தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: மலைகளுக்கு நடுவில் அமர்ந்த சிவன்.. தோஷத்தில் சிக்கிய மன்னன்.. கரிகாலனால் கரையில் அமர்ந்த வில்லீஸ்வரன்

HT Yatra: மலைகளுக்கு நடுவில் அமர்ந்த சிவன்.. தோஷத்தில் சிக்கிய மன்னன்.. கரிகாலனால் கரையில் அமர்ந்த வில்லீஸ்வரன்

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 18, 2024 06:30 AM IST

தமிழ்நாட்டில் இருந்த அரசர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையாக எத்தனையோ கோயில்கள் நிலைத்து நின்று வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் இடிகரை வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில்.

இடிகரை வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில்
இடிகரை வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில்

குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்த அரசர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையாக எத்தனையோ கோயில்கள் நிலைத்து நின்று வருகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோவில்களில் ஒன்றுதான் இடிகரை வில்லீஸ்வரமுடையார் திருக்கோயில்.

இந்த திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிவபெருமான் கோவில்களில் நடத்தப்படும் அத்தனை வகையான வைபவங்களும் இங்கேயும் நடத்தப்படுகிறது.

தல சிறப்பு

 

இந்த கோயிலில் ஆதிகாலத்தில் சிறந்த பாதை அமைக்கப்பட்டிருந்ததாகவும் போர்க்காலகட்டத்தில் அரசர்கள் தெரியாமல் கோயில்களுக்கு வந்து வழிபாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இடிக்கரை வில்லீஸ்வரன் உடையார் கோயில். வட மதுரையில் அமைந்துள்ள விருத்தீஸ்வரர் திருக்கோயில் கோயில்பாளையத்தில் அமைந்துள்ள கால காலேஸ்வரர், திருக்கோயில் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது மிகப்பெரிய சிறப்பாகும்.

தல வரலாறு

 

இந்த திருக்கோயில் 12ஆம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஆதாரமாக கருவறையின் வெளிப்புறத்தில் உள்ள சுற்றுச் சுவரில் கல்வெட்டுகளில் விவரம் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குப் பிறகு வந்த மன்னர்கள் திருப்பணி செய்து இந்த கோயிலை மேலும் சிறப்புத்துள்ளனர்.

பழமையான கோயில்களில் இந்த கோயிலுக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடுகரை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இந்த வில்லீஸ்வரன் உடையார் திருக்கோயில். மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து கிழக்கு நோக்கி வரக்கூடிய இரண்டு பள்ளங்களில் கரைப்பகுதியில் அமைந்துள்ள ஊர் தான் இருகரை. அதற்குப் பிறகு அதன் பெயர் மருவி இடிகரை என அழைக்கப்பட்டது.

மலை மீது பெய்யப்படும் மழை நீர் இங்கு இருக்கக்கூடிய பள்ளங்களில் ஓடி திருப்பூரில் இருக்கக்கூடிய நொய்யல் ஆற்றுடன் கலக்கின்றன. கிபி 9 முதல் கிபி 14 வரை பொற்காலமாக விளங்கியதாக கூறப்படுகிறது. அப்போது மாமன்னன் கரிகாலன் கொங்கு மண்டலத்தை ஆண்டு வந்துள்ளார். கல்லணை கட்டி சாதனை படைத்த கரிகால மன்னன். 36 சிவன் கோயில்களை கட்ட முடிவு எடுத்துள்ளார்.

உங்க பகுதியில் சுற்றுப்பயணம் வந்த கரிகால மன்னன் இடிகரை பகுதியில் விஜயம் செய்துள்ளார். அப்போது அங்கு இருந்த வேடுவப் பெண் குறத்தி ஒருவரிடம் கரிகால சோழன் குறி கேட்டுள்ளார். அப்போது உங்களது நாடு செல்வ செழிப்புடன் இருக்க வேண்டும் என்றால் சிவன் கோயில்களை கட்ட வேண்டும் மேலும் புத்திர தோஷம் நீங்க வேண்டும் என்றால் சிவபெருமானை வணங்கி கோயில் கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.

அதனை ஏற்று இந்த வில்லீஸ்வரமுடையார் திருக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. வில்லீஸ்வரர் என அழைக்கப்பட்ட சிவபெருமான் தற்போது வில்லிஸ்வர முடையார் என அழைக்க பெற்று வருகிறார்.

அமைவிடம்

 

இந்த திருக்கோயில் கோயமுத்தூர் மாவட்டத்தில் இடிகரை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இந்த கோயிலுக்கு செல்ல வாகன வசதிகள் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel