Janhvi Kapoor: அம்மாவுக்கு மிகவும் பிடித்த இடம்! மும்பாத்தம்மன் கோயிலில் சாமி தரிசனம் - ஜான்வி கபூர் எமோஷனல்
கவர்ச்சியால் ரசிகர்களின் கனவு கன்னியாக உலா வரும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தீவிர கடவுள் பக்தி உள்ளவராகவும் இருந்து வருகிறார். சென்னை முப்பாத்தம்மன் கோயிலில் முதல் முறையாக அவர் சாமி தரிசனம் செய்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகியாக இருப்பவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவரை கோலிவுட்டினர் சின்ன மயிலு என்று செல்லமாக அழைக்கிறார்கள். பிறந்த வளர்ந்தது மும்பையாக இருந்தாலும் இவருக்கு தனது தாயார் பிறந்த தமிழ்நாடு மீது தனி பாசம் உண்டு என்றே சொல்லலாம்.
அவ்வப்போது சென்னை விசிட் அடிக்கும் ஜான்வி கபூர் அங்கு ரிலாக்ஸாக நேரத்தை செலவிட்டு செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். சென்னையில் ஜான்வி கபூர் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூருக்கு சொந்தமாக ஆடம்பர பங்களா ஒன்று உள்ளது. அதைக்கூட சமீபத்தில் பிரபல டிராவல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பொதுமக்களும் வாடைகை கொடுத்து தங்கும் விதமாக வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முப்பாத்தம்மன் கோயிலில் சாமி தரிசனம்
ஐபிஎல் இறுதிப்போட்டியை காண்பதற்காக சென்னை வருகை புரிந்த ஜான்வி கபூர், இங்குள்ள முப்பாத்தம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இதையடுத்து அதை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் ஜான்வி, சென்னையில் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான இடம் என எமோஷனையும் வெளிப்படுத்தியுள்ளார்.
