினை புரிந்து உணவு மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கும்.
(4 / 6)
மண் பாத்திரங்கள் ஈரப்பதத்தையும், வெப்பத்தையும் தேவையான அளவு உணவில் கடத்துவதால் அவை உணவிலுள்ள ஊட்டச் சத்துகளை பாதுகாத்து தேவையான ஆற்றலைத் தருகிறது.
(5 / 6)
சமையலுக்கு பயன்படுத்த சிறந்த பாத்திரம் என்றால் அது எஃகு அல்லது எவர் சில்வர் பாத்திரம் தான். அவை கையாளுவதற்கு எளிதாக இருப்பதுடன் உடலுக்கும் தீங்கு விளைவிக்காமல் இருக்கும்.
மற்ற கேலரிக்கள்