விரைவில் விற்பனைக்கு வருகிறது கியர்கள் கொண்ட ஏரா எலெக்டரிக் பைக் - இந்தியா முழுவதும் 25ஆயிரம் கி.மீ பயணம் தொடக்கம்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  விரைவில் விற்பனைக்கு வருகிறது கியர்கள் கொண்ட ஏரா எலெக்டரிக் பைக் - இந்தியா முழுவதும் 25ஆயிரம் கி.மீ பயணம் தொடக்கம்

விரைவில் விற்பனைக்கு வருகிறது கியர்கள் கொண்ட ஏரா எலெக்டரிக் பைக் - இந்தியா முழுவதும் 25ஆயிரம் கி.மீ பயணம் தொடக்கம்

Marimuthu M HT Tamil
Oct 05, 2024 12:26 PM IST

Aera Electric Bike: விரைவில் விற்பனைக்கு வருகிறது கியர்கள் கொண்ட ஏரா எலெக்டரிக் பைக் மற்றும் இந்தியா முழுவதும் 25ஆயிரம் கி.மீ பயணத்தைத் தொடங்கிய ஏரா எலெக்ட்ரிக் பைக் நிறுவனம் பற்றி அறிவோம்.

விரைவில் விற்பனைக்கு வருகிறது கியர்கள் கொண்ட ஏரா எலெக்டரிக் பைக் - இந்தியா முழுவதும் 25ஆயிரம் கி.மீ பயணம் தொடக்கம்
விரைவில் விற்பனைக்கு வருகிறது கியர்கள் கொண்ட ஏரா எலெக்டரிக் பைக் - இந்தியா முழுவதும் 25ஆயிரம் கி.மீ பயணம் தொடக்கம்

ஏனெனில், ஏரா மின்சார மோட்டார் பிராண்ட் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அந்த நிலையில் இந்த மின்சார இரு சக்கர வாகன ஸ்டார்ட்அப் நிறுவனம், குஜராத்தில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து இந்தியாவின் 25 மாநிலங்களில் 25,000 கி.மீ சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு சர்தார் வல்லபாய் படேலின் ஒற்றுமை சிலை முன் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், ஏரா மின்சார மோட்டாரின் சவாரி "சுற்றுச்சூழலுக்கு உதவியான போக்குவரத்து" என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேட்டர் ஏராதன் பாரத் என்றால் என்ன?

காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கான அவசரத் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலையான விருப்பங்களை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்தவும் ஏராதன் பாரத் இயக்கம் உரிய விழிப்புணர்வைத் தருகிறது. சுற்றுச்சூழல் அமைப்புகளின் மாற்றம், உயரும் வெப்பநிலை மற்றும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் பல்லுயிர் இழப்பு உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகளை முன்னிலைப்படுத்துவதை மேட்டர் ஏராதன் பாரத் சவாரி நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த சவாரி உள்ளூர்வாசிகளையும் மற்றும் நிலையான மாற்றங்களை விரும்புபவர்களையும், அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனங்களையும் கொண்டாடும் என்று நிறுவனம் கூறியது.

இதுதொடர்பாக மேட்டரின் நிறுவனர்கள் கூறியதாவது, "மேட்டரில், பெட்ரோலிய வாகனங்களில் இருந்து மாறுவதற்கான ஊக்கியாக இருப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். பூமியைப் பாதுகாக்கும் அதே நேரத்தில் வாழ்க்கையை வளப்படுத்தும் போக்குவரத்தை வழங்குவதும், வருத்தப்படாத மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்குவதும் எங்கள் நோக்கம் ஆகும். தினசரி பயணங்களாக இருந்தாலும் சரி, புதிய எல்லைகளை நோக்கிய சாகசங்களாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு சவாரியும் சுதந்திர உணர்வைத் தூண்ட வேண்டும். எதிர்காலத்தைப் பற்றிய குற்ற உணர்வு இல்லாமல் அது இருக்க வேண்டும்" என்று மேட்டரின் நிறுவனர்கள் தெரிவித்தனர்.

மேட்டர் ஏரா டெலிவரிஸ்

மேட்டர் அக்டோபர் 11, 2024 அன்று அகமதாபாத்தில் தனது முதல் விற்பனை மற்றும் விநியோகத்தைத் தொடங்கவுள்ளது. மேலும் டெலிவரிகள் விரைவில் தொடங்கும். கியர்பாக்ஸ் கொண்ட முதல் மின்சார மோட்டார் சைக்கிள் மேட்டர் ஏரா ஆகும். முன்னதாக ஏப்ரல் மாதத்தில் ஏரா வாகனத்தை டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அது பின்னர் தசரா மற்றும் தீபாவளியை ஒட்டிய பண்டிகை காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. புதிய ஏரா கியர் பாக்ஸ் கொண்ட மின்சார பைக்குகள் இரண்டு வகைகளில் கிடைக்கிறது. ஒன்று 5000 மற்றும் இன்னொன்று 5000+. ஏரா 5000-த்தின் விலை ரூ .1.74 லட்சம் ஆகும். இன்னொரு ரக வாகனமான 5000+ ரூ.1.84 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும்.

இரண்டு ரக மின்சார மோட்டார் வகைகளும் 10 kW (13.4 bhp) மின்சார மோட்டாரைப் பெற்றுள்ளன. இது 6 வினாடிகளில் 0-60 kmph வேகத்தை எட்டும் என்று உறுதியளிக்கிறது. இந்த பைக் ஒருமுறை சார்ஜ் செய்தால் 125 கி.மீ. தூரம் வரை பயணிக்கும். மேலும் வரைபடங்களைச் சுட்டிக்காட்டும் நேவிகேஷன், மியூசிக் மற்றும் கால் கனெக்டிவிட்டியுடன் கூடிய 7 அங்குல தொடுதிரை உள்ளிட்ட அம்சங்களுடன் மேட்டர் ஏரா பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு கி.மீ.க்கு வெறும் 25 பைசா என்ற குறைந்த இயக்க செலவையும் உறுதியளிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏரா இ-மோட்டார் சைக்கிள் வராமல் பண்டிகைக் காலத்தில் விற்பனைக்கு வருவது அதன் விற்பனையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

விரைவில் விற்பனைக்கு வருகிறது கியர்கள் கொண்ட ஏரா எலெக்டரிக் பைக் - இந்தியா முழுவதும் 25ஆயிரம் கி.மீ பயணம் தொடக்கம்
விரைவில் விற்பனைக்கு வருகிறது கியர்கள் கொண்ட ஏரா எலெக்டரிக் பைக் - இந்தியா முழுவதும் 25ஆயிரம் கி.மீ பயணம் தொடக்கம் (Tej Patel for HT Auto)
Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.