Terrace Gardening:மாறி வரும் காலநிலை! மாடித்தோட்டத்தின் அவசியம் என்ன ?
Terrace Gardening: சென்னை போன்ற பெரு நகரங்களில் காய்கறிகள் எல்லா நேரங்களிலும் கிடைக்கிறன. ஆனால் இது சுத்தமான கெமிக்கல் கலக்காத காய்கறிகளா என பல சந்தேகங்கள் உள்ளன.
சென்னை போன்ற பெரு நகரங்களில் காய்கறிகள் எல்லா நேரங்களிலும் கிடைக்கிறன. ஆனால் இது சுத்தமான கெமிக்கல் கலக்காத காய்கறிகளா என பல சந்தேகங்கள் உள்ளன. இதில் இருந்து விடுபட்டு சுத்தமான காய்கறிகளை பயன்படுத்த ஒரே வழி உங்களது மாடியில் தோட்டம் அமைப்பது தான். இவ்வாறு தோட்டம் அமைக்க சில வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது. அவை என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
மாடித் தோட்டம்
முதலில் உங்கள் தோட்டத்தை உருவாக்க ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சவாலானது. ஏனெனில் பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் கான்கிரீட் கட்டடங்கள், சாலைகள், சந்தைகள் என நெருக்கடியான பகுதிகள் உள்ளன. இருப்பினும் மாடியில் தோட்டம் அமைத்து விட முடியும்.
உங்கள் வீட்டு மாடி பெரியது அல்லது சிறியது என்பது முக்கியமல்ல, சரியான திட்டமிடல் மற்றும் சிறிய முயற்சிகள் மூலம் உங்கள் மொட்டை மாடியை தோட்டமாக மாற்றலாம். மாடித் தோட்டம் கட்ட நிறைய செலவாகும் என்பது பொதுவான கருத்து ஆகும். இருப்பினும் உங்கள் மொட்டை மாடியை புதுப்பிப்பதற்கு பல வழிகள் உள்ளன, இவை அனைத்தும் நீங்கள் செய்ய விரும்பும் நேரம் மற்றும் பண முதலீட்டைப் பொறுத்தது.
இயற்கையான காய்கறிகள்
நீங்கள் மாடித் தோட்டம் அமைக்கும் பட்சத்தில் அத்தோட்டத்தில் இருந்து தினமும் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை புதிதாகவும், சுத்தமாகவும் பெற முடியும். இதுவே மாடித் தோட்டம் அமைக்க சிறந்த பலன்களை தரும். ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்கள் உணவு சந்தைகளில் இருந்து நாம் வாங்குவதை விட அதிக சத்தானவை மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தவை.
சந்தைகள் மற்றும் மளிகைக் கடைகளில் இருந்து நாம் பெறும் உணவுகள் பொதுவாக ரசாயன உரங்களின் உதவியுடன் வளர்க்கப்படுகின்றன. இந்த இரசாயனம் பின்னர் உங்கள் உணவுகளின் வழியே ஊடுருவி, இறுதியில் உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும்.
குளிர்ச்சியான சூழ்நிலை
மாடித் தோட்டம் கட்டுவது உங்கள் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது, வெப்பமண்டல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது சிறந்தது. உங்கள் மொட்டை மாடியில் வளரும் அனைத்து செடிகளும் குளிர்ந்த சூழலை உருவாக்கி அந்த இடத்தின் வெப்பநிலையை குறைக்கும்.
உங்கள் வீட்டில் தோட்டம் அமைப்பதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு உதவும். மேலும் நீங்கள் வளர்க்கும் தாவரங்கள் காற்றின் தரத்தை மேம்படுத்தும். இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படும் விவசாயம் மண்ணின் தரத்தை மோசமாக்குகிறது மற்றும் காற்று மற்றும் நீரை மாசுபடுத்துகிறது.
மகிழ்ச்சியான மன நிலை
உங்களது வீட்டில் தோட்டம் அமைத்த பின்னர், அதனை பராமரிக்க செய்யும் வேலைகள் எப்பொழுதும் ஒரு சிறந்த பயிற்சியாகும். உங்கள் தோட்டத்தை பராமரிப்பதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நீங்கள் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும். உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளை பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது மற்றும் பிற செயல்பாடுகள் உங்களை உடல் ரீதியாக சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வீடுகளில் தோட்டம் அமைப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நல்ல பலன்களை வழங்குகிறது. இதன் காரணமாகவே மாடித் தோட்டங்கள் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் ஒரு செயல்பாடாக உள்ளது.
டாபிக்ஸ்