Andra Peanut Podi : இந்த ஒரு பொடிய மட்டும் செஞ்சு வெச்சடுங்க! ஒரு மாசம் கவலைவேண்டாம்! சாதம், டிபஃன் இரண்டுக்கும் ஏற்றது!
Andra Special Peanut Podi : ஆந்திராவில் பருப்புப்பொடி மட்டுமல்ல, வேர்க்கடலைப் பொடியும் ஸ்பெஷல்தான் அதை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை – ஒரு கப் (தோல் உரித்தது)
பொட்டுக்கடரை – அரை கப்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
பூண்டு – 10 பல்
சீரகம் – 2 ஸ்பூன்
வர மிளகாய் – 10 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப அளவை மாற்றிக்கொள்ளலாம்)
தேங்காய் – அரை கப் (துருவியது)
கறிவேப்பிலை – 2 கொத்து
கல் உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்
கஷ்மீரி மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
செய்முறை
வேர்க்கடலை மற்றும் பொட்டுக்கடலை இரண்டையும் தனித்தனியாக ட்ரையாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடானவுடன், பூண்டு, சீரகம், வர மிளகாய், தேங்காய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் கறிவேப்பிலை போட்டு இறக்க வேண்டும்.
இவையனைத்தும் ஆறியவுடன், கல் உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து, ஆறவைத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் கஷ்மீரி மிளகாய் தூளை கலக்க வேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும். இதை சூடான சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.
நிலக்கடலையில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்
100 கிராம் கடலையில், 564 கலோரிகள், ஈரப்பதம் 6 சதவீதம், புரதச்சத்து 26 கிராம், கார்போஹைட்ரேட் 18.6 கிராம், கரையக்கூடிய சர்க்கரை 4.5 சதவீதம், நார்ச்சத்துக்கள் 2.1 சதவீதம், கொழுப்பு 47.5 கிராம், எண்ணெய் 48.2 சதவீதம், ஸ்டார்ச் 11.5 சதவீதம் உள்ளது.
கால்சியம் 69 மில்லி கிராம், இரும்புச்சத்து 2.1 மில்லிகிராம், பாஸ்பரஸ் 401 மில்லிகிராம், மெக்னீசியம் 168 மில்லிகிராம், வைட்டமின் பி 3 17.2 மில்லிகிராம், வைட்டமின் பி1 1.14 மில்லிகிராம் உள்ளது.
ஈசிமா உள்ளிட்ட பல சரும நோய்களை கடலை தீர்க்கிறது. இதில் ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அது சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்களில் இருந்து காக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்து, நமது உடலில் உள்ள கொலோஜென் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இதில் உள்ள ஆரோக்கியமான அன்சாச்சுரேடட் கொழுப்புகள், புரதம், நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், ஃபோலேட், தியாமின் மற்றும் வைட்டமின் பி6 ஆகியவை இதய ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன.
கடலை மூளைக்கு மிகவும் நல்லது. இதில் பாலி அன்சாச்சுரேடட் கொழுப்பு, மோனோ அன்சாச்சுரேடட் கொழுப்பு, வைட்டமின் பி3 போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை மூளையை பலப்படுத்த உதவுகிறது. அதன் மூலம் நினைவாற்றலை பெருகச் செய்கிறது.
கடலையில் உள்ள ஃபேட்டி ஆசிட்கள் ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, விறைப்புத்தன்மை குறைபாடு ஆகியவற்றுக்கு உதவுகிறது. ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்கள், இனப்பெருக்க செல்களின் தன்மையை அதிகரிக்கிறது.
பெண்களின் உடலில் மெக்னீசியச்சத்து குறைபாடு இருந்தாலும், அது கருவுறுதலை தடுக்கும். கடலையில் உள்ள ஃபோலேட்கள், கருத்தரிக்கும் முன்னரும், பின்னரும் நன்மை கொடுக்கிறது.
இது எனர்ஜி நிறைந்த ஒன்று என்பதால், இது அதிக நேரம் உங்களை திருப்தியாக வைக்கிறது. பசி மேலாண்மைக்கு உதவுகிறது. இதனால் தேவையற்ற ஸ்னாக்ஸ்கள் சாப்பிட்டு உங்கள் உடல் எடையை அதிகரிக்க வேண்டிய தேவையும் இல்லை. இதில் உள்ள புரதம் உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது.
கடலையில் டிரிட்டோஃபான் உள்ளது. இது செரோட்டினின் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்க வைக்க உதவும் அமினோ அமிலம் ஆகும். இது மனஉளைச்சலை போக்க உதவுகிறது. எனவே இதை கைப்பிடியளவு எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் செரோட்டினின் அளவை அதிகரித்து மனஉளைச்சலை போக்குகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த கடலையை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதற்கான வழியாக இந்த கடலைப்பொடியை உணவில் சேர்த்துக்கொள்வது உள்ளது. எனவே இந்த வேர்க்கடலைப்பொடியை செய்து பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்