Air Pollution : சூழல் பாதுகாப்பில் அரசின் அமைப்புகளை நம்ப முடியுமா? – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Air Pollution : சூழல் பாதுகாப்பில் அரசின் அமைப்புகளை நம்ப முடியுமா? – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி!

Air Pollution : சூழல் பாதுகாப்பில் அரசின் அமைப்புகளை நம்ப முடியுமா? – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி!

Priyadarshini R HT Tamil
May 31, 2024 02:50 PM IST

Air Pollution : சூழல் பாதுகாப்பில் அரசின் அமைப்புகளை நம்ப முடியுமா? என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Air Pollution : சூழல் பாதுகாப்பில் அரசின் அமைப்புகளை நம்ப முடியுமா? – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி!
Air Pollution : சூழல் பாதுகாப்பில் அரசின் அமைப்புகளை நம்ப முடியுமா? – சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி!

வீட்டுக்கு வெளியில் கரும்புகை சூழ்ந்துள்ளதால், வீட்டு ஜன்னல்களை அடைத்து, அடுப்பிற்குள் அமர்ந்தது இருப்பது போன்ற தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர்.

கரும்புகை

வீட்டின் வெளியே கரும்புகை சூழ்ந்துள்ளதால், சிறுவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பெரும் சிரமத்திற்கும், சுகாதார சீர்கேடுகளுக்கும் ஆளாகி வருகின்றனர்.

முட்டுக்காடு காயல் கரையில் கொட்டப்படும் கழிவுகள் உள்ள இடத்தை சென்று பார்த்தபோது, அது தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதையும், குப்பைகள் கொட்டப்படும் இடம் சட்டவிரோதமாக, முட்டுக்காடு பஞ்சாயத்தால் நிர்வகித்து வருவதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

பஞ்சாயத்துக்கு சொந்தமான டிராக்டர், அப்பகுதி முனிசிபல் திடக்கழிவுகளை சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த முட்டுக்காடு காயலில், திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளை மீறி, கொட்டுவதையும் உறுதிப்படுத்த முடிந்தது.

தேசிய பசுமை தீர்ப்பாயம்

2021ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயமும், வழக்குப்பதிந்து, முட்டுக்காடு காயலில் கழிவுகளை கொட்டக்கூடாது என பிறப்பித்த உத்தரவில், மேலும், திரவக் கழிவுகளை நீர்நிலைகளில் சட்டவிதிகளை மீறி கொட்டக்கூடாது என்றும் தெளிவாக இருந்தது.

உத்தரவு பிறப்பித்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், 2021ல் தற்காலிகமாக, சிலவற்றை உள்ளூர் பஞ்சாயத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தை திருப்திப்படுத்த நிறைவேற்றினாலும், தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது.

ஒரு மணி நேரத்தில் 20 லாரிகளில் (சில லாரிகளில் வாகன எண் கூட இல்லை) இருந்து சிகிச்சை அளிக்கப்படாத திரவக் கழிவுகள் (Raw Sewage), பட்டப்பகலில் கொட்டப்படுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

OMR சாலைக்கும், நீர்நிலைக்கும் இடையே மண்பாதை முட்டுக்காடு பஞ்சாயத்தால் அமைக்கப்பட்டு, அதன் வழியாக தினமும் 100 லாரிகளில் திட மற்றும் திரவக் கழிவுகள் நீர்நிலையில் கொட்டப்படுவதாக உள்ளூர்வாசிகள் ஆதாரங்களுடன் தெரிவிக்கின்றனர்.

முட்டுக்காடு பஞ்சாயத்து

முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரோ, மேற்சொன்னவை எதையும் மறுக்காமல், சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தபயனும் இல்லை எனக் கூறுகிறார்.

உள்ளூர் முட்டுக்காடு பஞ்சாயத்தில் கழிவுகளை சேகரிக்க முறையான இடம் இல்லாததால், நீர்நிலையின் அருகே தற்காலிகமாக கழிவுகள் கொட்டப்பட்டு, பின்னர் அவை மாதம் ஒருமுறை செங்கல்பட்டில் உள்ள கழிவுக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுவதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

(செங்கல்பட்டு கழிவுகளும் சிகிச்சை அளிக்கப்படாமல் கொளவாய் ஏரியில் கொட்டப்படுகின்றது)

முட்டுக்காடு காயலில் கொட்டப்பட்ட கழிவுகளில் தீப்பற்றி எரிந்ததற்கான காரணம் கண்டறியப்படவில்லை. அதை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கழுகுப்பார்வையில் முட்டுக்காடு காயலை பார்க்கும்போது, காயலில் கலக்கும் கழிவுகள் மிக அதிகமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீர்நிலையின் பெரும்பரப்பு கழிவுநீர் கலப்பால் கருப்பு நிறமாக மாறியுள்ளது. முட்டுக்காடு படகுக்குழாம் வாயிலாகவும், கழிவுநீர் அங்கு கலக்கப்படுகிறது. அங்குதான் சென்னையின் முதல் மிதக்கும் உணவகம் வரவுள்ளது.

அங்குள்ள மாசுபட்ட நீர் கோவளம் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கப்போகிறது. இதனால் நீலக்கொடி குறியீடு பெற்ற கோவளம் கடற்கரையின் நீர் பாழாகப் போகிறது. இந்த நிலையை பார்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் இதுவரை தனது உத்தரவு மீறப்பட்டதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

எனில், சூழல் பாதுகாப்பில், அரசு அமைப்புகளை பொதுமக்கள் நம்பும்படியான கள உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.

அரசுகள் கார்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகின்றன. சாதாரண மக்களுக்காக அல்ல என்றும், சூழல்பாதுகாப்பில் அரசை நம்பமுடியாத சூழல் இருப்பதே நடைமுறை உண்மை என்பதை இந்த உதாரணத்தின் வாயிலாக மக்கள் புரிந்து கொண்டால் நல்லது.

நன்றி – மருத்துவர். புகழேந்தி.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.